Gold Price Forecast Tamil | தங்கம், வெள்ளியில் முதலீடு செய்ய இதுதான் சரியான நேரமா? அடுத்த 6 மாத கணிப்பு!

Gold Price Forecast Tamil: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு மற்றும் முதலீட்டாளர்களின் முதலீட்டு மாற்றம் காரணமாக தங்கத்தின் விலை தற்காலிகமாகக் குறைந்துள்ளது. தங்கம் விலை ரூ.10,000-க்குக் கீழ் குறையும் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், நீண்ட கால அடிப்படையில் விலை உயரும் என்றே நிபுணர்கள் கணிக்கின்றனர்.

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 6, 2026, 02:18 PM IST
  • கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டால் முதலீட்டாளர்கள் தங்கத்திலிருந்து முதலீட்டை மாற்றியதே தற்போதைய விலை குறைவுக்குக் காரணம்.
  • தங்கம் விலை ஒரு சவரன் ₹1,25,000 மற்றும் வெள்ளி ₹4-5 லட்சம் வரை உயர வாய்ப்பு.
  • தங்கம் விலை வீழ்ச்சி என்பது தற்காலிகமானது; நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.
Gold Price Forecast Tamil | தங்கம், வெள்ளியில் முதலீடு செய்ய இதுதான் சரியான நேரமா? அடுத்த 6 மாத கணிப்பு!

தங்கம் விலை கணிப்பு 2026: சமீபகாலமாக கிடுகிடுவென உயர்ந்து வந்த தங்கத்தின் விலை, தற்போது சற்று இறங்குமுகமாக உள்ளது. ஒரு சவரன் 1 லட்சத்தைத் தாண்டிச் சென்ற நிலையில், இந்த திடீர் விலை குறைவு மக்களிடையே பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. எனவே தங்கம் விலை குறையுமா?, தற்போது தங்கம் வாங்க வேண்டிய நேரமா? போன்ற முக்கிய விவரங்கள் குறித்து தெரிந்துக்கொள்ளுவோம்.

Add Zee News as a Preferred Source

தங்கள் விலை குறைவிற்கான காரணம் என்ன?

வழக்கமாக போர் பதற்றம் (ஈரான் - இஸ்ரேல் மோதல்) நிலவும் போது தங்கம் விலை உயரும். ஆனால் இந்த முறை எரிபொருள் (Oil) தட்டுப்பாடு ஒரு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹர்மோஸ் (Hormuz) ஜலசந்தி வழியாக வரும் கச்சா எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 2 கோடி பேரல் வர வேண்டிய இடத்தில் வெறும் 28 லட்சம் பேரல் மட்டுமே தற்போது விநியோகிக்கப்படுகிறது.

எனவே கச்சா எண்ணெய் விலை உயரும் என கணிக்கும் பெரிய முதலீட்டாளர்கள், தங்கத்தில் இருந்த தங்கள் முதலீடுகளை எடுத்து கச்சா எண்ணெய் சந்தையில் (Oil Market) முதலீடு செய்கின்றனர். இதனாலேயே தங்கத்தின் விலை தற்காலிகமாக குறைந்துள்ளது. ஆனால் இது மேலும் குறையுமா? என்றால் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஒரு கிராம் தங்கம் ரூ.10,000 க்கு குறையுமா?

வரும் நாட்களில் தங்கம் விலை இன்னும் குறையும் எனவும், ஒரு கிராம் 10,000 ரூபாய்க்கு கீழே வரும் என்ற மக்களின் எதிர்பார்த்து உள்ளானர். ஆனால் கொஞ்சம் கவனமாக இருப்பது முக்கியம். ஏனென்றால் பேராசை பெரும் நஷ்டம் என்பதற்கு ஏற்ப, கடந்த காலங்களில் அமெரிக்க நிபுணர்கள் தங்கம் விலை 38% குறையும் என கணித்தனர். ஆனால் அதற்கு மாறாக விலை இரட்டிப்பானது. எனவே தேவை இருப்பவர்கள் விலை குறையும் வரை காத்திருந்து வாய்ப்பை கோட்டை விடக்கூடாது. தங்கம் என்பது நீண்ட கால சேமிப்பு (Long Term Investment). எனவே தேவைப்படும் போது வாங்குவதே சிறந்தது.

துபாய் தங்கம்: லாபமா? ஏமாற்றமா?

துபாயில் தங்கம் விலை குறைவு என்பதால் அங்கிருந்து தங்கம் வாங்கி வருவது லாபம் எனப் பலரும் நினைக்கிறார்கள். ஆனால் இந்திய சட்ட திட்டங்கள் மிகவும் கடுமையானவை. வெளிநாட்டில் ஒரு வருடம் வசித்தவர்கள் மட்டுமே குறிப்பிட்ட அளவு தங்கம் (ஆண்கள் 20 கிராம், திருமணமான பெண்கள் 40 கிராம்) கொண்டு வர முடியும் என்ற விதிமுறைகள் உள்ளன.

அதேநேரம் சுற்றுலா பயணிகள் சட்டத்திற்குப் புறம்பாக தங்கம் கொண்டு வந்தால், அதன் மதிப்பில் சுமார் 33% சுங்க வரி (Customs Duty) கட்ட நேரிடும். 6% லாபத்திற்காக ஆசைப்பட்டு 33% வரி கட்டுவது மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும்.

அடுத்த 6 மாதத்தில் தங்கத்தின் விலை எப்படி இருக்கும்?

தற்போதைய தங்கத்தின் விலை குறைவு என்பது தற்காலிகமானது. இன்னும் சில வாரங்களில் விலை மீண்டும் உயரத் தொடங்கும். அடுத்த ஆறு மாதங்களில் தங்கம் ஒரு சவரன் ரூ.1,20,000 முதல் ரூ.1,25,000 வரையும், வெள்ளி ஒரு கிலோ ரூ.4 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையும் உயர வாய்ப்புள்ளது. எனவே தங்கத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

முதலீட்டாளர்களுக்கான அறிவுரை என்ன?

கடன் வாங்கியோ அல்லது வாழ்வாதாரப் பணத்தை வைத்தோ தங்கம் அல்லது வெள்ளி சந்தையில் (MCX போன்றவை) சூதாட்டம் ஆட வேண்டாம். உங்களிடம் உபரியாக இருக்கும் பணத்தை நீண்ட கால அடிப்படையில் தங்கத்தில் முதலீடு செய்வது எப்போதும் பாதுகாப்பானது. வரி உயர்வோ அல்லது குறைவோ வியாபாரிகளை விட நுகர்வோரையே (End Users) நேரடியாகப் பாதிக்கும். தங்கம் விலை தற்போது குறைந்து காணப்பட்டாலும், சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரச் சூழல்கள் மீண்டும் விலையை உச்சத்திற்குக் கொண்டு செல்லும் என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

மேலும் படிக்க - மத்திய கிழக்கு போர்: இந்தியப் பொருளாதாரம் சந்திக்கும் 5 சவால்கள்! கச்சா எண்ணெய் முதல் தங்கம் விலை

மேலும் படிக்க - 22 கேரட் vs 24 கேரட்: ஆபரணத் தங்கம் வாங்க எது சிறந்தது? நகைப்பிரியர்களுக்கு முக்கிய தகவல்

மேலும் படிக்க - வெள்ளி பக்கமே தல வைக்காதீங்க.. தங்கம் விலை இன்னும் குறையுமா? ஆனந்த சீனிவாசன் நறுக்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

...Read More

Trending News