gold news today : தங்கத்தின் விலை நாளுக்குநாள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டிருக்கின்றன. இதனால் இந்தியர்கள் மத்தியில் தங்கம் இனி வாங்கவே முடியாமல் போய்விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது, ஏனெனில் அதிக விலை தங்கம் வாங்குவதை கடினமாக்கியுள்ளன. அதேநேரத்தில் ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்து வருவதால் தங்க நாணயங்கள் வாங்கும் போக்கு பிரபலமடைந்து வருகின்றன. ஏனெனில் வாடிக்கையாளர்கள் அவற்றை எளிதாக விற்பனை செய்யக்கூடிய குறைந்த ஆபத்துள்ள முதலீடாகக் கருதுகின்றனர்.
சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு, ஏப்ரல் 22 அன்று, இந்தியாவில் தங்கத்தின் விலை 10 கிராம் ரூ.1 லட்சத்தை எட்டியது. குறிப்பாக,கடந்த 1 வருடத்தில் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. உண்மையில், கடந்த 24 மாதங்களில் தங்கம் 70% -க்கும் அதிகமாகவும் உயர்ந்துள்ளது. 2020 ஆம் ஆண்டில், நீங்கள் ரூ.50,000 -க்கு பத்து கிராம் தங்கத்தை வாங்கியிருக்க முடியும். ஆனால், இன்று அந்த தொகைக்கு5 கிராம் மட்டுமே வாங்க முடியும். இருப்பினும், உங்கள் ஒட்டுமொத்த நிதித் திட்டத்தின் ஒரு பகுதியாக வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தங்கத்தை வாங்கிக்கொண்டு இருப்பதை வாடிக்கையாக வைத்துக் கொள்ள வேண்டும். உங்கள் பண வீக்கத்தை சமாளிக்க உதவும்.
ஆனால், ஆபரண தங்கம் வாங்கலாமா, தங்க நாணயங்கள் வாங்கலாமா? என்பதை நீங்கள் யோசித்து முடிவெடுக்க வேண்டும். நீங்கள் ஆபரண தங்கத்தை வாங்க விரும்பினால், நகைகள் 'தயாரிப்பு கட்டணங்களில்' 5 முதல் 20% வரை கூடுதலாக கொடுக்க வேண்டியிருக்கும். தங்கத்தை முதலீடாக நினைத்து வாங்குபவர்களுக்கு இந்த செலவு அவசியமற்றது. ஏனென்றால் இது உங்கள் மூலதன முதலீட்டு தொகையை அதிகமாக்குகிறது. எனவே, தங்க நாணயங்களை வாங்குவதைக் கருத்தில் கொள்ளலாம். தங்க நாணயங்கள் தூய தங்கத்தால் ஆனவை. அவை 0.5 கிராம் முதல் 100 கிராம் வரை பல்வேறு மதிப்புகளில் வருகின்றன, மேலும் 22 அல்லது 24 காரட் தூய்மை நிலைகளுடன் உள்ளன. அதுதான் அவற்றை மலிவு விலையில் வைத்திருக்க உதவுகிறது. அதாவது பணம் இருக்கும்போது 0.5 கிராம் கூட நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். கூடுதலாக, அதை பணமாக மாற்றுவதும் எளிதானது. உங்கள் பணப்புழக்கத் தேவைகளைப் பூர்த்தி செய்ய நீங்கள் அவற்றில் சிலவற்றை (தங்க நாணயங்களை) விற்பனை கூடசெய்து கொள்ள முடியும்.
பிபி ஜுவல்லர்ஸ் இயக்குனர் பியூஷ் குப்தா பேசும்போது “தங்க நாணயங்களுக்கு நிச்சயமாக அதிக தேவை உள்ளது, குறிப்பாக தங்க விலைகள் அதிகரித்து வருவதால். வாடிக்கையாளர்கள் அவற்றை ஒரு புத்திசாலித்தனமான, குறைந்த ஆபத்துள்ள முதலீடாகக் கருதுகின்றனர். இது தேவைப்படும்போது விற்கவும் எளிதானது. சிறப்பான விஷயம் என்னவென்றால், அவை பல்வேறு எடைகளில் வருகின்றன, எனவே சிறிய முதலீட்டாளர்கள் கூட அவற்றை வசதியாக வாங்க முடியும், ”என்று தெரிவித்துள்ளார். நல்ல கடைகளில் தங்க நாணயம் வாங்கினால் மட்டுமே அவற்றை மறுவிற்பனை மதிப்பு சிறந்ததாக இருக்கும் என்றும் அவர் அடிக்கோடிட்டு தெரிவித்துள்ளார்.
மேலும், தங்க நாணயங்களை எப்போது 24 காரட்டில் மட்டுமே வாங்குவது நல்லது என்கிறார் ஆஸ்பெக்ட் குளோபல் வென்ச்சர்ஸின் நிர்வாகத் தலைவருமான அக்ஷ காம்போஜ். தங்கம் விலை இன்னும் 15 விழுகாடு வரை உயரும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். எனவே, தங்கம் வாங்குவதை மக்கள் அதிகரிப்பதே நல்லது என்றும் கூறுகின்றனர். இதன் மூலம் பண வீக்கத்தை சமாளிக்கலாம் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
மேலும் படிக்க | தங்கம் விலை கிடுகிடுவென உயரும் இந்த நேரத்தில் தமிழ்நாடு அரசு கொடுத்த குட் நியூஸ்...!
மேலும் படிக்க | தங்க நகை இடுப்புக்கு கீழே அணியக்கூடாது, என் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









