Salary Hike: ஊழியர்களின் சம்பளத்தில் பெரிய அளவில் அதிகரித்து மாநில அரசு அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இனி அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சமாக ரூ.30 ஆயிரம் வழங்கப்படும் என தெரிகிறது. இதனுடன், 2024ஆம் ஆண்டுக்கு முன், பணியாளர்கள் இந்த முறைப்படுத்தலின் பலனைப் பெறலாம். இதுமட்டுமின்றி இவர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தையும் தொடங்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஊழியர்களுக்கு சிக்கிம் மாநில அரசு ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒருபுறம், ஊழியர்களின் சம்பள உயர்வு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபுறம், அவர்கள் முறைப்படுத்தலின் பலனையும் பெறலாம். இதுமட்டுமின்றி, பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களை விரைவில் ஊழியர்களுக்கு வழங்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி அன்று, சிக்கிம் மாநிலத்தின் அனைத்து தனியார் பல்கலைக்கழகங்களிலும் தற்காலிக, மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் உதவிப் பேராசிரியர்களின் சம்பளத்தை உயர்த்துமாறு அம்மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது. மாநிலத்தில் தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ரெகுலர் அல்லாத உதவிப் பேராசிரியர்களுக்கு இப்போது குறைந்தபட்சம் ரூ. 30 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும். ஆகஸ்ட் 14ஆம் தேதி அன்று, சிக்கிம் மாநிலத்தில் நிறுவப்பட்ட அனைத்து அரசு தனியார் பல்கலைக்கழகங்களும் உதவிப் பேராசிரியருக்கு குறைந்தபட்சம் ரூ. 30 ஆயிரம் வழங்க வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிடும் சிக்கிம் அரசாங்கக் கல்வித் துறையின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | 60 வயதில் ரூ.10 கோடி கையில் இருக்கும்... சில முதலீட்டு டிப்ஸ் இதோ..!!


தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் அனைத்து ரெகுலர் அல்லாத உதவிப் பேராசிரியர்களுக்கும் இந்த விதி பொருந்தும். இதனுடன், உதவிப் பேராசிரியர்களின் சம்பளத்தில் பெரும் உயர்வு பதிவு செய்யப்படும். இப்போது அவர்களுக்கு மாதாந்திர குறைந்தபட்ச ஊதியமாகவே ரூ. 30 ஆயிரம் வழங்கப்படும்.


புது விருது அறிவிப்பு


அதே ஆக. 15ஆம் தேதி அன்று சிக்கிம் முதல்வர் ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன் கீழ் பெற்றோருக்கு சேவை செய்யும் இளைஞர்களுக்கு ஷ்ரவன் குமார் விருது ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 அன்று வழங்கப்படும். இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளால் முதியோர் இல்லங்களில் வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்று கூறிய முதலமைச்சர், இது நம் கலாச்சாரத்திற்கு முன்பு கற்பனை செய்ய முடியாதது என்றும் இத்தகைய கலாச்சார மாற்றத்தைத் தவிர்க்க, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ஆம் தேதி, பெற்றோருக்கு சேவை செய்யும் மகன்கள் மற்றும் மகள்களுக்கு ஷ்ரவன் குமார் விருது வழங்கப்படும்.


ஒரு குடும்பம் ஒரு வேலை திட்டத்தை முறைப்படுத்துவது நீண்ட காலமாக விவாதத்தில் உள்ளது. ஒரே குடும்பத்துக்கு ஒரு வேலை என்ற கீழ் வேலை பெறும் ஊழியர்களை 2024ஆம் ஆண்டுக்குள் முறைப்படுத்தலாம் என்று கூறிய முதல்வர், தற்போதுள்ள ஓய்வூதியத் திட்டத்தைப் போலன்றி பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் தொடங்கலாம் என்றார். 2000ஆம் ஆண்டில் அமல்படுத்தப்பட்ட புதிய ஓய்வூதியத் திட்டத்துக்கு அரசு ஊழியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சிக்கிமில் அதே பழைய ஓய்வூதியத் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என தெரிகிறது. தமிழ்நாட்டிலும் பழைய ஓய்வூதிய திட்டம் கூடிய விரைவில் அமல்படுத்தப்படலாம் என கூறப்படுகின்றது. 


மேலும் படிக்க | 8th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி! விரைவில் சம்பள உயர்வு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ