பொருளாதார வல்லுநர்கள் எஸ்ஐபி முதலீடு குறித்து குறிப்பிடுகையில், தற்போது சிறிது சரிவை சந்தித்தாலும், நீண்ட கால முதலீட்டில் அதிக லாபம் தரும் இடத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு, இதைவிட சிறந்த தேர்வு இருக்க முடியாது என்று கூறுகின்றனர்.

பங்குச்சந்தையில் கடந்த சில காலங்களாக, சரிவு நிலை காணப்படுவதால், முதலீட்டாளர்கள் மனத்தில் குழப்பமும் அச்சமும் நிறைந்துள்ளது. பரஸ்பர நிதிய முதலீடுகள் மிகவும் லாபகரமாக பார்க்கப்பட்ட நிலையில், இந்த சரிவு முதலீட்டைத் தொடர்வதா அல்லது கை விடுவதா என்ற சிந்தனையை மனதிற்குள் விதைத்துள்ளது.
எஸ்ஐபி பாதுகாப்பான முதலீடு தானா?
பொருளாதார வல்லுநர்கள் எஸ்ஐபி முதலீடு குறித்து குறிப்பிடுகையில், நீண்ட கால முதலீட்டில் அதிக லாபம் தரும் இடத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு, இதைவிட சிறந்த தேர்வு இருக்க முடியாது என்று கூறுகின்றனர். தற்போது சிறிது சரிவை சந்தித்தாலும், சந்தை உயரும் போது, கிடைக்கும் வருமானம் அதிகபட்சமாக இருக்கும் என்கின்றனர் வல்லுனர்கள். ஏனெனில் சரிவில் இருக்கும் போது நீங்கள் செய்யப்படும் முதலீட்டில், அதிக யூனிட்டுகள் வாங்கும் வாய்ப்பு கிடைக்கின்றது. எனவே குறுகிய கால நஷ்டம் குறித்து கவலைப்பட வேண்டியதில்லை என்று பொருளாதார வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.
சுமார் 30 சதவீத ஆண்டு வருமானம் கொடுத்த எஸ்பிஐ பரஸ்பர நிதியங்கள்
பரஸ்பர நிதியம் கடந்த மூன்று ஆண்டுகளில் எவ்வளவு வருமானத்தை கொடுத்துள்ளது என்பதை கணக்கிட்டு அறிவதன் மூலம், அந்த முதலீடு பாதுகாப்பானது தானா என்பதை கணித்து விடலாம். மேலும் கடந்த ஆறு மாதங்களாக, பங்குச்சந்தையில் சிறகு சரிவு காணப்படும் நிலையிலும் கூட, 30 சதவீத வருமானம் கொடுப்பது என்பது, சிறந்த பரஸ்பர நிதியம் என்பதற்கான வலுவான காரணமாக இருக்கும். அந்த வகையில் கடந்த மூன்று ஆண்டுகளில், சுமார் 30 சதவீத கொடுத்த அஸ்பர நிதியங்களை அறிந்து கொள்ளலாம்.
1. SBI PSU நிதி - நேரடித் திட்டம்
வகை: துறைசார்
3 ஆண்டு வருமானம் (CAGR): 29.76%
அளவுகோல்: BSE PSU TRI
நிதியின் மேலாண்மையின் கீழ் உள்ள சொத்துக்கள் (AUM): ரூ.4,149 கோடி
2. SBI நீண்ட கால ஈக்விட்டி நிதி - நேரடித் திட்டம்
வகை: ELSS
3 ஆண்டு வருமானம் (CAGR): 23.80%
அளவுகோல்: BSE 500 TRI
நிதியின் மேலாண்மையின் கீழ் உள்ள சொத்துக்கள் (AUM): ரூ.25,724 கோடி
3. SBI சுகாதார வாய்ப்புகள் நிதி - நேரடித் திட்டம்
வகை: துறைசார்
3 ஆண்டு வருமானம் (CAGR): 22.95%
அளவுகோல்: BSE சுகாதாரத் TRI
நிதியின் மேலாண்மையின் கீழ் உள்ள சொத்துக்கள் (AUM): ரூ.3,113 கோடி
4. SBI உள்கட்டமைப்பு நிதி - நேரடித் திட்டம்
வகை: துறைசார்
3 ஆண்டு வருமானம் (CAGR): 22.71%
அளவுகோல்: NIFTY உள்கட்டமைப்பு TRI
நிதியின் மேலாண்மையின் கீழ் உள்ள சொத்துக்கள் (AUM): ரூ.4,325 கோடி
5. SBI கான்ட்ரா ஃபண்ட் - நேரடித் திட்டம்
வகை: கான்ட்ரா ஃபண்ட்
3 ஆண்டு வருமானம் (CAGR): 22.06%
அளவுகோல்: BSE 500 TRI
நிதியின் மேலாண்மையின் கீழ் உள்ள சொத்துக்கள் (AUM): ரூ.39,590 கோடி
பரஸ்பர நிதிய முதலீட்டில் ஆயிரங்களை கோடிகள் ஆக்கலாம்
பரஸ்பர நிதிய முதலீட்டில், ஆயிரங்களை லட்சங்கள் ஆக்குவது மிக எளிது. இதற்கு காரணம் இதில் கிடைக்கும் சிறந்த வருமானமும், கூட்டு வட்டியின் பலனும் தான். அதோடு இதில் இளமையிலேயே முதலீட்டை தொடங்குது, ஓய்வு காலத்திற்கான நிதியை சிறப்பாக சேமிக்க உதவும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையின் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே தவிர, முதலீட்டு ஆலோசனைகளை வழங்குவது அல்ல. பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டின் கடந்தகால வருமானம், எதிர்காலத்திலும் தொடரும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. SEBI அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகி ஆலோசித்த பின்னரே முதலீடு தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ