மத்திய அரசு 8வது ஊதியக்குழு அமைப்பதற்கான அறிவிப்பை ஜனவரி மாதத்தில் வெளியிட்டது. 8வது ஊதியக் குழு அமல் படுத்தப்பட்டால், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதிய உயர்வு எந்த அளவிற்கு இருக்கும் என்பது குறித்து பல கணக்கீடுகள் மற்றும் ஊகங்கள் தினம் தினம் வந்த வண்ணம் உள்ளன.
8வது ஊதியக் குழு அமலாவதில் காலதாமதம்
8வது ஊதியக்குழு அமல்படுத்தப்பட்டு ஜனவரி 2026 முதல் சம்பளம் மற்றும் ஓய்வூதிய உயர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள், மேலும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டியிருக்கும் என கூறப்படுகிறது. ஏனெனில் 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்த கால தாமதம் ஆகலாம் என கூறப்படுகிறது.
நிலுவைத் தொகை கிடைக்குமா?
8வது ஊதியக்குழுவின் பதவிக்காலம் அதிகாரப்பூர்வமாக 2026 ஜனவரி மாதத்தில் தொடங்கும் என்றாலும், திருத்தப்பட்ட சம்பளம் மற்றும் ஓய்வூதிய மாற்றங்கள் 2027ம் ஆண்டின் தொடக்கத்தில் மட்டுமே நடைமுறைக்கு வரக்கூடும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், புதிய ஊதிய அளவுகோல் அமலுக்கு வரும் போது, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 12 மாத நிலுவைத் தொகையைப் பெறுவார்கள் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இடைக்கால அறிக்கை வெளியாகலாம்
புதிய ஊதியக் குழுவை அமைப்பது தொடர்பான முன்னேற்றங்களை அறிந்த அரசு வட்டாரங்கள், இது குறித்து தெரிவிக்கையில், புதிய ஊதியக் குழு அமைக்கப்பட்ட 15 முதல் 18 மாதங்களுக்குள் அதன் பரிந்துரைகளை இறுதி செய்யலாம் என்றும், இறுதி பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கு முன்பு ஆணையம் தனது இடைக்கால அறிக்கையையும் சமர்ப்பிக்கலாம் என்றும் தெரிவித்தன. ஆனால் முழுமையான அறிக்கை 2026 ஆம் ஆண்டின் இறுதியில் தான் வரும் என்று மற்றொரு தகவலும் கிடைத்துள்ளது.
இறுதி அறிக்கை மற்றும் மதிப்பாய்வு
முந்தைய ஊதியக் குழுக்களின் செயல்முறையை பார்க்கும் போது, இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, அதனை மதிப்பாய்வு செய்து சமர்பிக்க, அரசாங்கத்திற்கு கூடுதல் நேரம் தேவைப்படுவதை அறிந்து கொள்ளலாம். எனவே, சம்பளம் மற்றும் ஓய்வூதிய உயர்வு 2027 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தான் அமலாகும் என தெரிகிறது.
அரசாங்கம் எப்போது பரிந்துரை விதிமுறைகளை (ToR) அங்கீகரிக்கும்?
8வது சம்பள ஆணையத்தின் பரிந்துரை விதிமுறைகளை (ToR) மத்திய அமைச்சரவை அடுத்த மாதம் அங்கீகரிக்கக்கூடும். ஊதிய குழுவை அமைப்பதற்கான இறுதி கட்ட நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. அமைச்சரவையிடமிருந்து ஒப்புதல் கிடைத்தவுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். இதன் பிறகு, 2025 ஏப்ரல் மாதம் முதல் ஊதிய குழு தனது பணிகளைத் தொடங்கலாம்.
8வது ஊதியக் குழு உறுப்பினர்கள் நியமனம்
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களை மேம்படுத்துவதற்காக 8வது ஊதியக் குழுவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இருப்பினும், ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் நியமனம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
இதுவரை என்ன நடந்தது, அடுத்து என்ன?
மத்திய அரசு 16 ஜனவரி 2025 அன்று 8வது சம்பள குழுவை அமைப்பதாக அறிவித்தது. அப்போதிருந்து, பரிந்துரை விதிமுறைகள் (ToR) மற்றும் சம்பள குழுவின் செயல்முறை தொடர்பாக பல முக்கியமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதுவரை என்ன நடந்தது, அடுத்து என்ன நடக்கலாம் என்பதை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்வி
சமீபத்தில், 8வது சம்பள குழுவின் பரிந்துரை விதிமுறைகளின் நிலை மற்றும் குழு உறுப்பினர்களின் நியமனம் குறித்து அரசாங்கத்திடம் நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அரசு, புதிய ஊதியக் குழுவின் அறிவிப்பு, தலைவர், உறுப்பினர்கள் மற்றும் காலக்கெடு குறித்த முடிவு "சரியான நேரத்தில்" எடுக்கப்படும் என்று கூறியது.
8வது ஊதியக் குழுவின் குறிப்பு விதிமுறைகள் (ToR)
இதுவரை, தேசிய கூட்டு ஆலோசனை இயந்திர கவுன்சிலின் (JCM) பணியாளர் தரப்பு குறிப்பு விதிமுறைகளுக்கான பரிந்துரைகளை அனுப்பியுள்ளது. பணியாளர் தரப்பு அதன் பரிந்துரை விதிமுறைகளில் சம்பள அமைப்பு, கொடுப்பனவுகள் மற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளில் பெரிய மாற்றங்களைக் கோரியுள்ளது. இவற்றில் ஒரு முக்கியமான பரிந்துரை சில ஊதிய அளவுகளை இணைப்பது தொடர்பானது. இதனால் சம்பள முறையை எளிமைப்படுத்த முடியும் என கூறப்படுகிறது. இந்த விஷயத்தில் நிதி அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம், உள்துறை அமைச்சகம் மற்றும் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) ஆகியோரிடமிருந்தும் அரசாங்கம் பரிந்துரைகளைக் கோரியுள்ளது.
மத்திய அரசு கோரியுள்ள கருத்துக்கள்
8வது ஊதியக் குழுவின் பரிந்துரை விதிமுறைகளை இறுதி செய்ய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) தேசிய கவுன்சிலின் (JCM) ஊழியர் தரப்பிலிருந்து கருத்துக்களை மத்திய அரசு கோரியுள்ளது. அரசாங்கம் இந்தப் பரிந்துரைகளை எந்த அளவிற்கு செயல்படுத்துகிறது, ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு எவ்வளவு கவனம் செலுத்துகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: ஊதிய உயர்வு, சமமான ஓய்வூதியம்.... நிதி அமைச்சர் அளித்த மாஸ் அப்டேட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









