தூய்மை பணியாளருக்கு ரூ.1 லட்சம் சம்பளம்! ஐடி வேலையை விட்டுவிட்டு வேலை பார்க்கும் இந்தியர்..

Indian Engineer Sweeps Streets In Russia : இந்தியாவை சேர்ந்த ஐடி ஊழியர் ஒருவர், ரஷ்யாவில் தூய்மை பணியாளராக வேலை செய்வதாக வெளியாகி இருக்கும் செய்தி, பெரும் விவாதத்தை கிளப்பியிருக்கிறது. இது குறித்த முழு தகவல்களை இங்கு பார்ப்போம்.  

Written by - Yuvashree | Last Updated : Jan 10, 2026, 03:57 PM IST
  • ரஷ்யாவில் தெரு பெருக்கும் இந்தியர்
  • மாதம் ரூ.1 லட்சம் சம்பளம்
  • முழு விவரம், இதோ
தூய்மை பணியாளருக்கு ரூ.1 லட்சம் சம்பளம்! ஐடி வேலையை விட்டுவிட்டு வேலை பார்க்கும் இந்தியர்..

Indian Engineer Sweeps Streets In Russia : கடந்த சில ஆண்டுகளாகவே, ஐடி துறையில் பலரை பணி நீக்கம் செய்து வருவது வாடிக்கையாகி வருகிறது. அதிலும், ஏஐ-ன் ஆதிக்கம் இப்போது அதிகரித்து விட்டதால், அந்த வேலை நீக்கம் இன்னும் தீவிரமாகவே நடைப்பெற்று வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை, 2025ஆம் ஆண்டில் டிசிஎஸ் உள்ளிட்ட முக்கிய ஐடி சேவை நிறுவனங்கள் பணியாளர்களை வேலையில் இருந்து தூக்கின. இதனால், சாப்ட்வேர் துறையில் இருக்கும் பலர், வெவ்வேறு துறைகளை தேடி வருகின்றனர். இந்த நிலையில், இந்தியாவை சேர்ந்த ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர், ரஷ்யாவில் தூய்மை பணியாளராக வேலை செய்து வருவதாக வெளியாகியிருக்கும் தகவல், விவாதத்தை கிளப்பியிருக்கிறது.

Add Zee News as a Preferred Source

இந்திய இளைஞர்:

இந்தியாவை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியராக இருப்பவர், முகேஷ் மண்டல். 26 வயதான இவர், ரஷ்யாவில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் நகரில் உள்ள தெருக்களை சுத்தம் செய்யும் வேலையை செய்து வருகிறார். இந்த வேலைக்காக இவருக்கு, மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பளமாக கிடைக்கிறதாம். இதனை, ரஷ்ய செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்திருக்கிறது.

ரஷ்யாவில், தற்போது ஊழியர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால், இந்தியாவிலிருந்து ஊழியர்களை ரஷ்யா வேலைக்கு எடுத்து வருகிறது. அப்படி, இந்தியாவில் இருந்து இந்த 26 வயது இளைஞரான முகேஷ் மண்டலும் எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. 

இவரது வேலை என்னவென்றால், சாலை பராமரிப்புதான். குறிப்பிட்ட சில தெருக்களை தூய்மையாகவும், சுத்தமாகவும் வைத்துக்கொள்வது இவருடைய பொறுப்பாக இருக்கிறது. இவர், இதற்கு முன்பு இந்தியாவில் சாப்ட்வேர் டெவலப்பராக வேலை செய்து வந்தாராம். இந்தியாவில் இருந்த போது அவர் மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்களில் வேலை பார்த்துள்ளாராம். 

ரஷ்யாவில் இவருக்கு சுமார் ரூ.1 லட்சம் சம்பளத்தில் அவருக்கு வேலையும் கொடுத்து, தங்குவதற்கு இடம், சாப்பிடுவதற்கு உணவு, வேலையில் இருக்கும் போது அணிய வேண்டிய உபகரணங்கள், தினமும் தங்குமிடத்தில் இருந்து வேலை செய்யும் இடத்திற்கு போக்குவரத்து வசதி உள்ளிட்ட பல விஷயங்கள் அவருக்கு வழங்கப்படுகிறது. இவரைப்போல பலரும் தூய்மை பணியாளர்களாக இங்கு இருக்கின்றனர்.

ரஷ்யாவில் வேலை பார்ப்பவர்கள்..!

முகேஷ் மண்டல் போலவே, விவசாயிகள், ஓட்டுநர்கள், சிறு வணிக உரிமையாளர்கள், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட பலவேறு பிரிவுகளில் இந்தியாவில் வேலை பார்த்து வந்தவர்கள், தான் எந்த வேலை செய்கிறோம் என்பதை மனதில் கொள்ளமால், கையில் கிடைக்கும் வேலையை ரஷ்யாவில் செய்கின்றனர். இப்படி கையில் கிடைக்கும் வேலையில் சேர, ரஷ்யாவிற்கு வருபவர்கள் கொஞ்ச நாட்கள் வேலை பார்த்துவிட்டு, காசு சேர்ந்த பின்னர் தங்களின் தாயகம் திரும்பி விடுவார்களாம். 

மேலும் படிக்க | பிஎம் கிசான் : இ-மித்ரா செயலி அப்டேட்! தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு முக்கிய தகவல்

மேலும் படிக்க | அடல் ஓய்வூதியத் திட்டம்: மாதம் ரூ.5,000 ஓய்வூதியம்... பதிவு செய்ய இந்த ஆவணங்கள் இருந்தால் போதும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News