)
IRCTC Latest News: நாட்டில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில்வே. நீண்ட தூர பயணங்களுக்கு மக்கள் பெரும்பாலும் ரயில்களிலேயே பயணம் மேற்கொண்டு வருகின்றனர். டிக்கெட் கட்டணம் குறைவு, படுக்கை வசதி, கழிவறை வசதி போன்றவை இருப்பதால் பயணிகள் ரயில்களில் பயணிக்க விரும்புகின்றனர். ரயில்களில் கீழ் பெர்த் என்பது எப்போது பெரும் பிரச்னையாகவே இருக்கிறது. ரயில் பயணங்களின்போது, அனைவரும் கீழ் பெர்த்தில் பயணிக்கவே விரும்புகின்றனர். ஆனால், இந்திய ரயில்வே மூத்த குடிமக்கள், 45 வயதுக்கும் மேற்பட்ட பெண்கள், கர்ப்பிணிகளுக்கு மட்டுமே கீழ் பெர்த்தை ஒதுக்கியுள்ளது.
ஆனால், பல நேரங்களில் வயதானவர்கள், கர்ப்பிணிகளுக்கு கீழ் பெர்த் கிடைக்காமல் இருக்கிறது. இதனால், அவர்கள் பயணித்தின்போது கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால், சக பயணிகளிடம் கீழ் பெர்த் கிடைப்பதற்கு அவர்களிடம் கோரிக்கை வைக்கும் சூழலே உள்ளது. எனவே, இந்திய ரயில்வே கீழ் பெர்த் இருக்கை தொடர்பாக விதிகளை கடுமையாக மாற்றி அமைத்துள்ளது. இதன் மூலம், மூத்த குடிமக்கள், கர்ப்பிணிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கீழ் பெர்த்த கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
இந்த புதிய விதிகளின்படி, ரயில் டிக்கெட் முன்பதிவில் கீழ் பெர்த் இருக்கைகள் கர்ப்பிணிகள், 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இவர்களுககு தானாகவே லோயர் பெர்த்தை ஒதுக்கும் வகையில், ரயில் டிக்கெட்டில் முன்பதிவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. டிக்கெட் சரிபார்ப்பு ஊழியர்களுக்கு, நடுத்தர அல்லது மேல் பெர்த் ஒதுக்கப்பட்ட மூத்த குடிமக்களுக்கு காலியாக உள்ள கீழ் பெர்த்களை ஒதுக்கவும் அதிகாரம் உண்டு.
மேலும், எப்போது டிக்கெட் முன்பதிவு செய்தாலும் கீழ் பெர்த் கிடைக்கும் என்பதை சொல்ல முடியாது. நீங்கள் டிக்கெட் புக் செய்யும்போது, லோயர் பெர்த் கிடைக்காமல், மீடில் அல்லது அப்பர் பெர்த் கூட ஒதுக்கப்படலாம். இதுபோன்ற சூழலில், மூத்த குடிமக்களுக்கு லோயர் பெர்த் ஒதுக்கும் அதிகாரம் டிடிஆர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மூத்த குடிமக்கள், பெண்கள், கர்ப்பிணிகளுக்கு லோயர் பெர்த் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.
அதேபோல, ரயில்களில் லோயர் பெர்த் மற்றும் மீடில் பெர்த் கிடைத்தவர்கள் எப்போது வேண்டுமானாலும் தூங்கலாம் என்று இல்லை. தூங்குவதற்கான நேரத்தையும் இந்தியன் ரயில்வே கொண்டு வந்துள்ளது. அதன்படி, இரவு 10:00 மணி முதல் காலை 6:00 மணி வரை தூங்கும் வசதி கிடைக்கும். மற்ற நேரங்களில் அமரும் வசதி மட்டும் கிடைக்கும்.
ஆர்ஏசி சீட்களை பொறுத்தவரை, சைட் அப்பர் பெர்த் கிடைத்தவர்கள் கீழ் பெர்த் இருக்கையில் உள்ள பயணிகளுடன் பகல் நேரத்தில் மட்டுமே பகிர்ந்து கொள்ள முடியும். இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை சைட் அப்பர் பெர்த்தில் உள்ள பயணிகள், கீழ் பெர்த் படுக்கையை உரிமை கோர முடியாது என ரயில்வே தெரிவித்துள்ளது. அந்த நேரம் கீழ் பெர்த்தில் உள்ளவர்கள் தூங்குவதற்காகவே ஒதுக்கப்பட்டுள்ளது என ரயில்வே தெளிவுப்படுத்தியுள்ளது. இதன் மூலம், ரயில்களில் தூங்கும் நேரத்தை இந்தியன் ரயில்வே விளக்கியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ