)
Pensioners Latest News: ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர் நலத்துறை (DoPPW) விரைவில் நாடு முழுவதும் டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழ் (DLC) பிரச்சாரம் 4.0 ஐத் தொடங்க உள்ளது. இந்தப் பிரச்சாரம் நவம்பர் 1, 2025 முதல் நவம்பர் 30, 2025 வரை நடைபெறும். பொதுவாகவே ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் ஓய்வூதியதாரர்களுக்கான முக்கியமான மாதமாக கருதப்படுகின்றது. ஏனெனில், இந்த மாதத்தில் ஓய்வூதியதாரர்கள் மிக முக்கியமான ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கும் செயல்முறை நடக்கின்றது.
இந்த ஆண்டு நாட்டின் 1,600 மாவட்டங்கள் மற்றும் துணைப் பிரிவுகளில் வாழ்க்கைச் சான்றிதழ் பிரச்சாரம் 4.0 -க்கான முகாம்கள் அமைக்கப்படும். இதன் சிறப்பு என்னவென்றால், முதியோர் மற்றும் ஊனமுற்ற ஓய்வூதியதாரர்களுக்கு வீடு வீடாக சென்று இந்த வசதி வழங்கப்படும். ஓய்வூதியம் வழங்கும் வங்கிகளும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியும் (IPPB) இந்தப் பணியில் இணைந்து உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
80 வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர்கள் அக்டோபர் 2025 முதலே தங்கள் வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிக்கலாம். இதன் மூலம் அவர்களின் ஓய்வூதியத்தில் எந்த இடையூறும் ஏற்படாமல் தொடர்ந்து கிடைத்துக்கொண்டே இருக்கும். ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர் நலத்துறையின் அலுவலக குறிப்பாணையின் (OM) படி, வங்கிகள் அக்டோபர் 1, 2025 முதல் தங்கள் கிளைகளில் சூப்பர் சீனியர் ஓய்வூதியதாரர்களுக்கான டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழின் வசதியைத் தொடங்க வேண்டும்.
முக அங்கீகாரம் மூலம் வாழ்க்கைச் சான்றிதழை எவ்வாறு சமர்ப்பிப்பது?
இப்போது ஓய்வூதியதாரர்கள் வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிப்பது இன்னும் எளிதாகிவிட்டது. முக அங்கீகார தொழில்நுட்பத்தின் மூலம், அவர்கள் வீட்டில் இருந்தபடியே இந்த பண்யைச் செய்யலாம். இதற்கு சில எளிய செயல்முறைகளை பின்பற்ற வேண்டும்.
ஸ்டெப் 1: செயலியைப் பதிவிறக்கம் செய்யவும்
முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் கூகிள் பிளே ஸ்டோருக்குச் சென்று அங்கு “Aadhaar Face RD Application” என்று தேடவும். இது யுஐடிஏஐ-யால் உருவாக்கப்பட்டது. இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்து மொபைல் போனில் நிறுவவும். இந்த செயலி பின்னணியில் செயல்படுகிறது. இது 'ஜீவன் பிரமான் ஆப்'-க்கு அவசியம்.
ஸ்டெப் 2: 'Jeevan Pramaan App'-ஐப் பதிவிறக்கவும்
ஆதார் ஃபேஸ் ஆர்டி செயலியை நிறுவிய பின், கூகிள் பிளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோரிலிருந்து 'ஜீவன் பிரமான் ஆப்'-ஐப் பதிவிறக்கம் செய்யவும். இந்த செயலி ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிப்பதற்கான முக்கிய செயலியாகும்.
ஸ்டெப் 3: ஆபரேட்டர் அங்கீகாரம்
'ஜீவன் பிரமான் ஆப்'-ஐத் திறக்கவும். 'Operator Authentication’ ஸ்க்ரீன் தெரியும். இதில் பின்வரும் தகவல்களை நிரப்பவும்:
- ஆதார் செக்பாக்ஸைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் ஆதார் எண்ணை உள்ளிடவும்.
- மொபைல் எண்ணை உள்ளிடவும்.
- மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.
- சப்மிட் பொத்தானை அழுத்தவும்.
ஸ்டெப் 4: OTP ஐ உள்ளிடவும்
சமர்ப்பித்த பிறகு, உங்கள் மொபைல் மற்றும் மின்னஞ்சலுக்கு ஒரு OTP வரும். இந்த OTP ஐ செயலியில் உள்ளிட்டு அதை சமர்ப்பிக்கவும்.
ஸ்டெப் 5: முக ஸ்கேனுக்கான செயல்முறை
OTP ஐ உள்ளிட்ட பிறகு, ஒரு புதிய திரை திறக்கும். இங்கே நீங்கள் ஆதார் படி உங்கள் பெயரை உள்ளிட வேண்டும். தேர்வுப் பெட்டியைக் கிளிக் செய்து "ஸ்கேன்" என்பதைத் தேர்ந்தெடுக்கவும். முகத்தை ஸ்கேன் செய்ய செயலி அனுமதி கேட்கும். "ஆம்" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 6: முக ஸ்கேன்
செயலி முக ஸ்கேனுக்கான சில வழிமுறைகளைக் காண்பிக்கும். அவற்றை கவனமாகப் படிக்க வேண்டும். பின்னர் “I am aware of this” என்னும் தேர்வுப்பெட்டியைக் கிளிக் செய்து “Proceed” பொத்தானை அழுத்தவும். இதற்குப் பிறகு செயலி உங்கள் முகத்தை ஸ்கேன் செய்யும்.
ஸ்டெப் 7: ஓய்வூதியதாரர் தகவல்
முக ஸ்கேனுக்குப் பிறகு, ஓய்வூதியதாரர் அங்கீகாரத் திரை திறக்கும். இந்தத் தகவல்களை இங்கே நிரப்பவும்:
- ஆதார் படி முழுப் பெயர்.
- ஓய்வூதிய வகை.
- அனுமதி வழங்கும் அதிகாரம்.
- நிறுவனத்தின் பெயர்.
- PPO எண்.
- ஓய்வூதிய கணக்கு எண்.
அனைத்து அறிவிப்புகளையும் கிளிக் செய்து 'சப்மிட்' பொத்தானை அழுத்தவும்.
ஸ்டெப் 8: இறுதி ஸ்கேன் மற்றும் சமர்ப்பிப்பு
சமர்ப்பித்த பிறகு, ஒரு திரை திறக்கும். அங்கு மீண்டும் முக ஸ்கேன் செய்ய ஒப்புதல் அளிக்க வேண்டும். "ஸ்கேன்" என்பதைக் கிளிக் செய்யவும். ஸ்கேன் முடிந்ததும், டிஜிட்டல் ஆயுள் சான்றிதழின் விவரங்கள் உங்கள் திரையில் தோன்றும். அதில் பிரமான் ஐடி மற்றும் பிபிஓ எண் இருக்கும்.
DLC: சான்றிதழைப் பதிவிறக்கம் செய்யவும்
சான்றிதழைப் பதிவிறக்க, ஜீவன் பிரமாண் வலைத்தளத்திற்குச் செல்லவும். அங்கு லாக் இன் செய்து உங்கள் பிரமான் ஐடியை உள்ளிடவும். உங்கள் சான்றிதழ் பதிவிறக்கம் செய்யப்படும்.
- ஆபரேட்டர் அங்கீகாரம் ஒரு முறை மட்டுமே செய்யப்பட வேண்டும்.
- ஓய்வூதியதாரர் தானே ஆபரேட்டராக இருக்க முடியும்.
- ஒரு ஆபரேட்டர் பல ஓய்வூதியதாரர்களின் டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழ்களை உருவாக்க முடியும்.
இந்த பிரச்சாரம் ஓய்வூதியதாரர்கள் ஆயுள் சான்றிதழ்களைச் சமர்ப்பிப்பதை மிகவும் எளிதாக்கும். இந்த வசதி குறிப்பாக முதியவர்கள் மற்றும் ஊனமுற்றோருக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ