High Interest Rates FD Schemes: வாழ்வில் பணம் சம்பாதிப்பது எந்தளவிற்கு முக்கியமோ, அந்தளவிற்கு சம்பாதிக்கும் பணத்தை தகுந்த முறையில் சேமிக்கவும், முதலீடு செய்யவும் தெரிந்திருப்பதும் முக்கியம். தற்போதைய Gen Z தலைமுறையினர் கூட தங்கள் கைக்கு வரும் பணத்தை முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுவதாக ஆய்வுகள் கூறுகின்றனர். பலரும் பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் ஆகியவற்றில் முதலீடு செய்கின்றனர்.
FD Schemes: சிறந்த முதலீட்டு ஆப்ஷன்
அதேபோல், முதியோர்கள், வயது முதிர்ந்தவர்கள் வங்ககளில் உள்ள நிலையான வைப்புத்தொகை (Fixed Deposits) திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புவார்கள். பெரியளவு ரிஸ்க் இல்லாத முதலீடாக FD பார்க்கப்படுகிறது. மேலும் நீண்டகால முதலீட்டு நோக்கிலும் FD சிறந்த ஆப்ஷனாகும். FD என்பது ஒரு குறிப்பிட்ட தொகையை, குறிப்பிட்ட காலத்தில் நீங்கள் டெபாசிட் செய்து வைப்பீர்கள். அதற்கு நிர்ணயிக்கப்பட்ட விகிதத்தில் வட்டி வழங்கப்படும்.
High Interest Rates FD Schemes: சிறிய அளவிலான வங்கிகள்
அந்த வகையில், வட்டி விகிதம் வங்கிக்கு வங்கி மாறுபடும். சாதாரண மக்களுக்கு ஒரு வட்டி விகிதமும், அதை விட அதிகமாக மூத்த குடிமக்களுக்கும் வழங்கப்படும். மேலும் வட்டி விகிதமும் ஏற்ற இறக்கத்தைச் சந்திக்கும். இந்நிலையில், தற்போது வாடிக்கையாளர்களுக்கு மிக அதிக வட்டி விகிதத்தை வழங்கும் மூன்று வங்கிகள் குறித்து இங்கு காணலாம். இவை முன்னணி வங்கிகள் அல்ல, சிறிய அளவிலான வங்கிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
High Interest Rates FD Schemes: இந்த 3 வங்கிகள்
முன்னணி வங்கிகளான எஸ்பிஐ, பஞ்சாப் நேஷ்னல் வங்கி, ஹெச்டிஎப்சி ஆகியவை பொது வாடிக்கையாளர்களுக்கு 6% - 7% வட்டி விகிதத்தை FD திட்டத்தில் வழங்குகின்றன. ஆனால், இந்த சிறிய வங்கிகள் 7% - 8% வரை வட்டி விகிதத்தை வழங்குகின்றன. இன்னும் சில திட்டங்களில் அதை விடவும் அதிக வட்டி விகிதம் கூறப்படுகிறது. இதனால், முதலீட்டாளர்களுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். அந்த வகையில், 7% - 8% மேல் வட்டி விகிதத்தை வழங்கும் மூன்று வங்கிகளை இங்கு காணலாம்.
FD Schemes: சூர்யோதய ஸ்மால் பைனான்ஸ் வங்கி
இந்த வங்கியில் 5 ஆண்டுகளுக்கான FD திட்டத்தில் 8.05% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. அதுவும் பொது வாடிக்கையாளர்களுக்கு... மூத்த குடிமக்களுக்கு 8.10% அளவில் வட்டி விகிதத்தை வழங்குகிறது. அதாவது, நீங்கள் 5 ஆண்டுகளுக்கு ரூ. 5 லட்ச ரூபாயை முதலீடு செய்தால், பொது வாடிக்கையாளருக்கு வட்டி வருவாய் மட்டும் ரூ.2 லட்சத்து 44 ஆயிரத்து 377 கிடைக்கும். இதனால், மொத்தமாக உங்களுக்கு ரூ.7 லட்சத்து 44 ஆயிரத்து 377 கிடைக்கும்.
FD Schemes: ஜனா ஸ்மால் பைனானஸ் வங்கி
இந்த வங்கியில் 5 ஆண்டுகளுக்கான FD திட்டத்தில் பொது வாடிக்கையாளர்களுக்கு 8% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. பொது வாடிக்கையாளர்கள் சுமார் ரூ.2.42 லட்சத்தை வட்டியாக பெறலாம். இதே 5 ஆண்டுகளுக்கான FD திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு ரூ.9% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
FD Schemes: உத்ரகாஷ் ஸ்மால் பைனாஸ் வங்கி
இந்த வங்கியில் 5 ஆண்டுகளுக்கான FD திட்டத்தில் பொது வாடிக்கையாளர்களுக்கு 7.25% வட்டி விகிதம் கொடுக்கப்படுகிறது. ஒரு வருட திட்டத்தில் 6% மட்டுமே வட்டி விகிதம் என்பது கவனிக்கத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









