சர்க்கரை அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! உடனே இதை முடிக்கவும்

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் முக்கிய செய்தி. உங்களிடம் ரேஷன் டத்தை இருந்தால் இன்று e-KYC செய்ய முடிக்கவும், இல்லாவிட்டால் ரேஷன் பொருட்கள் பெற முடியாமல் போகலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 31, 2025, 02:04 PM IST
  • e-KYC எப்படி பதிவு செய்வது
  • இலவச அரிசி பெறுபவர்கள் ஆதார் எண், கைரேகை, கண் புருவம் கட்டாயம்
  • ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய செய்தி
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! உடனே இதை முடிக்கவும்

ரேஷன் கார்டு மூலம் ஏழை எளிய மக்களுக்கு தற்போது மத்திய மாநில அரசு மலிவு விலையில் மளிகை பொருட்களை விநியோகித்து வருகிறது. குறிப்பாக சில தமிழகம் போன்ற மாநிலங்களில் பண்டிகைக் காலங்களில் தேவைப்படும் நேரங்களிலும் நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில் பொங்கல் தொகுப்புகள் மற்றும் நிவாரண நிதிகள் போன்ற சிறப்பு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்தகைய சூழ்நிலையில் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு தற்போது முக்கிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதனபடி இன்று அதாவது மார்ச் 31க்குள் e-KYC செய்து முடிக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அப்படி e-KYC செய்ய தவரவிட்டால் இனி வரும் காலங்களில் நீங்கள் ரேஷன் பொருட்கள் பெற முடியால் போகும். எனவே, ரேஷன் கடைகளில் இலவச அரிசி பெறுபவர்கள் ஆதார் எண், கைரேகை, கண் புருவம் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். 

Add Zee News as a Preferred Source

இப்போது ஆன்லைனில் e-KYC எப்படி பதிவு செய்வது என்பதை தெரிந்துக்கொள்வோம், மேலும் இந்த திட்டத்துக்கு யார் யாரெல்லாம் தகுதியற்றவர்கள் என்று பார்ப்போம்.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ் ஏழை மக்களுக்கு இலவசமாகவும் மானிய விலையிலும் ரேஷன் வழங்கப்பட்டு வருகிறது. அதிலும் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்களுக்கு (Antyodaya Anna Yojana - AAY) ரேஷன் கார்டிற்கு தலா 35 கிலோ, ஏழை குடும்பத்தை சேர்ந்த குடும்ப (Priority Household - PHH) ரேஷன் கார்டிற்கு தலா ஒரு நபருக்கு 5 கிலோ அதிகபட்சம் ரேஷன் கார்டுக்கு 20 கிலோ வரை இலவச அரிசி ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது.

இலவச அரிசி பெறும், இந்த AAY, PHH, ரேஷன் கார்டுதாரர்களின் குடும்ப தலைவர், உறுப்பினர்கள் அனைவரின் ஆதார் எண், கைரேகை, கண் புருவம் அதாவது e-KYC ஐ அந்தந்த ரேஷன் கடைகளில் பதிவு செய்ய அரசு அறிவித்திருந்தது. போலி ரேஷன் கார்டுகளை தடுக்கவும், தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் கிடைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்க முக்கிய காரணம் ஆகும் .

ஆன்லைனில் e-KYC செய்வதற்கான வழிமுறைகள்:
உங்களின் மாநில ரேஷன் கார்டு போர்டலுக்கு செல்லவும், பின்னர் அதில் லாக் இன் செய்யவும். 
பின்னர் உங்களது ரேஷன் கார்டு நம்பர், பாஸ்வேர்டு பதிவிட்டு லாகின் செய்யவும். 
பின்னர் New User என்பதை கிளிக் செய்யவும்
பிறகு e-KYC ஆப்ஷனையும், Aadhaar Linking என்கிற ஆப்ஷனையும் தேர்ந்தெடுத்து, 12-இலக்க ஆதார் எண் Aadhaar Number பதிவிடவும். 
இப்போது ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் நம்பருக்கு வரும் ஓடிபியை அனுப்பப்படும். 
பின்னர் இறுதியாக Submit பட்டனை அழுத்தினால், உங்கள் செல்போனுக்கு e-KYC Successful என்கிற  செய்தி வரும்.

மொபைல் செயலி மூலம் e-KYC செய்து முடிக்க 'Mera KYC' மொபைல் செயலியைத் திறக்கவும். மாநிலத்தைத் தேர்ந்தெடுத்து, இருப்பிடத்தைச் சரிபார்க்கவும். ஆதார் எண்ணை உள்ளிட்டு, OTP மற்றும் கேப்ட்சா குறியீட்டை நிரப்பவும். உங்கள் ஸ்டேட்டஸில் 'Y' தோன்றினால், உங்கள் e-KYC முடிந்தது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். 31 ஆம் தேதிக்குப் பிறகு உங்கள் e-KYC முடிக்கப்படாவிட்டால், நீங்கள் ரேஷன் திட்டம் மற்றும் பிற அரசாங்க சலுகைகளை இழக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | கௌதம் அதானிக்கு மேலும் சிக்கலா? இந்திய அரசின் உதவியை நாடிய அமெரிக்கா!

மேலும் படிக்க | EPFO claim செயல்முறையில் ஏப்ரல் 1 முதல் முக்கிய மாற்றங்கள்: முழு லிஸ்ட் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News