PM KISAN : தமிழ்நாடு விவசாயிகளுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விவசாயிகள் தங்களது நில உடைமை விபரங்களை வேளாண் அடுக்ககம் வலைதளத்தில் பதிவு செய்வதன் மூலம் (Farmer Registry) விவசாயிகளுக்கு தனித்துவமான அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் எதிர்வரும் காலங்களில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை மற்றும் வேளாண் விற்பனைத்துறை மூலமாக செயல்படுத்தப்படும் பல்வேறு மானியத் திட்டப் பயன்களுக்கும் அடிப்படையாக இந்த அடையாள எண் இருக்கும்.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் 09.02.2025 முதல் விவசாயிகளின் நில உடைமை ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வேளாண் அடுக்ககம் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு தனிக்குறியீடு அதாவது தனி அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் தங்களது நில உடைமை ஆவணங்களை வேளாண் அடுக்ககம் வலைதளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும். மேலும், அக்டோபர் 11-ம் தேதி நடைபெறவுள்ள சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் விபரங்களை வலைதளத்தில் பதிவு செய்திட பிரத்யேக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறிப்பாக பாரத பிரதமரின் கௌரவ நிதி உதவி திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் அனைத்து விவசாயிகளும் தங்களது அடுத்தடுத்த தவணைகளைப் பெற தங்களது நில உடைமை ஆவணங்களை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, வலைதளத்தில் இதுநாள் வரை பதிவுசெய்யாத விவசாயிகள் அருகிலுள்ள இ-சேவை மையம் அல்லது வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகவும்.
தேவைப்படும் ஆவணங்கள்:
ஆதார் எண், கைபேசி எண், நில ஆவணங்கள் - சர்வே எண் மற்றும் உட்பிரிவு எண், வங்கி கணக்கு புத்தகம் - எண் மற்றும் IFSC code,
நில விவரங்களுடன் இணைக்கப்பட்ட விவசாயிகள் பதிவு விவரம் மூலம் கிடைக்கப்பெறும் நன்மைகள்
- அனைத்து துறை பயன்களை ஒற்றை சாளர முறையில் பெறலாம்.
- ஒவ்வொரு முறை விண்ணப்பிக்கும் போது ஆவணங்கள் சமர்பிக்க வேண்டியதில்லை.
- அரசின் நன்மைகள் சரியான பயனாளிக்கு சென்றடைவதை உறுதிப்படுத்திட முடியும்.
- விவசாயிகள் நேரடியாக வலைதளத்தில் பதிவு செய்வதால் முன்னுரிமை அடிப்படையில் அரசின் பயன்கள் பெற்றுக் கொள்ளலாம்.
- ஆதார் எண் அடிப்படையில் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடி பணப்பரிமாற்றம் செய்யப்படும். (Drect Benefit Transfer)
- கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் எளிய முறையில் பயிர்க்கடன் பெறும் வசதி
- விவசாயிகள் இதுவரை அரசிடமிருந்து பெற்ற நன்மைகளை தெரிந்துகொள்ளலாம்.
- இனிவரும் காலங்களில், PMKISAN, PMFBY (பயிர் காப்பீடு) போன்ற இதர ஒன்றிய மற்றும் மாநில திட்டங்கள் அனைத்தும் இத்தரவுகளின் அடிப்படையிலேயே வழங்கப்படும்.
- தமிழ்நாட்டில் விவசாயம் மற்றும் விவசாயி சார்ந்த திட்ட பலன்கள் வழங்கும் அனைத்து அரசு துறைகளுக்கும் இத்தரவுகள் வழங்கப்பட்டு, இதன் அடிப்படையிலேயே திட்ட பயன்கள் வழங்கப்படும். இந்த அறிவிப்பை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.
மேலும் படிக்க | PM கிசான் 21வது தவணை தொகை : தீபாவளிக்கு முன் மத்திய அரசின் மிகப்பெரிய அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









