)
SIP என்பது மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கான ஒரு எளிய வழிமுறை. இன்று, பெரும்பாலானோர் SIP மூலம் பரஸ்பர நிதியங்களில் முதலீடு செய்கிறார்கள். கூட்டு வட்டி வருமானத்தின் அடிப்படையிலான மூலதன ஆதாயத்தின் மூலம் இதிலிருந்து பெரிய அளவிலான கார்பஸ் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உண்மைதான் என்றாலும் இதற்கு சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். உங்களது பணக்கார கனவை நனவாக்க, SIP தொடர்பான சில விஷயங்களை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
முதலீடு எவ்வளவு சீக்கிரம் தொடங்குகிறீர்களோ, அவ்வளவு பெரிய லாபம் ஈட்டலாம்
SIP மூலம் நீங்கள் ஒரு பெரிய முதலீட்டைப் பெற விரும்பினால், முடிந்த அளவு இளமையிலேயே முதலீடு செய்யத் தொடங்கி, முடிந்தவரை நீண்ட காலம் அதைத் தொடரவும். நீண்ட கால SIP மூலம் பெரிய அளவிலான கார்பஸை உருவாக்க முடியும். 20, 25 மற்றும் 30 ஆண்டுகளுக்கான SIP உங்களை எளிதாக கோடீஸ்வரராக்கும்.
முதலீட்டை இடைவிடாமல் தொடருவது முக்கியம்
SIP முதலீட்டை தொடங்கிய பின், இடைவேளை எடுக்கவோ அல்லது இடையில் இடைநிறுத்தவோ வேண்டாம். நீண்ட காலத்திற்கு வழக்கமான முதலீட்டைப் பராமரிக்கவும். ஒரு பெரிய நிதியை உருவாக்க வழக்கமான முதலீட்டைத் தொடர்வது மிகவும் முக்கியம்.
மந்தநிலையைப் பற்றி பயப்பட வேண்டாம்
SIP என்பது சந்தையுடன் இணைக்கப்பட்ட திட்டம். சந்தை தொடர்ந்து ஏற்ற இறக்கமாக இருக்கும். சந்தையில் மந்தநிலை ஏற்படும் என்ற பயத்தில் SIP முதலீட்டை நிறுத்த வேண்டாம். சந்தையில் மந்தநிலையின் போது, நீங்கள் அதிக யூனிட்களைப் பெறுவீர்கள், பின்னர் சந்தை உயரும்போது, அதன் மூலம் அதிக வருமானத்தைப் பெறுவீர்கள், எனவே உங்கள் SIP முதலீட்டை தொடரவும்.
வருமானம் அதிகரிக்கும் போது ஸ்டெப்-அப் செய்யுங்கள்
SIP முதலீட்டின் மூலம் நீங்கள் பெரிய லாபம் ஈட்ட விரும்பினால், அவ்வப்போது அதை ஸ்டெப்-அப் செய்யுங்கள். வருமானம் அதிகரிக்கும் போது, ஒவ்வொரு ஆண்டும் அதில் 5% அல்லது 10% டாப்-அப் செய்து, முதலீட்டை அதிகரிக்கவும். இது உங்களுக்கு கூட்டு வட்டி வருமானத்தின் மிகப்பெரிய நன்மையைத் தரும். மேலும் விரைவில் ஒரு பெரிய கார்பஸ் உருவாக்கப்படும்.
போர்ட்ஃபோலியோவை பல்வகைப்படுத்துங்கள்
ஒரே வகை நிதியத்தில் அனைத்து பணத்தையும் முதலீடு செய்யாதீர்கள். போர்ட்ஃபோலியோவை பல்வகைப்படுத்துங்கள். இதைச் செய்வதன் மூலம், நீங்கள் ஆபத்தைக் குறைத்து சிறந்த வருமானத்தைப் பெறலாம்.
சரியான நிதியைத் தேர்வுசெய்வது அவசியம்
SIP முதலீட்டில் உள்ள அனைத்து நிதிகளும் ஒரே மாதிரியானவை அல்ல, எனவே உங்கள் தேவைகளுக்கு ஏற்ப சரியான நிதியைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளும் அதிக ரிஸ்க்கைக் கொண்டுள்ளன, ஆனால் நீண்ட காலத்திற்கு வருமானம் மிகவும் சிறந்தது. கடன் நிதிகள் குறைந்த ரிஸ்க்கைக் கொண்டுள்ளன. அதே நேரத்தில் ஹைப்ரிட் ஃபண்டுகள் சமநிலையானவை. நீங்கள் விரும்பினால், இந்த விஷயத்தில் நிபுணர் ஆலோசனையைப் பெறலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையின் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே தவிர, முதலீட்டு ஆலோசனைகளை வழங்குவது அல்ல. பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டின் கடந்தகால வருமானம், எதிர்காலத்திலும் தொடரும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. SEBI அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகி ஆலோசித்த பின்னரே முதலீடு தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ