நமது நெருக்கடியான கால கட்டங்களில், நகைக்கடன் சிறந்த வகையில் கைக் கொடுக்கும். தங்கம் என்பது ஆபரணம் மட்டுமல்ல, கடினமான காலங்களில் அவசர தேவைக்கு உதவும் மிக முக்கியமான நிதி ஆதாரங்களில் ஒன்று. தங்க நகைகள் மீதான கடனை எளிதாகவும் குறைந்த கட்டணத்திலும் பெறலாம். எனினும், இதில் முறைகேடுகள் நடக்கின்றன என்பதையும் மறுக்க இயலாது. முறைகேடுகளை தடுக்கவும், நகை கடன் பெற்றவர்கள் மோசடியில் சிக்காமல் இருக்கவும் ரிசர்வ் வங்கி புதிய விதிகளை வகுக்க திட்டமிட்டுள்ளது.
தங்கக் கடன்களுக்கான புதிய விதிகள்
தங்கத்தை அடமானம் வைத்து கடன் வாங்கியிருப்பவர்களுக்கு இந்தச் செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். தங்கக் கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கி இப்போது புதிய விதிகளைக் கொண்டுவரப் போகிறது. இந்த வழிகாட்டுதல்களின் நோக்கம் தங்கக் கடன் முறையை மிகவும் வெளிப்படையானதாகவும் பாதுகாப்பாகவும் மாற்றுவதாகும்.
வங்கிகள் மற்றும் NBFC என்னும் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கான புதிய விதிகள்
தங்கக் கடன்களை வழங்கும் வங்கிகள் மற்றும் NBFC என்னும் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கான புதிய விதிகள் விரைவில் வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தங்க நகைகள் மீது பெறப்பட்ட கடன்களில் எந்த முறைகேடுகளும் இருக்கக்கூடாது என்பதே அவர்களின் நோக்கமாகும். இதில் உள்ள சிறப்பு என்னவென்றால், இந்த விதிகள் கடன் பெற்றவர்களின் நலன்களை பாதுகாப்பதோடு, கடன் வழங்கும் நிறுவனங்களின் பொறுப்பையும் அதிகரிக்கும்.
புதிய வழிகாட்டுதல்களுக்கான அவசியம் ஏன் ஏற்பட்டுள்ளது
சமீபத்தில் சில நிறுவனங்கள் நகைக் கடன்களை வழங்குவதற்கான விதிகளைத் தளர்த்துவதை ரிசர்வ் வங்கி கண்டறிந்தது. கடன் வழங்கும் செயல்பாட்டில் தங்கத்தின் சரியான மதிப்பை மதிப்பிடாதது, கடன் தொகையை முறையாகப் பயன்படுத்தாதது மற்றும் அவுட்சோர்சிங்கில் அலட்சியம் போன்ற பல குறைபாடுகள் இருந்ததாக அறிக்கை கூறியுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி இப்போது கடுமையான வழிகாட்டுதல்களைக் கொண்டுவரப் போகிறது.
வரைவு வழிகாட்டுதல்கள் குறித்த மக்கள் கருத்தை கோரும் ரிசர்வ் வங்கி
புதிய வழிகாட்டுதல்கள் அல்லது விதிகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி ஒரு வரைவை வெளியிட்டுள்ளது. இது குறித்து பொதுமக்களிடமிருந்து ஆலோசனைகள் கோரப்பட்டுள்ளன. வரும் நாட்களில் இதன் அடிப்படையில் இறுதி வழிகாட்டுதல்கள் உருவாக்கப்படும். புதிய வித்திகளை வங்கிகளும் NBFC என்னும் நிதி நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும்.
புதிய வழிகாட்டுதல்கள் பங்குச் சந்தையில் ஏற்படுத்தியுள்ள தாக்கம்
ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு பங்குச் சந்தையிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியது. முத்தூட் ஃபைனான்ஸ், மணப்புரம் ஃபைனான்ஸ் மற்றும் ஐஐஎஃப்எல் ஃபைனான்ஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகள் 7% வரை சரிந்தன. இந்த நிறுவனங்களின் வருமானத்தில் பெரும் பகுதி தங்கக் கடன்களிலிருந்து வருகிறது என்பதே இதற்குக் காரணம். புதிய விதிகள் இந்த நிறுவனத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதால், பங்கு விலைகள் குறைந்தன.
நகைக் கடனுக்கான தேவை மிகப்பெரிய அளவில் அதிகரிப்பு
ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி, நாடு முழுவதும் நகைக் கடனுக்கான தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. 2024 மார்ச் 2024 நிலவரப்படி, வழங்கப்பட்ட அனைத்து தங்கக் கடன்களிலும் NBFC நிறுவனங்களுக்கு மட்டுமே கிட்டத்தட்ட 60% பங்கைக் கொண்டிருந்தன. இன்றும் கூட பலர் பணம் தேவைப்படும்போது முதலில் நகைக் கடனையே நாடுகிறார்கள் என்பதை இது காட்டுகிறது.
புதிய விதிகள் மூலம், தங்கக் கடன் முறை லாபகரமானதாக மட்டுமல்லாமல் நம்பகமானதாகவும் இருப்பதை ரிசர்வ் வங்கி உறுதி செய்ய விரும்புகிறது. இதனுடன், கடன் வழங்கும் நிறுவனங்கள் தங்கள் செயல்முறையை மிகவும் தொழில்முறையும் மற்றும் பொறுப்புடன் மேற்கொள்ள வேண்டும் என ஆர்பிஐ விரும்புகிறது.
மேலும் படிக்க | குட் நியூஸ்... ரெப்போ விகிதத்தை குறைத்தது RBI... வீடு, வாகன கடன் EMI குறையும்
மேலும் படிக்க | SWP: ஓய்வுக்கு பிறகு மாதம் ரூ.1 லட்சம் வருமானம் கிடைக்க உதவும் பரஸ்பர நிதியம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









