Investment Tips: கடின உழைப்பால் சம்பாதித்த பணத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்வதன் மூலம் பணத்தை பன்மடங்காக்கலாம். ஆம், உங்கள் வருவாயை அதிகரிக்கவும், உங்கள் சேமிப்பை வலுப்படுத்தவும், சரியான முதலீட்டின் மூலம் செல்வத்தை சேர்க்கவும் நீங்கள் கடைபிடிக்க வேண்டிய சில விஷயங்களைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ளலாம். நீங்களும் பணக்காரர் ஆக விரும்பினால், எதிர்காலத்தில் பணப் பற்றாக்குறை என்பதே இருக்கக் கூடாது என விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள 7 சூத்திரங்கள் உதவியுடன் உங்களுக்கு ஏற்ற திட்டங்களை கண்டறிந்து இன்றிலிருந்தே முதலீடுகளை தொடங்க வேண்டும் என்று உறுதி மொழியை எடுத்துக் கொள்ளுங்கள்.
சரியான திட்டமிடல் மூலம் ஆயிரங்களை கோடிகளாக்கலாம்
பணம் சம்பாதிப்பதற்கு குறுக்குவழி எதுவும் இல்லை என்பது உண்மை தான். ஆனால் சரியான திட்டமிடல் மற்றும் வழக்கமான முதலீடு மூலம், நிச்சயமாக கோடிகளில் நிதியை உருவாக்க முடியும். பணக்காரர் ஆவதற்கு, நிதி தொடர்பான முடிவுகளை விவேகத்துடன் எடுக்க வேண்டியது அவசியம். எஸ்ஐபி, மியூச்சுவல் ஃபண்ட் அல்லது பிபிஎஃப் போன்ற முதலீட்டு விருப்பங்களில் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்வதன் மூலம் வலுவான எதிர்காலத்திற்கான அடித்தளத்தை நீங்கள் அமைக்கலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள சில பார்முலாக்கள் இதனை சாத்தியமாக்கும்.
10-12-10 சூத்திரம் உதவும்
பணத்தை பன்மடங்காக்க விரும்பினால், நிச்சயமாக 10-12-10 விதி உங்களுக்கு உதவும். இந்த விதியின் கீழ், ஒவ்வொரு மாதமும் ரூ.10,000 முதலீடு செய்து ஆண்டுக்கு 12% வருமானம் பெற்றால், 10 ஆண்டுகளிலேயே சுமார் ரூ.23-24 லட்சம் வரை நிதியை உருவாக்கலாம். அதே சமயம் 10 ஆண்டுகளில், நீங்கள் ரூ. 1 கோடி நிதியை உருவாக்க விரும்பினால், ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ.43,000 முதலீடு செய்ய வேண்டும். பரஸ்பர நிதிய முதலீடுகளில் கூட்டு வட்டி வருமானத்தின் பலன் இருப்பதால் பணம் பன்மடங்காவது உறுதி.
40-40-12 ஃபார்முலா செய்யும் அதிசயங்கள்
அடுத்து வரும் 10 முதல் 20 ஆண்டுகளில் வலுவான நிதியை உருவாக்க விரும்பினால், 40-40-12 விதி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். உங்கள் மாதாந்திர வருமானத்தில் 40% சேமிப்பு மற்றும் முதலீடுகளுக்காக ஒதுக்க வேண்டும் என்றும், உங்கள் முதலீட்டு போர்ட்ஃபோலியோவில் 40% மியூச்சுவல் ஃபண்டுகள் அல்லது பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என்றும் இந்த விதி கூறுகிறது. நீங்கள் சராசரியாக 12% வருடாந்திர வருமானத்தைப் பெற்றால், உங்களிடம் பணத்திற்கு பஞ்சமே இருக்காது.
20-10-12 ஃபார்முலா மூலம் ரூ.1 கோடி நிதி
நீண்ட கால நிலையான முதலீடுகள் மூலம், கோடீஸ்வராக ஆவது கடினம் அல்ல. உங்களுக்கான உதாரணம் 20-10-12 விதி. இந்த ஃபார்முலாவின்படி, நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.10,000 முதலீடு செய்து, ஆண்டுக்கு 12% வருமானம் பெற்றால், 20 ஆண்டுகளில் சுமார் ரூ.1 கோடி நிதியை உருவாக்கலாம். எஸ்ஐபி முதலீடுகளில் கூட்டு வட்டி வருமானத்தின் பலன் இருப்பதால் பணம் பன்மடங்காவது உறுதி.
சிறந்த பட்ஜெட் சூத்திரமாக இருக்கும் 50-30-20 விதி
50-30-20 விதி ஒரு சிறந்த பட்ஜெட் சூத்திரமாகக் கருதப்படுகிறது. இந்த ஃபார்முலா மூலம், உங்கள் வருமானத்தை சரியாக நிர்வகிக்கலாம். வருமானத்தில் 50% தேவையான செலவுகளுக்கும், 30% பொழுதுபோக்கு மற்றும் வாழ்க்கை முறைக்கும், 20% சேமிப்பு மற்றும் முதலீட்டுக்கும் பயன்படுத்த வேண்டும் என்று இந்த விதி கூறுகிறது.
கோடீஸ்வரன் ஆக உதவும்15-15-15 ஃபார்முலா
15-15-15 விதியை கடைபிடிப்பது, எதிர்காலத்தில் ஒரு மில்லியனர் ஆக ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.15,000 முதலீடு செய்து, இந்த முதலீடு 15 வருடங்கள் தொடர்ந்தால், சராசரியாக 15% ஆண்டு வருமானம் கிடைக்கும் என்றால், நீங்கள் எளிதாக ரூ.1 கோடி நிதியை உருவாக்கலாம் என்று இந்த விதி கூறுகிறது.
சூத்திரம் 72 கூறுவது என்ன
உங்கள் பணம் இரட்டிப்பாவதற்கு எத்தனை வருடங்கள் ஆகும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமானால், 72 என்ற விதியை பின்பற்றவும். ஆம், பணத்தை இரட்டிப்பாக்குவதற்கான இந்த ஃபார்முலா மூலம் உங்கள் பணம் இரட்டிப்பாகும் காலத்தை அறிய பெரிதும் கை கொடுக்கும். ஆம், நீங்கள் பெறும் வட்டி விகிதத்தால் 72 ஐ வகுக்கவும். நீங்கள் 7% வட்டி வருமானம் தரும் திட்டத்தில் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், உங்கள் பணம் சுமார் 10.28 ஆண்டுகளில் இரட்டிப்பாகும்.
25x சூத்திரம் என்றால் என்ன
நீங்கள் முன்கூட்டியே ஓய்வு பெற விரும்பினால், 25X விதி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன்படி, உங்கள் வருடாந்திர செலவினத்தின் 25 மடங்குக்கு சமமான ஓய்வூதிய நிதி உங்களுக்குத் தேவைப்படும். உங்கள் ஆண்டுச் செலவு ரூ.4 லட்சமாக இருந்தால், ஓய்வுபெறும் போது உங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.1 கோடி நிதி தேவைப்படும். இந்த நிதிக்கு, SIP, NPS போன்றவற்றில் முதலீடு செய்யுங்கள்.
பொறுப்பு துறப்பு: எங்கள் கணக்கீடுகள் கணிப்புகள் மட்டுமே, முதலீட்டு ஆலோசனை அல்ல. பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டின் கடந்தகால வருமானம், எதிர்காலத்திலும் தொடரும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. SEBI அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகி ஆலோசித்த பின்னரே முதலீடு தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.
மேலும் படிக்க | SWP: ஓய்வுக்கு பிறகு மாதம் ரூ.1 லட்சம் வருமானம் கிடைக்க உதவும் பரஸ்பர நிதியம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









