Citizenship By Investment: ரூ.1 கோடிக்கும் குறைவாக முதலீடு செய்து இந்திய குடிமக்கள் எந்தெந்த நாடுகளில் குடியுரிமை பெறலாம்? எத்தனை மாதங்களில் குடியுரிமை? அதற்கான வழிமுறை என்ன? போன்ற விவரங்களை பார்ப்போம்.

Citizenship By Investment: இந்தியர்கள் சட்டப்பூர்வமாக குடியுரிமை வாங்கக்கூடிய சில நாடுகள் குறித்து பார்ப்போம். இங்கு குடியுரிமை வாங்க எந்த வெளிநாட்டு வரியும் செலுத்த வேண்டிய அவசியமில்லை. ஆனால் சுமார் ரூ.1 கோடிக்கும் குறைவாக முதலீடு செய்வதன் மூலம் எந்த சொத்தும் வாங்காமலேயே நீங்கள் குடியுரிமை பெறலாம். இந்திய குடிமக்கள் எந்தெந்த நாடுகளில் குடியுரிமை பெறலாம்? எத்தனை மாதங்களில் குடியுரிமை? அதற்கான வழிமுறை என்ன? போன்ற விவரங்களை பார்ப்போம்.
இந்தியர்கள் சட்டப்பூர்வமாக குடியுரிமை வாங்கக்கூடிய 9 நாடுகள் பட்டியலை பார்ப்போம். வரி (Foreign Tax) செலுத்த வேண்டிய அவசியமில்லை, ஆனால் குடியுரிமை வாங்க நினைத்தால், அந்த நாட்டில் ரூ.1 கோடிக்கும் குறைவாக முதலீடு செய்ய வேண்டியிருக்கும். இருப்பினும், இந்தியா இரட்டை குடியுரிமையை அனுமதிக்காததால், உங்கள் இந்திய பாஸ்போர்ட்டை நீங்கள் விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
டொமினிகா (Dominica)
இங்கு குறைந்தபட்சம் ரூ.76 லட்சத்தை நன்கொடையாக வழங்குவதன் மூலம் குடியுரிமை பெறலாம். 3 முதல் 6 மாதங்களில் குடியுரிமை கிடைக்கும். இதற்காக நீங்கள் எந்த விசாரணையையும் மேற்கொள்ள வேண்டியதில்லை. நீங்கள் டொமினிகாவில் சொந்த வீடு வாங்காவிட்டாலும், உங்களுக்கு குடியுரிமை கிடைக்கும். கல்வித் தகுதி மற்றும் மொழித் தடையும் இல்லை. பணத்தை முதலீடு செய்து குடியுரிமை பெறலாம். அதன் பிறகு நீங்கள் விசா இல்லாமல் 145 நாடுகளுக்குப் பயணம் செய்யலாம்.
செயிண்ட் லூசியா (Saint Lucia)
இங்கும் குறைந்தபட்ச ரூ.76 லட்சம் முதலீடு செய்ய வேண்டும். அதன்பிறகு கோல்டன் விசாவிற்கு 4 முதல் 5 மாதங்கள் காத்திருக்க வேண்டும். இங்கு குடியுரிமை பெற எந்த வரியும் செலுத்த வேண்டிய அவசியமில்லை.
வனுவட்டு (Vanuatu)
இங்கு குடியுரிமை பெற, நீங்கள் குறைந்தது ரூ.80 லட்சம் முதலீடு செய்ய வேண்டும். 60 நாட்களுக்குள் உங்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்.
கிரெனடா (Grenada)
இங்கு குடியுரிமை பெற குறைந்தபட்சம் ரூ.95 லட்சம் முதலீடு செய்ய வேண்டும். அமெரிக்க E-2 விசா ஒப்பந்தத்தை அணுகக்கூடிய ஒரே சிபிஐ (Citizenship by Investment) நாடு இதுவாகும். கிரெனடாவில் குடியுரிமை பெற்றால், நீங்கள் அமெரிக்காவில் வசிக்கவும் வேலை செய்யவும் அனுமதி கிடைக்கும்.
ஆன்டிகுவா மற்றும் பார்புடா (Antigua and Barbuda)
இந்த நாட்டில் குடியுரிமை பெற்று வசிக்க விசாவிற்கு நீங்கள் குறைந்தபட்சம் ரூ.76 லட்சம் முதலீடு செய்ய வேண்டும்.
துருக்கி (Turkey)
அங்கு குடியுரிமை பெற குறைந்தபட்சம் 1 கோடி மதிப்புள்ள அசையா சொத்து உங்களிடம் இருக்க வேண்டும். இது முழு குடும்ப குடியுரிமையையும் மற்றும் ஐரோப்பா தொடர்பான பாஸ்போர்ட்டுகளுக்கான வசதியையும் வழங்குகிறது.
வடக்கு மாசிடோனியா (North Macedonia)
இங்கு குடியுரிமை பெற குறைந்தபட்சம் ரூ.92 லட்சம் முதலீடு செய்ய வேண்டும். இது ஐரோப்பாவின் பால்கன் பகுதிக்கான நுழைவாயில் என்றும் அழைக்கப்படுகிறது.
மால்டோவா (Moldova)
இந்த நாட்டில் வசிக்க வேண்டும் என்றால், விசாவிற்கு நீங்கள் குறைந்தபட்சம் ரூ.92 லட்சம் முதலீடு செய்ய வேண்டும். இது 120 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விசா இல்லாத பயணத்தை அனுமதிக்கிறது.
செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் (Saint Kitts and Nevis)
இந்த நாட்டின் குடியுரிமையைப் பெற நீங்கள் குறைந்தபட்சம் ரூ.92 லட்சம் முதலீடு செய்யலாம். சிறப்பு என்னவென்றால், இது உலகின் பழமையான முதலீட்டின் மூலம் குடியுரிமை (Citizenship by Investment) வழங்கும் நாடுகளில் ஒன்றாகும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ