)
ஜூலை 1, 2025 முதல் பல முக்கியமான விதிமுறை மாற்றங்கள் நடைமுறைக்கு வர உள்ளன. தட்கல் டிக்கெட் முதல் பான் கார்டு வரை ஏற்பட உள்ள பல முக்கிய மாற்றங்களை இந்த பதிவில் விரிவாக அறிந்து கொள்ளலாம்...
PAN கார்டு விண்ணப்பங்களுக்கு ஆதார் சரிபார்ப்பு கட்டாயம்
ஜூலை 1 முதல் புதிய PAN கார்டு விண்ணப்பங்களுக்கு ஆதார் சரிபார்ப்பு கட்டாயமாகும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) அறிவித்துள்ளது. வரி இணக்கத்தை மேம்படுத்துவதையும் டிஜிட்டல் ஒருங்கிணைப்பை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டது இந்த நடவடிக்கை. முன்னதாக, PAN பெற செல்லுபடியாகும் அடையாள அட்டை மற்றும் பிறப்புச் சான்றிதழ் போதுமானதாக இருந்தன.
எஸ்பிஐ, எச்டிஎஃப்சி மற்றும் ஐசிஐசிஐ ஆகியவற்றின் திருத்தப்பட்ட கிரெடிட் கார்டு மற்றும் வங்கி கட்டணங்கள்
எஸ்பிஐ கார்டு ஜூலை 15 முதல் எலைட் மற்றும் பிரைம் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட பிரீமியம் கார்டுகளில் அதன் இலவச விமான விபத்து காப்பீடு சலுகையை நிறுத்த உள்ளது. ஜிஎஸ்டி, இஎம்ஐக்கள், கட்டணங்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய கிரெடிட் கார்டுகளில் குறைந்தபட்ச நிலுவைத் தொகையை (MAD) கணக்கிடும் முறையும் திருத்தப்பட உள்ளன.
ஏடிஎம், ரொக்க பரிவர்த்தனை வரம்புகளில் மாற்றம்
ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம் கட்டணங்கள், ஐஎம்பிஎஸ் கட்டணங்கள் மற்றும் ரொக்க பரிவர்த்தனை வரம்புகளில் மாற்றங்களைச் செய்கிறது. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இலவச பரிவர்த்தனைகளுக்குப் பிறகு, கூடுதல் ஏடிஎம் பயன்பாட்டிற்கும், வங்கிகளில் செய்யப்படும் ரொக்க பரிவர்த்தனைக்கும் கட்டணங்கள் விதிக்கப்பட உள்ளது.
ரயில்வே டிக்கெட் முன்பதிவு விதிகளில் மாற்றம்
ஜூலை 1 முதல், ரயில்வே டிக்கெட் முன்பதிவு விதிகளில் IRCTC மாற்றங்களைச் செய்துள்ளது. ஜூலை 1 முதல், IRCTC கணக்கு ஆதாருடன் இணைக்கப்பட்ட பயணிகளுக்கு மட்டுமே தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய இயலும். இது தவிர, தட்கல் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய முதல் 30 நிமிடங்களுக்கு ரயில்வே முகவர்கள் இனி டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியாது. மேலும், ஜூலை 15 முதல், டிக்கெட் முன்பதிவு செய்யும் போது ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும் OTP உள்ளிடுவது அவசியம்.
ரயில் டிக்கெட் கட்டண உயர்வு
ஜூலை 1 முதல், ரயில்வே ஏசி மற்றும் ஏசி அல்லாத டிக்கெட்டுகளின் விலையை சிறிதளவு அதிகரிக்க உள்ளது. ஏசி அல்லாத வகுப்பு கட்டணம் கிலோமீட்டருக்கு 1 பைசா என்ற அளவிலும், ஏசி வகுப்பு கட்டணம் கிலோமீட்டருக்கு 2 பைசா என்ற அளவிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
காத்திருப்பு டிக்கெட் எண்ணிக்கையில் மாற்றம்
ரயில் முன்பதிவில், கன்ஃபர்ம் டிக்கெட் கிடைக்காத போது கொடுக்கப்படும் காத்திருப்பு டிக்கெட்டுகளின் எண்ணிக்கையில் மாற்ற செய்யப்பட உள்ளது. ஒவ்வொரு வகுப்பிலும் உள்ள மொத்த இருக்கைகளின் எண்ணிக்கையில் 25 சதவீதத்திற்கும் அதிகமாக காத்திருப்பு டிக்கெட்டுகள் வழங்கப்படாது. இருப்பினும், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பயணிகளுக்கு இந்த விதியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
வருமான வரி வருமானத்தை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு
வரி செலுத்துவோருக்கு வரவேற்கத்தக்க நடவடிக்கையாக, 2025-26 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி வருமானத்தை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை CBDT நீட்டித்துள்ளது. புதிய காலக்கெடு செப்டம்பர் 15 ஆகும். கடைசி நிமிட சிக்கல்களைத் தவிர்க்க முன்கூட்டியே தாக்கல் செய்ய நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ