பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்னும் நீண்ட கால முதலீட்டுத் திட்டம், ஓய்வு காலத்திற்கு தேவையான நிதியை சேமிக்க உதவும் ஒரு நிலையான வட்டி விகித முதலீட்டுத் திட்டமாகும். இதில் ஆண்டுதோறும் 7.1 சதவீத வட்டி கிடைக்கும். இது கூட்டு வட்டி என்பதால், பணம் எளிதில் பன்மடங்காகிறது. இந்த திட்டம் 15 ஆண்டுகள் முதிர்வு காலத்துடன் வருகிறது.அதன் பிறகு 5 ஆண்டுகளுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் நீட்டிக்கலாம். நீண்ட காலத்திற்கு, இந்தத் திட்டம் வரி இல்லாத ஓய்வூதிய நிதியை உருவாக்குவதற்கு மட்டுமல்லாமல், மாதத்திற்கு வரி இல்லாத வருமானத்தையும் பெற இந்த முதலீட்டை பயன்படுத்தப்படலாம்.
PPF மூலம் ரூ.78,00,000 வரி இல்லாத நிதி
PPF திட்டத்தின் மூலம் செய்யப்படும் வழக்கமான முதலீட்டின் மூலம் 55 வயதில் ரூ.78,00,000 மதிப்பிடப்பட்ட வரி இல்லாத நிதியையும், வாழ் முழுவதும் மாதம் ரூ.49,000 என்ற அளவிலான வருமானத்தையும் ஈட்ட முடியும். அது எப்படி சாத்தியமாகும் என்பதை இந்த கட்டுரையில் அறிந்து கொள்ளலாம்.
PPF முதலீட்டின் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வைப்புத்தொகை
PPF என்னும் பொது வருங்கால வைப்பு நிதி கணக்கை ஒரு வங்கி அல்லது தபால் நிலையத்தில் குறைந்தபட்சம் ரூ.500 முதலீட்டில் திறக்கலாம். PFF கணக்கில், ஒரு நிதியாண்டில் அதிகபட்ச வைப்புத்தொகை ரூ. 1.50 லட்சம்.
பிபிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை எடுப்பதற்கான நிபந்தனைகள்
பிபிஎஃப் கணக்கு 15 ஆண்டுகள் முதிர்வு காலத்துடன் வருகிறது. ஆனால் கணக்கு திறக்கப்பட்ட ஆண்டைத் தவிர்த்து, 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஒவ்வொரு நிதியாண்டிலும் 1 முறை திரும்பப் பெறலாம். திரும்பப் பெறப்படும் தொகை முந்தைய 4வது ஆண்டின் இறுதியில் அல்லது முந்தைய ஆண்டின் இறுதியில், எது குறைவாக இருக்கிறதோ அது வரை உள்ள இருப்பில் 50 சதவீதம் வரை இருக்க வேண்டும்.
பிபிஎஃப் முதிர்வு விதிகள்
15 ஆண்டுகள் முதிர்வு காலத்திற்குப் பிறகு, முழு பிபிஎஃப் தொகையையும் திரும்பப் பெறலாம்.
கணக்கு வைத்திருப்பவர் விரும்பினால், அவர்கள் கணக்கை 5 ஆண்டுகள் என்ற அளவில் நீட்டிக்கலாம். நீட்டிப்பின் போது, உங்கள் நிலை மற்றும் வசதிக்கு ஏற்ப பிபிஎஃப் கணக்கில் முதலீட்டை தொடரலாம் அல்லது தொடராமல் இருக்கலாம். இருப்பினும், இரண்டு சந்தர்ப்பங்களிலும், அவர்கள் தொடர்ந்து வட்டித் தொகையைப் பெறுவார்கள்.
முதிர்வுக்குப் பிறகு பிபிஎஃப் கணக்கில் உள்ள பணத்தை திரும்பப் பெறும் விதிகள்
வைப்புகள் இல்லாத நீட்டிக்கப்பட்ட கணக்கில், ஒவ்வொரு நிதியாண்டிலும் 1 முறை எடுக்கலாம். அதே போன்று நீட்டிக்கப்பட்ட PPF கணக்கில் வைப்புத்தொகையுடன், ஒவ்வொரு நிதியாண்டிலும் 1 முறை பணம் எடுக்கலாம். இது 5 வருட கால முதிர்வு நேரத்தில் இருப்பு கிரெடிட்டில் அதிகபட்சமாக 60 சதவீத வரம்பிற்கு உட்பட்டது.
ரூ.49,000 மாத வருமானம் தரும் PPF கணக்கீடுகள்
முதலீட்டாளர் தனது 55 வயதில் PPF திட்டத்தில் ஒரு வழக்கமான முதலீடு எவ்வாறு ரூ.78,00,000 மதிப்பிடப்பட்ட வரி இல்லாத கார்பஸை உருவாக்குகிறது என்பதையும், அடுத்த ஆண்டு முதல் அவர்கள் வாழ்நாள் முழுவதும் ரூ.49,000 மதிப்பிடப்பட்ட மாத வருமானத்தை எவ்வாறு பெறலாம் என்பதையும் கணக்கிடுவோம்.
PPF கணக்கில் 15 ஆண்டுகளுக்கு ரூ.1.5 லட்சம் முதலீடு
முதலீட்டாளர் ஏப்ரல் 1-5 க்கு இடையில் 15 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு நிதியாண்டிலும் ரூ.1,50,000 முதலீட்டைச் செய்யலாம். 15 ஆண்டுகளில், மொத்த முதலீடு ரூ.22,50,000 ஆகவும், மதிப்பிடப்பட்ட வட்டி ரூ.18,18,209 ஆகவும், மதிப்பிடப்பட்ட கார்பஸ் ரூ.40,68,209 ஆகவும் இருக்கும்.
5 - 5 ஆண்டுகள் என்ற அளவில் 3 PPF கணக்கை நீட்டித்தல்
முதிர்வு காலத்திற்கு பிறகு PPF கணக்கு வைத்திருப்பவர் தங்கள் கணக்கை தொடர்ச்சியாக 3 முறை நீட்டிக்க வேண்டும் - ஒவ்வொரு தொகுதிக்கும் 5 ஆண்டுகள் என மொத்தம் 15 ஆண்டுகள்.
ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் சேரும் நிதி அளவு விபரம்
20 ஆண்டுகளில், மொத்த முதலீடு ரூ. 30,00,000 ஆகவும், மதிப்பிடப்பட்ட வட்டி ரூ.36,58,288 ஆகவும், மதிப்பிடப்பட்ட நிதி ரூ. 66,58,288 ஆகவும் இருக்கும்.
25 ஆண்டுகளில், மொத்த முதலீடு ரூ. 37,50,000 ஆகவும், மதிப்பிடப்பட்ட வட்டி ரூ.65,58,015 ஆகவும், மதிப்பிடப்பட்ட நிதி ரூ. 1,03,08,015 ஆகவும் இருக்கும்.
30 ஆண்டுகளில், மொத்த முதலீடு ரூ.45,00,000 ஆகவும், மதிப்பிடப்பட்ட வட்டி ரூ.1,09,50,911 ஆகவும், மதிப்பிடப்பட்ட கார்பஸ் ரூ.1,54,50,911 ஆகவும் இருக்கும்.
PPF கணக்கில் சேரும் கார்ப்ஸ்
அந்த கட்டத்தில், முதலீட்டாளர் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கலாம். அதோடு, முதலீடு செய்வதை நிறுத்தி விட்டு தங்கள் 50 சதவீத PPF கார்பஸை திரும்பப் பெறலாம். மதிப்பிடப்பட்ட திரும்பப் பெறப்பட்ட கார்பஸ் ரூ.77,25,455.5 ஆக இருக்கும். இங்கே, ஒரு நபர் தனது PPF முதலீட்டை 25 வயதில் தொடங்கினால், அவர்கள் 55 வயதில் இந்த தொகையை திரும்பப் பெறலாம். இப்போது, அவர்கள் ரூ.77,25,455.5 கார்பஸை ஒரு வருடத்திற்கு 7.1 சதவீத வட்டி விகிதத்தில் வளர அனுமதிக்கலாம். இந்தத் தொகைக்கான வட்டி ரூ.5,48,507.34 ஆக இருக்கும். எனவே, திரட்டப்பட்ட நிதி ரூ.82,739,628.4 ஆக இருக்கும்.
ரூ.49000 மாத வருமானம்
சேர்க்கப்பட்ட நிதியிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையை மட்டும் எடுத்தால், ஆண்டுக்கு ரூ.5,87,451.36 திரும்பப் பெறலாம். இது மாதம் ரூ.48,954.28 என்ற வருமானத்திற்கு சமமாக இருக்கும். சுருக்கமாக சொன்னால், முதலீட்டாளர் தனது 56 வயதிலிருந்து ரூ.49,000 என்ற அளவில் வாழ்நாள் முழுவதும் வருமானம் பெறலாம்
வாழ்நாளுக்கு பிறகு PPF நிதி என்னவாகும்?
நீட்டிப்பு காலங்களில் அவர்கள் தங்கள் PPF கணக்கில் பங்களிக்காததால், அவர்கள் தங்கள் வாழ்நாளில் முழுத் தொகையையும் திரும்பப் பெறலாம் அல்லது இறந்த பிறகு அதை நாமினி அலல்து வாரிசுக்கு செல்லும்.
பொறுப்பு துறப்பு: எங்கள் கணக்கீடுகள் கணிப்புகள் மட்டுமே, முதலீட்டு ஆலோசனை அல்ல. பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டின் கடந்தகால வருமானம், எதிர்காலத்திலும் தொடரும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. SEBI அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகி ஆலோசித்த பின்னரே முதலீடு தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.
மேலும் படிக்க | ஆயிரங்களை கோடிகளாக்குவது எளிது தான்... உங்களுக்கு கை கொடுக்கும் 7 ஃபார்முலாக்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









