)
Belated ITR: ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஏற்கனவே செப்டம்பர் 16 அன்று முடிவடைந்துவிட்டது. இந்த ஆண்டு 7 கோடிக்கும் மேற்பட்ட வரி செலுத்துவோர் தங்கள் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நெருங்கிக்கொண்டிருந்த வேளையில், பல வரி செலுத்துவோர் மற்றும் CA -க்கள் வருமான வரி போர்டலின் வேகம் மெதுவாக இருப்பதாகவும், அதில் குறைபாடுகள் இருப்பதாகவும் புகார் கூறினர். இந்த காரணங்களால் பலரால் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய முடியாமல் போனது.
வரி செலுத்துவோர் தங்கள் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வதற்கு வசதியாக, ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி செப்டம்பர் 15 -இலிருந்து செப்டம்பர் 16 ஆக நீட்டிக்கப்பட்டது. எனினும், ஏதோ ஒரு காரணத்தால், இன்னும் பலர் ஐடிஆர் தாக்கல் செய்யாமல் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் பிலேடட் ஐடிஆர், அதாவது வருமான வரி கணக்கை தாமதாமாக தாக்கல் செய்யலாம். அதாவது, காலக்கெடு கடந்துவிட்டதால், இனி ஐடிஆர் தாக்கல் செய்ய முடியாது என அர்த்தமல்ல.
உரிய தேதிக்குப் பிறகு தாக்கல் செய்யப்படும் ஐடிஆர் அனைத்தும் தாமதமான வருமான வரி கணக்கு தாக்கல் என்று அழைக்கப்படும்.
பிலேடட் ஐடிஆர் தாக்கல் பிரிவு 139(4) இன் கீழ் வழங்கப்படுவதாக வருமான வரித் துறை கூறுகிறது.
"பிரிவு 139(1) இன் கீழ் அனுமதிக்கப்பட்ட காலத்திற்குள் அல்லது பிரிவு 142(1) இன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பின் கீழ் அனுமதிக்கப்பட்ட காலத்திற்குள் வருமான அறிக்கையை சமர்ப்பிக்காத நபர்கள், தொடர்புடைய மதிப்பீட்டு ஆண்டு முடிவதற்கு 3 மாதங்களுக்கு முன்பு அல்லது மதிப்பீடு முடிவதற்கு முன், எது முந்தையதோ அந்த நேரத்தில் தொடர்புடைய ஆண்டிற்கான வருமான அறிக்கையையும் சமர்ப்பிக்கலாம்" என்று வருமான வரித் துறை கூறியுள்ளது.
- பிலேடட் ஐடிஆர், உரிய தேதிக்குப் பிறகும் வரி செலுத்துவோர் தாமதமாக ஐடிஆர் தாக்கல் செய்ய உதவுகிறது. இருப்பினும், தாமதமாக வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கு வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 234F இன் கீழ் அபராதம் விதிக்கப்படலாம்.
- பிரிவு 234F இன் படி, பிரிவு 139(1) இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கெடுவுக்குப் பிறகு வருமான வரி தாக்கல் செய்யப்பட்டால், தாமதமாக தாக்கல் செய்வதற்கான கட்டணமாக ₹5,000 வசூலிக்கப்படும்.
- இருப்பினும், நபரின் மொத்த வருமானம் ₹5 லட்சத்திற்கு மிகாமல் இருந்தால், செலுத்த வேண்டிய தாமதமான தாக்கல் கட்டணத்தின் அளவு ₹1,000 ஆகும்.
காலக்கெடு தேதிக்குப் பிறகு பிலேடட் ஐடிஆர்-ஐ ஆன்லைனில் தாக்கல் செய்வதற்கான படிப்படியான வழிகாட்டி இதோ:
ஸ்டெப் 1: அதிகாரப்பூர்வ வருமான வரி போர்ட்டலுக்குச் சென்று உங்கள் விவரங்கள் கொண்டு லாக் இன் செய்யவும்.
ஸ்டெப் 2: ‘இ-ஃபைல்’ செலக்ட் செய்து, பின்னர் ‘இன்கம் டேக்ஸ் ரிடர்ண்’ என்பதைத் தேர்ந்தெடுத்து, ‘வருமான வரி வருமானத்தை தாக்கல் செய்யவும்’ என்பதைக் கிளிக் செய்யவும்
ஸ்டெப் 3: தொடர்புடைய மதிப்பீட்டு ஆண்டை தேர்ந்தெடுத்து, தாக்கல் செய்யும் முறையை 'ஆன்லைன்' என தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டெப் 4: ஒரு புதிய ஃபைலிங்கைத் செய்யத் தொடங்கி, தனிநபர், HUF மற்றும் பல போன்ற உங்கள் பொருந்தக்கூடிய நிலையைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 5: உங்களுக்குப் பொருந்தக்கூடிய ஐடிஆர் படிவத்தைத் தேர்ந்தெடுக்கவும்
ஸ்டெப் 6: உங்கள் விவரங்களைச் சரிபார்க்க 'தனிப்பட்ட தகவல்' பிரிவில் கிளிக் செய்யவும்
ஸ்டெப் 7: கீழே சென்று தாக்கல் பிரிவில் 139(4) ஐத் தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டெப் 8: தொடர்புடைய பிரிவுகளின் கீழ் உங்கள் அனைத்து வருமான விவரங்களையும் அறிவித்து வரி செலுத்தத் தொடரவும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ