SBI MCLR Rate: ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) 2025 டிசம்பர் 15 மற்றும் 2025 ஜனவரி 15, 2025 க்கு இடைப்பட்ட காலத்திற்கான நிதி அடிப்படையிலான கடன் விகிதங்களின் (MCLR) சமீபத்திய மார்ஜினல் செலவுகளை அறிவித்துள்ளது. தற்போதையை MCLR டிசம்பர் 15, 2024 முதல் அமலுக்கு வருகிறது. வீட்டுக் கடன்கள் மற்றும் தனிநபர் கடன்கள் உட்பட பல்வேறு கடன்களின் மீதான வட்டி விகிதங்களை MCLR விகிதம் பாதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதிய MCLR விகிதங்கள் குறித்து வங்கியில் இருந்து அறிவிப்பு வெளியிடப்பட்ட தகவல்


வங்கியின் MCLR என்பது வங்கி அதன் கடன் விகிதங்களை நிர்ணயிக்கும் குறைந்தபட்ச விகிதமாகும். இதில் ஏற்படும் மாற்றங்கள் இஎம்ஐ தொகையில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. ஒரு வங்கி கடன் வழங்க அனுமதிக்கப்படும் மிகக் குறைந்த கடன் விகிதம், நிதி அடிப்படையிலான கடன் விகித செலவுகள் (Marginal Cost of funds-based Lending Rate - MCLR) அடிப்படையிலானது.


EMI என்றால் என்ன?


EMI என்பது சமமான மாதாந்திர தவணைகளைக் குறிக்கிறது. இந்த தவணை அசல் மற்றும் வட்டி தொகையை உள்ளடக்கியது.


எஸ்பிஐயின் புதிய MCLR விகிதங்கள்


எஸ்பிஐ புதிய MCLR விகிதங்களை அறிவித்துள்ளது. புதிய விகிதங்கள் 15 டிசம்பர் 2024 முதல் 15 ஜனவரி 2025 வரை பொருந்தும். புதிய விகிதங்களைப் பார்க்கும் போது, வங்கி அதில் மாற்றம் ஏதும் செய்யாமல் அப்படியே வைத்துள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம். இதனால், கடன் விகிதங்கள் மற்றும் இ எம் ஐ தொகையில் மாற்றம் ஏதும் இருக்காது.


மேலும் படிக்க | EPFO முக்கிய மாற்றங்கள் விரைவில்: ஊதிய உச்சவரம்பில் ஏற்றம், ஓய்வூதியம் அதிகரிக்கும்... தயாராகும் அரசு


பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியான தகவலில், ஒரு இரவுக்கான கடன்களுக்கான MCLR 8.2 சதவீதம் என்ற அளவிலும் 1 மாத கடன்களுக்கான MCLR விகிதம் 8.2 சதவீதம் என்ற அளவிலும், 3 மாத கடன்களுக்கான MCLR விகிதம் 8.55 சதவீதம் என்ற அளவிலும், 6 மாத கடன்களுக்கான MCLR விகிதம் 8.90 சதவீதம் என்ற அளவிலும் மற்றும் 1 ஆண்டு கால கடன்களுக்கான MCLR விகிதம் 9.00 சதவீதம் என்ற அளவிலும் இருக்கும். இவை தவிர 2 ஆண்டுகால கடன்களுக்கான MCLR விகிதம் 9 சதவீதம் என்ற அளவிலும் 3 ஆண்டு கால கடன்களுக்கான MCLR விகிதம் 9.1 சதவீதம் என்ற அளவிலும் இருக்கும். 


EMI மீதான தாக்கம் 


MCLR என்பது எந்த வங்கியும் கடன்களை வழங்குவதற்கான குறைந்தபட்ச விகிதமாகும். அதாவது, எம்சிஎல்ஆர் எவ்வளவு அதிகரிக்கிறதோ, அந்த அளவுக்கு கடனுக்கான வட்டியும் அதிகரிக்கும். MCLR விகிதங்களின் அதிகரிப்பு காரணமாக, ரீசெட் தேதியில் கடன் வாங்குபவர்களின் EMI அதிகரிக்கிறது. இருப்பினும், SBI MCLR விகிதங்களை அதிகரிக்காமல் வாடிக்கையாளர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.


மேலும் படிக்க | EPFO புத்தாண்டு பரிசு: PF உறுப்பினர்களுக்கு காத்திருக்கும் 3 குட் நியூஸ்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ