கர்ப்பிணிகளுக்கு ரூ.11,000.. அரசின் இந்த திட்டத்தில் சேருவது எப்படி? முழு விவரம் இதோ!

PM Matru Vandana Yojana Scheme: மத்திய அரசு கர்ப்பிணிகளுக்கு ரூ.11,000 வழங்குகிறது. இந்த திட்டத்தில் சேருவது எப்படி என்பது குறித்து பார்ப்போம்.

Written by - Umabarkavi K | Last Updated : Nov 8, 2025, 07:14 PM IST
  • பெண்களுக்கு ரூ.11,000
  • மத்திய அரசின் இந்த திட்டத்தில் உடனே சேருங்கள்
  • முழு விவரம்
கர்ப்பிணிகளுக்கு ரூ.11,000.. அரசின் இந்த திட்டத்தில் சேருவது எப்படி? முழு விவரம் இதோ!

PMMVY Scheme For Woman: நாட்டில் உள்ள பெண்களுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவர்கள் பொருளாதார ரீதியாக வலிமைப்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் மூலம் அவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அப்படியொரு திட்டம் தான், பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம். இந்த திட்டம் மூலம், கர்ப்பிணிகளுக்கு மாதம் ரூ.11,000 வழங்கப்பட்டு வருகிறது. 

Add Zee News as a Preferred Source

PM Matru Vandana Yojana திட்டம் என்றால் என்ன?

பிரதம மந்திரி மாத்ரு வந்தனா திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. இந்த திட்டம் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும, கர்ப்பிணிகளுக்கு  நிதி உதவி வழங்குவதும் இந்த திட்டத்தின் நோக்கமாகும். இந்த திட்டத்தில் அளிக்கப்படும் உதவித்தொகை மூலம், கர்ப்பம் மற்றும் பிரசவத்தின் போது பெண்கள் அத்தியாவசிய ஊட்டச்சத்து மற்றும் சுகாதார சேவைகளை பெற முடியும். கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதிப் பாதுகாப்பை இந்த திட்டம் வழங்குகிறது.

PM Matru Vandana Yojana திட்டத்தில் சேருவதற்கான தகுதிகள் 

இந்த திட்டத்தில் பயன்பெற பட்டியல் பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். பிபிஎல் ரேஷன் கார்டு வைத்திருக்கும் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.  ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா பயன்பெறும் பெண்கள், ஆண்டுக்கு ரூ.8 லட்சத்திற்கு குறைவான குடும்ப வருமானம் கொண்ட பெண்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் மத்திய அரசு, மாநில அரசு ஊழியர்கள் இந்த திட்டத்தில் சேர முடியாது.

PM Matru Vandana Yojana திட்டத்தின் உதவித் தொகை

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் மூலம் கர்ப்பிணிகளுக்கு ரூ.11,000 வழங்கப்படுகிறது.  இந்த தொகை நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு அரசு அனுப்புகிறது.  முதல்முறையாக தாயாகும் பெண்களுக்கு  இரண்டு தவணைகளில் ரூ.5,000 கிடைக்கும். இரண்டாவது குழந்தைக்கு ரூ.6,000 வழங்கப்படும்.  இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக இருந்தால், ஒரு தவணையில் ரூ.6,000 பெண்களுக்கு வழங்கப்படும். ண்டாவது குழந்தைக்கு சலுகைகளைப் பெறுவதற்கு, கர்ப்ப காலத்தில் பதிவு செய்வது கட்டாயமாகும். இது பிறப்பின் போது பாலின விகிதத்தை மேம்படுத்தவும்,  சிசுக் கொலையை தடுக்கவும் உதவும். 

PM Matru Vandana Yojana திட்டத்தில் சேருவது எப்படி?

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா  திட்டத்தில் சேருவதற்கு பெண்கள் PMMVY.WCD.GOV.IN என்ற இணையதளத்தில் உள்ள ஆன்லைன் படிவத்தை நிரப்ப வேண்டும்.  இந்த திட்டத்தில் தகுதியுடைய பெண்கள், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான தேவையான ஆவணங்களை அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும்

PM Matru Vandana Yojana திட்டத்தில் சேர தேவையான ஆவணங்கள்

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா  திட்டத்தில் சேருவதற்கு தகுதியுள்ள பெண்கள் அங்கன்வாடி மையத்தில் (AWC) திட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்வதற்கு, பயனாளி பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப் படிவம் 1-A-ஐ அனைத்து வகையிலும் பூர்த்தி செய்து, தொடர்புடைய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.  படிவத்தை சமர்ப்பிக்கும் போது, ​​பயனாளி தனது எழுத்துப்பூர்வ ஒப்புதல், அவரது/கணவர்/குடும்ப உறுப்பினரின் மொபைல் எண் மற்றும் அவரது வங்கி/தபால் அலுவலக கணக்கு விவரங்களுடன் ஆதார் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.  மேலும், பெண்ணின் ஆதார், பான் கார்டு,  கல்விச் சான்றிதழ், குடும்ப வறுமான சான்றிதழ் ஆகியவற்றையும் சமர்ப்பிக்க வேண்டும். 

மேலும் படிக்க: EPS Pension: 10 ஆண்டு சர்வீஸ், அடிப்படை ஊதியம் ரூ.15,000... ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா?

 

மேலும் படிக்க: இந்திய ரயில்வே புதிய விதிமுறை: ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News