ஊழியர்கள் நலன் மற்றும் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் அவ்வப்போது EPFO விதிகளில் மாற்றங்களை கொண்டு வரும். அந்த வகையில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) விரைவில் EPFO 3.0 விதிகளை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்தத் தகவலை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். EPFO விதிகளில் அரசாங்கம் பெரிய மாற்றங்களைச் செய்து வருவதாக கூறினார். இவை அமல்படுத்திய பிறகு, EPFO உறுப்பினர்கள் பல வகையான வசதிகளைப் பெறுவார்கள். அவர்கள் அரசு அலுவலகங்களுக்கு செல்லாமலேயே, எளிதாக பல விதமான சேவைகளை பெறலாம்.
PF கணக்கு தொடர்பான அனைத்து வேலைகளை UAN மூலம் நிறைவேற்றலாம்
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மாண்டவியா, வரும் நாட்களில் EPFO 3.0 பதிப்பு வரும் என்றும் இதன் மூலம் EPFO ஒரு வங்கிக்கு சமமாக மாறும் என்று கூறினார். நீங்கள் ஒரு வங்கியில் பரிவர்த்தனை செய்வது போல், உங்களிடம் உள்ள யுனிவர்சல் கணக்கு எண் மூலம், உங்களின் அனைத்து பரிவர்த்தனைகளும் அதன் மூலம் செய்யலாம் என அவர் தெரிவித்தார். வங்கியில் பரிவர்த்தனைகள் நடப்பது போலவே, EPFO உறுப்பினர்கள் தங்கள் UAN மூலம் அனைத்து வேலைகளையும் நிறைவேற்ற முடியும்.
PF கணக்கில் இருந்து எப்போது வேண்டுமானாலும் ஏடிஎம் மூலம் பணம் எடுக்கலாம்
இனி பி எஃப் தொடர்பான வேலைகளுக்கு EPFO அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியதில்லை, அல்லது நீங்கள் முதலாளியிடம் செல்ல வேண்டியதில்லை. பணம் உங்களுடையது, நீங்கள் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். வரும் நாட்களில் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் ஏடிஎம்மில் சென்று பணத்தை எடுக்கலாம் என்று உறுதியளிக்கிறேன். இதனை செயல்படுத்தும் வகையில் இபிஎஃப்ஓவில் அத்தகைய சீர்திருத்தத்தை நாங்கள் செய்து வருகிறோம் என்றால் மத்திய அமைச்சர்.
EPFO அமைப்பில் மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான மாற்றங்கள்
ஹைதராபாத்தில் EPFO இன் தெலுங்கானா மண்டல அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகம் திறப்பு விழாவின் போது மத்திய அமைச்சர் இந்த விஷயங்கள் அனைத்தையும் கூறினார். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், இபிஎப்ஓவில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு, அதில் மேம்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்றார். புகார்கள் குறைந்து, சேவைகளின் தரம் அதிகரித்து வருகின்றன. EPFO அமைப்பின் செயல்பாடுகள் இப்போது மக்கள் நட்பாக மாறி வருகிறது என்றார். இதற்கிடையில், நிதி பரிமாற்றம், க்ளெய்ம், பெயர் திருத்தம் மற்றும் எந்தவொரு வங்கியிலிருந்தும் ஓய்வூதியம் திரும்பப் பெறுதல் போன்ற பல்வேறு சீர்திருத்தங்கள் குறித்தும் மத்திய அமைச்சர் குறிப்பிட்டார்.
தகவல் தொழில்நுட்ப மேம்பாடுகள்
EPFO தனது IT அமைப்பை மேம்படுத்துகிறது, இது PF வைத்திருப்பவர்கள் நிதியை டெபாசிட் செய்வதை எளிதாக்குகிறது. இந்த அமைப்பு 2025 ஜூன் மாதத்திற்குள் தகவல் தொழில்நுட்ப மேம்படுத்தலை நிறைவு செய்யும் என்று கூறப்படுகிறது. இதனுடன், கணினி மேம்படுத்தல் காரணமாக க்ளெய்களை எளிதாக தீர்க்க முடியும்.
மையப்படுத்தப்பட்ட ஓய்வூதிய கட்டண முறை (CPPS)
இந்தியா முழுவதும் உள்ள EPFO அமைப்பின் அனைத்து பிராந்திய அலுவலகங்களிலும் மையப்படுத்தப்பட்ட ஓய்வூதிய கட்டண முறை (CPPS) சமீபத்தில் முழுமையாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள ஓய்வூதியதாரர்கள் நாட்டில் உள்ள எந்த கிளையிலிருந்தும் தங்கள் ஓய்வூதியத்தை பெற முடியும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









