மாநில அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு மாஸ் அறிவிப்புகள்: எகிறப்போகும் வருமானம்

State Government Employees DA Hike: தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஏப்ரல் 28 ஆம் தேதி மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இவற்றை பற்றி விரிவாக காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 2, 2025, 12:34 PM IST
  • தமிழ்நாடு மாநில அரசு ஊழியர்களுக்கு கிடைத்த ஜாக்பாட்
  • அதிகரித்த பண்டிகை முன்பணம்
  • ஓய்வூதியதாரர்களுக்கும் பரிசு கிடைக்கும்.
மாநில அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு மாஸ் அறிவிப்புகள்:  எகிறப்போகும் வருமானம்

State Government Employees DA Hike News: தமிழ்நாட்டில் உள்ள லட்சக்கணக்கான மாநில அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி. மத்திய அரசு ஜனவரி 2025 -க்கான டிஏ உயர்வாக, அகவிலைப்படியை 2% அதிகரித்தது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 55% ஆக உயர்ந்தது. இதைத் தொடர்ந்து பல மாநில அரசுகளும் அகவிலைப்படியை அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. 

Add Zee News as a Preferred Source

Dearness Allowance Increase: அகவிலைப்படி உயர்வு

இது மட்டுமின்றி மாநில அரசு ஊழியர்களுக்கு இன்னும் பல பெரிய அறிவிப்புகளும் வந்துள்ளன. அசாம், ஒடிசா, குஜராத், ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களை தொடர்ந்து தமிழக அரசு தனது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியுடன் போனஸையும் பரிசாக வழங்கியுள்ளது.

DA Hike: தமிழ்நாடு மாநில அரசு ஊழியர்களுக்கு கிடைத்த ஜாக்பாட்

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஏப்ரல் 28 ஆம் தேதி மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை (DA) இரண்டு சதவீதம் அதிகரித்து அறிவித்தார். இதனால் சுமார் 16 லட்சம் ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். இதற்காக ஆண்டுதோறும் ரூ.1,252 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்படும்.

Festival Advance: அதிகரித்த பண்டிகை முன்பணம்

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் குடும்பங்களுடன் பண்டிகைகளைக் கொண்டாட உதவும் வகையில், தற்போதுள்ள பண்டிகை முன்பணம் ரூ.10,000 இப்போது ரூ.20,000 ஆக உயர்த்தப்படும் என்று முதல்வர் கூறியுள்ளார். 

Education Advance: கல்விக்கான முன்பணம்

குழந்தைகளின் உயர்கல்வியில், தொழில்முறை கல்விக்கான கல்வி முன்பணம் இந்த ஆண்டு முதல் ரூ.1,00,000 ஆக உயர்த்தப்படும். கலை, அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளுக்கு, இது ரூ.50,000 ஆக உயர்த்தப்படும்.

Marriage Advance: திருமண முன்பணம்

அரசு பணிகளில் இருக்கும் பெண்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் திருமண முன்பணம் 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

Pensioners: ஓய்வூதியதாரர்களுக்கும் பரிசு கிடைக்கும்

ஓய்வு பெற்ற சி&டி பிரிவு ஊழியர்கள், தனிநபர் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் பொங்கல் பண்டிகை போனஸ் ரூ.500 லிருந்து ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சுமார் 4.71 லட்சம் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். இதனால் அரசுக்கு ரூ.24 கோடி கூடுதல் செலவு ஏற்படும். 

ஓய்வூதியதாரர்கள் பண்டிகையைக் கொண்டாட உதவுவதற்காக வழங்கப்படும் முன்பணமும் ரூ.4000 லிருந்து ரூ.6,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது சுமார் 52,000 ஓய்வூதியதாரர்களுக்கு பயனளிக்கும். மேலும் இதனால் அரசுக்கு ரூ.10 கோடி கூடுதல் செலவு ஏற்படும்.

Encashment of Earned Leave

15 நாட்கள் வரை ஈட்டிய விடுப்பை அக்டோபர் 1, 2025 முதல் பணமாக மாற்றிக்கொள்ளலாம். இந்த ஆண்டு முதல் இதை அமல்படுத்துமாறு அரசு ஊழியர்கள் விடுத்த கோரிக்கைகளைத் தொடர்ந்து இது செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை சுமார் 8 லட்சம் அரசு அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயனளிக்கும். இதற்காக அரசாங்கம் கூடுதலாக ரூ.3,561 கோடியை ஒதுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : 8வது ஊதியக்குழு: அடிப்படை ஆண்டு, டிஏ கணக்கீட்டில் மாற்றமா? மிகப்பெரிய அப்டேட் இதோ

மேலும் படிக்க | Mutual Funds: மாதம் ரூ.5000 SIP முதலீடு போதும்.... 48 வயதில் கையில் ரூ.1.03 கோடி இருக்கும்

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: வேகமெடுக்கும் பணிகள், இந்த மாதமே முக்கிய தகவல்கள் வெளிவரும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News