மே 1 முதல்... இனி இவர்கள் முன்பதிவு பெட்டியில் பயணிக்க கூடாது - ரயில்வே அதிரடி

Indian Railways: இனி இந்த பயணிகள் முன்பதிவு பெட்டிகளான படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் மற்றும் ஏசி பெட்டிகளில் பயணிக்க தடை விதித்து இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Apr 29, 2025, 12:44 PM IST
  • இது வரும் மே 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
  • லட்சக்கணக்கானோர் தினமும் ரயில்வேயில் பயணிக்கின்றனர்.
  • ஆயிரக்கணக்கான ரயில்கள் தினமும் இயக்கப்படுகின்றன.
மே 1 முதல்... இனி இவர்கள் முன்பதிவு பெட்டியில் பயணிக்க கூடாது - ரயில்வே அதிரடி

Indian Railways: இந்தியன் ரயில்வே தான் நாட்டின் பொருளாதாரம் மற்றும் போக்குவரத்தின் முதுகெலும்பாக திகழ்கிறது. நீங்கள் குறைந்த செலவில் நீண்ட தூரம் பயணிக்க விரும்பினால் உங்களின் சிறந்த ஆப்ஷன் ரயிலாக தான் இருக்கும். மாவட்டத்திற்குள்ளும், மாநிலத்திற்குள்ளும் பயணிக்கவும் ரயில் போக்குவரத்து பெரியளவில் பயனளிக்கிறது. 

Add Zee News as a Preferred Source

நாட்டின் வர்த்தகம், வணிகம், தொழில்மயமாக்கல் ஆகியவற்றுக்கு ரயில்வே துறை முக்கிய பங்காற்றுகிறது எனலாம். தினமும் லட்சக்கணக்கான பயணிகள் இந்தியன் ரயில்வேவை பயன்படுத்துகின்றனர். இதனால், ரயில்வே குறித்த தகவல்களை அறிந்துகொள்ளவும் பலரும் விரும்புகின்றனர்.

Indian Railways: மே 1ஆம் தேதி முதல்...

அந்த வகையில், இந்தியன் ரயில்வே தற்போது பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. மேலும் வரும் மே 1ஆம் தேதி முதல் இந்த அறிவிப்பு செயல்பாட்டுக்கு வருகிறது என்றும் இது கடுமையாக அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இனிமேல் பயணிகள் தங்களின் பெயர் காத்திருப்பு பட்டியலில் இருந்தால் படுக்கை வசதிக்கொண்ட முன்பதிவு பெட்டியில் பயணம் செய்யக்கூடாது என்றும் முன்பதிவில்லாத பொதுப்பெட்டியில்தான் பயணிக்க வேண்டும் என்றும் இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.

அதாவது, ஒருவர் ஆன்லைன் வழியாக டிக்கெட் எடுத்து, அவரது பெயர் காத்திருப்பு பட்டியலில் இருந்தால் தானாகவே அந்த டிக்கெட் ரத்தாகிவிடும், நீங்கள் முழு டிக்கெட் பணமும் உங்களது வங்கிக் கணக்கிற்கே திரும்பி வந்துவிடும். இந்த டிக்கெட்டை வைத்து நீங்கள் பயணித்தால், டிக்கெட் இல்லாமல் பயணிப்பதாகவே எடுத்துக்கொள்ளப்படும். அபராதம் செலுத்த நேரிடும். 

Indian Railways: கவுண்டரில் எடுத்த டிக்கெட்...

மறுபுறம், ரயில் நிலையத்தின் டிக்கெட் கவுண்டரில் முன்பதிவு செய்து, சார்ட் தயாரான பின்னரும் அந்த டிக்கெட் காத்திருப்பு பட்டியலில் இருந்தால், பலரும் முன்பதிவு பெட்டிகளில் (Sleeper or AC Coaches) ஏறிவிடுகின்றனர். ஆனால், இதற்கு தான் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. சார்ட் தயாரான பின்னரும் உங்கள் டிக்கெட் காத்திருப்பு பட்டியலில் இருந்தால் உங்களுக்கு முன்பதிவு பெட்டியில் பயணம் செய்ய அனுமதியில்லை என அர்த்தம். 

Indian Railways: டிக்கெட் பரிசோதகருக்கு முழு அதிகாரம்

வரும் மே 1ஆம் தேதி முதல் காத்திருப்புப் பட்டியல் டிக்கெட்டுடன் பயணி ஒருவர் படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் மற்றும் ஏசி பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு தடை விதிக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காத்திருப்புப் பட்டியல் டிக்கெட்டுடன் ஒரு பயணி குறிப்பிட்ட இந்த முன்பதிவு பெட்டிகளில் இருக்கையில் அமர்ந்திருப்பது கண்டறியப்பட்டால், டிக்கெட் பரிசோதகர் அந்த பயணியிடம் அபராதம் விதிப்பார் அல்லது பொதுப் பெட்டிக்கு மாற்றுவார்.

Indian Railways: எதனால் இந்த மாற்றம்?

"ரயிலில் முன்பதிவு உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளைக் கொண்ட பயணிகளின் வசதியை உறுதிசெய்யவே இந்த விதி செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் டிக்கெட் வைத்திருப்பவர்கள், காத்திருப்பு பட்டியிலில் இருப்பவர்களால் எந்த அசௌகரியமும் ஏற்படாது" என ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். காத்திருப்பு பட்டியலில் இருக்கும் பயணிகள் முன்பதிவு பெட்டிகளில் ஏறி, இருக்கைகளை ஆக்கிரமிப்பு செய்வதால் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளை வைத்திருப்பவர்களுக்கு அசௌகரியம் ஏற்படுவது மட்டுமின்றி, பயணிகள் இடையே பிரச்னைகளும் வெடிக்கின்றன. இதை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ரயிலிலும் வந்தாச்சு ATM... இனி உங்களுக்கு பணப் பிரச்னையே வராது...!

மேலும் படிக்க | தட்கல் புக்கிங் செய்ய சரியான நேரம் எது தெரியுமா? இந்த தவறுகளை பண்ணாதீங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News