கிரெடிட் கார்டுகள் வாங்கும் பழக்கம் இன்றைய மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. காரணம் இது மாத கடைசி அல்லது முக்கிய தேவைகளின் போது குறிப்பிட்ட நிதி ஆதாயமாக திகழ்கிறது. மேலும் கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது கிடைக்கும் ரிவார்டு புள்ளிகளுக்காகவும் பலர் இதனை விரும்புகின்றனர். பல்வேறு நிறுவனங்கள் தற்போது கிரெடிட் கார்டுகளை வாடிக்கையாளர்களுக்கு தேடி தேடி வழங்கி வருகின்றனர். இன்றைய போட்டி நிறைந்த சந்தையில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் மற்றும் தக்கவைத்துக்கொள்ளும் நோக்கத்துடன், ஒவ்வொரு நிறுவனமும் ரிவார்டு புள்ளிகளை அதிகமாக வழங்கி வருகின்றன.
பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு
இந்திய கிரெடிட் கார்டு துறையில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களில் ஒன்று பாரத ஸ்டேட் வங்கி (SBI). இது மார்ச் 31, 2025 முதல் நடைமுறைக்கு வரும் அதன் வெகுமதி திட்டத்தில் பல்வேறு மாற்றங்களை அறிவித்துள்ளது. SimplyCLICK எஸ்பிஐ கிரெடிட் கார்டைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, வெகுமதி புள்ளிகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் வரவுள்ளது. குறிப்பாக, பிரபலமான உணவு விநியோக தளமான Swiggyல் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கான வெகுமதிகள், 10X இலிருந்து 5X ஆக பாதியாக குறைக்கப்பட உள்ளது. இந்த குறைப்பு ஸ்விக்கியை அடிக்கடி பயன்படுத்துபவர்களை கணிசமாக பாதிக்கலாம். இருப்பினும், அப்பல்லோ 24X7, புக் மை ஷோ மற்றும் மைந்த்ரா போன்ற பிற பிராண்டுகளுக்கான வெகுமதிகள் 10Xல் மாறாமல் இருக்கும், இது இந்த சேவைகளைப் பயன்படுத்தும் கார்டுதாரர்களுக்கு சற்று ஆனந்தமாக இருக்கும்.
ஏர் இந்தியா
சிம்ப்லி கிளிக் எஸ்பிஐ கிரெடிட் கார்டில் கொண்டு வரப்படவுள்ள மாற்றங்களை தொடர்ந்து, ஏர் இந்தியா எஸ்பிஐ கிரெடிட் கார்டிலும் மாற்றங்கள் வர உள்ளது. இந்த கார்டு வைத்திருப்பவர்களும் தங்கள் வெகுமதி புள்ளிகளில் கணிசமான மாற்றங்களைச் சந்திக்க நேரிடும். பிளாட்டினம் கார்டுதாரர்கள் ரிவார்டுகளில் கடுமையான குறைப்பை அனுபவிப்பார்கள், செலவழித்த ரூபாய் 100க்கு 15 புள்ளிகள் கிடைத்து வந்த நிலையில், அது இனி வெறும் 5 புள்ளிகளாக குறையும். இதேபோல், சிக்னேச்சர் கார்டு வைத்திருப்பவர்கள் இதற்கு முன்பு 100 ரூபாய் செலவழித்தால் 30 புள்ளிகள் கிடைக்கும். அது இனி 10 ஆக குறையும். இது ஏர் இந்தியா பயணிகள் தொடர்ந்து இந்த கார்டுகளை பயன்படுத்துவதைத் தடுக்கலாம்.
பிற வங்கிகள்
கிரெடிட் கார்டு வெகுமதிகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் பயனர்கள் தங்கள் செலவுப் பழக்கம் மற்றும் அந்தந்த கிரெடிட் கார்டு பயன்படுத்துவதை மறுபரிசீலனை செய்ய தூண்டலாம். மேலும், ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் தனது கிளப் விஸ்டாரா கிரெடிட் கார்டுக்கான மைல்ஸ்டோன் சலுகைகளை நிறுத்த திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, இது ரிவார்டு கட்டமைப்புகளை திருத்தும் போக்கு SBIக்கு மட்டும் தனியாக இல்லை என்பதைக் குறிக்கிறது. இந்த வளர்ந்து வரும் சூழ்நிலையானது, வாடிக்கையாளர்கள் தங்கள் கிரெடிட் கார்டு விருப்பங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பலன்கள் பற்றி தொடர்ந்து தெரிந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









