)
ITR Filing Due Date Latest Update: வருமான வரி செலுத்துவோருக்கு முக்கிய செய்தி. வருமான வரி போர்ட்டலில் ஏற்படும் குறைபாடுகள் மற்றும் தொழில்நுட்ப பிழைகள் குறித்து புகார்கள் வந்ததை அடுத்து, வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மேலும் நீட்டிக்க மக்கள் விடுத்த கோரிக்கைகளை மத்திய நேரடி வரிகள் வாரியம் ஏற்றுக்கொண்டுள்ளது.
2025-26 மதிப்பீட்டு ஆண்டு (AY)க்கான வருமான வரி அறிக்கைகளை (ITRகள்) தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி செப்டம்பர் 15 (திங்கள்) -இலிருந்து செப்டம்பர் 16 (செவ்வாய்) ஆக, ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடக தளமான X -இல், வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ பக்கத்தில், திங்கட்கிழமை இரவு, "வரி செலுத்துவோர் கவனத்திற்கு! 2025-26 ஆம் ஆண்டுக்கான வருமான வரி வருமானங்களை (ITRs) தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி, முதலில் ஜூலை 31, 2025 ஆக இருந்தது. ஆனால் பின்னர் அது செப்டம்பர் 15, 2025 வரை நீட்டிக்கப்பட்டது. மத்திய நேரடி வரிகள் வாரியம், 2025-26 ஆம் ஆண்டுக்கான வருமான வரி வருமானங்களை தாக்கல் செய்வதற்கான இந்த கடைசி தேதியை செப்டம்பர் 15, 2025 -இலிருந்து செப்டம்பர் 16, 2025 வரை நீட்டிக்க முடிவு செய்துள்ளது. பயன்பாடுகளில் மாற்றங்களைச் செயல்படுத்த, இ-ஃபைலிங்க் போர்டல் செப்டம்பர் 16, 2025 அன்று அதிகாலை 12:00 மணி முதல் 02:30 மணி வரை பராமரிப்பு முறையில் இருக்கும்." என்று அறிவித்தது.
வருமான வரி இ-ஃபைலிங்க் போர்ட்டலை அணுகுவதில் மக்களுக்கு சிரமம் ஏற்பட்டால், அது சில நேரங்களில் லோகல் அமைப்பு/உலாவி அமைப்புகள் காரணமாக இருக்கலாம் என்றும் தகவல் தொழில்நுட்பத் துறை தெரிவித்துள்ளது.
இதுபோன்ற சிக்கல்களைத் தீர்க்க சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றுமாறு வருமான வரித் துறை ITR தாக்கல் செய்பவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது
- தற்காலிக ஃபைல்களை (temporary files) நீக்க → Press Win + R → type temp and %temp% → delete all files.
- பிரவுசர் கேச் மற்றும் குக்கீகளை நீக்க → Go to Browser Settings → Clear browsing data (cache + cookies)
- வேறு/ஆதரவு பிரவுசரை பயன்படுத்த → Chrome அல்லது Edge இன் சமீபத்திய பதிப்பு.
- இன்காக்னிடோமறைநிலை/பிரவிவேட் பயன்முறையில் திறக்க → Shortcut: Ctrl+Shift+N OR Ctrl+Shift+P
- பிரவுசர் எக்ஸ்டென்ஷங்களை முடக்க → குறிப்பாக விளம்பரத் தடுப்பான்கள் அல்லது தனியுரிமை கருவிகள்.
- உங்கள் பிரவுசரைப் புதுப்பிக்க → நீங்கள் சமீபத்திய பதிப்பில் இருப்பதை உறுதிசெய்யவும்.
- வேறு நெட்வொர்க்கை முயற்சிக்க → மற்றொரு Wi-Fi அல்லது மொபைல் ஹாட்ஸ்பாட்டிற்கு மாறவும்.
இந்தச் சரிபார்ப்புகளைப் பின்பற்றுவது பொதுவாக லோகல் அணுகல் தொடர்பான பெரும்பாலான சிக்கல்களைத் தீர்க்கும் என்று வருமான வரித் துறை தெரிவித்துள்ளது. மேலும் ஆதரவு அல்லது உதவிக்கு துறையின் அதிகாரப்பூர்வ உதவி மையம்/தொடர்பு சேனல்கள், அல்லது வருமான வரித் துறையை தொடர்புகொள்ளுமாறு வருமான வரித் துறை மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ