)
Christmas Train Ticket Booking : நாட்டில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர். இதனால், ரயில்களில் எப்போது கூட்ட நெரிசல் அதிகமாகவே காணப்படும். குறிப்பாக, பண்டிகை நாட்கள், தொடர் விடுமுறை நாட்களில் சொல்லவே தேவையில்லை. அந்த அளவுக்கு ரயில்களில் கூட்டம் அலைமோதும்.
அதோடு இல்லாமல், பண்டிகை காலங்களில் ரயில்களில் டிக்கெட் கிடைப்பது குதிரை கொம்பாக உள்ளது. இதனால், கடைசி நேரங்களில் பயணிகள் தட்கலில் டிக்கெட் புக் செய்கின்றனர். ஆனால், அதுவும் சில பயணிகளுக்கு கேன்சல் செய்யப்பட்டு வருகிறது. எனவே, பண்டிகை நாட்களில் முன்கூட்டியே டிக்கெட் புக் செய்வது நல்லது.
இந்த நிலையில் தான், கிறிஸ்துமஸ் பண்டிகை, அரையாண்டு விடுமுறைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று (அக்டோபர் 25) தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை 2025 டிசம்பர் 25ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னதாக பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறையும் விடப்படுகிறது. இதனால், பயணிகள் பலரும் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.
எனவே, பண்டிகை நாட்கள், அரையாண்டு விடுமுறைக்காக ரயில்கள் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும். எனவே, கிறிஸ்துமஸ், அரையாண்டு விடுமுறையொட்டி, இன்று (அக்டோபர் 25) காலை 8 மணியளவில் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. 2025 டிசம்பர் 24, 25,26ஆம்தேதிக்கான ரயில் முன்பதிவு இன்று தொடங்கியது. பயணிகள் ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். முன்பதிவு செய்த சிறிது நேரத்திலேயே தென்மாவட்ட செல்லும் ரயில்களின் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. எனவே, பயணிகள் உடனே முந்திக்கொண்டு தங்களது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.
இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளமான WWW.IRCTC.CO.In அல்லது IRCTC செயலி மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். உங்களுக்கு தனி கணக்கை தொடங்க வேண்டும். அதன்பிறகு, உங்கள் பயணம் தொடங்கும் நாள், எங்கிருந்து, எங்கே வரை என்ற விவரங்களை நிரப்ப வேண்டும்.
மேலும், எத்தனை பேர் பயணம் மேற்கொள்கிறீர்கள், குளிர்சாதன பெட்டியா அல்லது சாதாரண பெட்டியா என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள். மேலும், பயணிகளின் பெயர் மற்றும் வயதை குறிப்பிட வேண்டும். ஏனென்றால் அதற்கு ஏற்ப பெர்த் ஒதுக்கப்படும். மூத்த குடிமக்களாக இருந்தால் அவர்களுக்கு ஏற்ப பெர்த் ஒதுக்கப்படும்.
இதன்பிறகு, டிக்கெட்டுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும். கட்டணத்தை நீங்கள் வெற்றிகரமாக செலுத்திவிட்டால் உங்களுக்கான டிக்கெட் முன்பதிவு செய்ததற்காக மெசேஜ் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக பண்டிகை நாட்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்துவிடும். இதனால், வெளியூர் செல்பவர்கள் கடைசி நேர சிரமத்தை தவிர்க்க உடனே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ