)
PF Transfer Rules: தனியார் துறையில் பணிபிரியும் நபரா நீங்கள்? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக முக்கியமானதாக இருக்கும். தனியார் வேலைகளில் இருப்பவர்கள் வேலை மாறும் போதெல்லாம், அவர்கள் தங்கள் பழைய PF கணக்கை புதிய நிறுவனத்திற்கு மாற்ற வேண்டும். சில நிறுவனங்கள் UAN எண்ணைப் பெற்று நேரடியாக மாற்றுகின்றன. ஆனால் பல நிறுவனங்கள் ஊழியர்களிடமே இபிஎஃப் கணக்கை மாற்றச் சொல்கிறார்கள்.
பல ஊழியர்களுக்கு PF கணக்கை எப்படி மாற்றுவது என்பதில் குழப்பம் இருக்கின்றது. வேலை மாறும்போது இபிஎஃப் கணக்கை பழைய நிறுவனத்திலிருந்து புதிய கணக்கிற்கு எப்படி மாற்றுவது என இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
PF கணக்கை மாற்றுவதன் மூலம், அனைத்து உறுப்பினர் ஐடிகளும் ஒரே இடத்தில் ஒன்றாக வருகின்றன. உங்கள் ஓய்வூதிய சேமிப்பை ஒருங்கிணைப்பதற்கு உங்கள் PF கணக்கை மாற்றுவது அவசியம் என கூறப்படுகின்றது. உங்களிடம் ஒரு யுனிவர்சல் கணக்கு எண் (UAN) இருக்கலாம், ஆனால் ஒவ்வொரு நிறுவனமும் வெவ்வேறு உறுப்பினர் ஐடிகளை உருவாக்கலாம். இது உங்கள் சேமிப்புகளையும் அவற்றில் ஈட்டப்படும் வட்டியையும் கண்காணிப்பதை கடினமாக்கும். உங்கள் PF ஐ மாற்றுவது அனைத்து உறுப்பினர் ஐடிகளையும் ஒன்றாகக் கொண்டுவருகிறது, இது நிர்வாகத்தை எளிதாக்குகிறது.
- UAN என்பது உங்கள் தனித்துவமான PF கணக்கு எண். இது பணியாளர்கள் அனைவருக்கும் கட்டாயமாகும்.
- ஆதார் அட்டை, PAN அட்டை அல்லது வங்கி கணக்கு விவரங்கள். இந்த ஆவணங்கள் உங்கள் UAN உடன் இணைக்கப்பட வேண்டும்.
- பழைய மற்றும் புதிய நிறுவனத்தின் நிறுவன எண் மற்றும் PF கணக்கு எண் தேவைப்படும்.
- படிவம் 13 தேவைப்படும். இது பரிமாற்றக் கோரிக்கைப் படிவம். அதை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும்.
- முதலில், EPFO-வின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் சென்று உங்கள் UAN மற்றும் கடவுச்சொல்லுடன் லாக் இன் செய்யவும்.
- ஆன்லைன் சேவைகள் என்பதைக் கிளிக் செய்து, 'One Member-One EPF Account (Transfer Request)' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- உங்கள் தனிப்பட்ட தகவலைச் சரிபார்த்து, உங்கள் பழைய மற்றும் புதிய நிறுவனத்தின் விவரங்களை நிரப்பவும்.
- Get Details என்பதைக் கிளிக் செய்யவும். இது உங்கள் பழைய PF கணக்கின் விவரங்களைக் காண்பிக்கும்.
- க்ளெய்ம் படிவத்தைச் சரிபார்க்க டிஜிட்டல் கையொப்பம் (DSC) கொண்ட பழைய அல்லது புதிய நிறுவனத்தைத் தேர்வுசெய்யவும்.
- இதற்குப் பிறகு நீங்கள் உறுப்பினர் ஐடி அல்லது UAN ஐ உள்ளிட வேண்டியிருக்கும்.
- Get OTP என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் UAN உடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.
- அதை உள்ளிட்டு சமர்ப்பிக்கவும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ