)
ITR Filing Due Date Extension: வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் நபர்களுக்கு முக்கிய செய்தி உள்ளது. தனிநபர்கள் 2024-25 (FY25) நிதியாண்டுக்கான வருமான வரி அறிக்கையை (ITR) தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் செப்டம்பர் 15 ஆகும். முன்னர் இதற்கான காலக்கெடு ஜூலை 31 ஆக இருந்தது. எனினும், மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) முந்தைய காலக்கெடுவான ஜூலை 31 இலிருந்து செப்டம்பர் 15 ஆக நீட்டித்தது.
நிதியாண்டு 2025 (FY25) -க்கான ஐடிஆர் தாக்கலுக்கு விதிக்கப்பட்டுள்ள செப்டம்பர் 15 காலக்கெடு, வரி தணிக்கை தேவைப்படாத வரி செலுத்துவோருக்கு பொருந்தும். இந்த காலக்கெடு தனிநபர்கள், இந்து பிரிக்கப்படாத குடும்பங்கள் (HUFகள்) மற்றும் ஐடிஆர் படிவங்கள் 1 முதல் 4 வரை பயன்படுத்தும் நிறுவனங்களை உள்ளடக்கியது.
இந்த வகை ஐடிஆர் தாக்கல் முக்கியமாக சம்பளம், ஓய்வூதியம், வாடகை, மூலதன ஆதாயங்கள் அல்லது பிற வருமான ஆதாரங்களில் இருந்து சம்பாதிப்பவர்களை உள்ளடக்கியது. இது அனுமான வரிவிதிப்பு திட்டத்தின் கீழ் சிறு வணிகங்கள் மற்றும் நிபுணர்களுக்கும் பொருந்தும் (பிரிவுகள் 44AD, 44ADA, 44AE).
ஐடிஆர் -ஐத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வேகமாக நெருங்கி வருகிறது. இந்த நிலையில் வரி செலுத்துவோர் மற்றும் கணக்காளர்கள் மற்றொரு காலக்கெடு நீட்டிப்பைக் கோரியுள்ளனர். வருமான வரி போர்ட்டலில் உள்ள குறைபாடுகள், ஐடிஆர் செயலாக்கத்தில் தாமதங்கள் மற்றும் ரீஃபண்ட் பெறும் ஸ்டேட்டஸ் புதுப்பிப்புகளில் உள்ள சிக்கல்கள் என பலவற்றை காரணம் காட்டி அவர்கள் இந்த நீட்டிப்பை கோருகின்றனர். சமீபத்திய புதுப்பிப்பின்படி, 5.47 கோடி ஐடிஆர் -கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட 7.28 கோடி ஐடிஆர் -களை விட கணிசமாகக் குறைவான எண்ணிக்கையாகும்.
மூன்று நாட்களில் ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் முடிவடையும் நிலையில், வருமான வரித் துறை தேதி நீட்டிப்பு குறித்து இன்னும் எந்த புதுப்பிப்பையும் வெளியிடவில்லை. இருப்பினும், குறைபாடுகள் அதிகரித்து வருவதால், வழக்கறிஞர்கள் வரி வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (ICAI) நீட்டிப்பைக் கோரியுள்ளன. எப்போது வேண்டுமானாலும் காலக்கெடு நீட்டிப்பு குறித்த அறிவிப்பு வரக்கூடும் என சிலர் நம்பிக்கையுடன் உள்ளனர்.
- செப்டம்பர் 15 ஆம் தேதிக்க மேல் வருமான வரி தாக்கல் செய்தால், பிரிவு 234F இன் கீழ் ரூ.5,000 (வருமானம் ரூ.5 லட்சத்தைத் தாண்டினால்) அபராதம் விதிக்கப்படும்.
- குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்.
- தாமதமான (பிலேடட்) அல்லது திருத்தப்பட்ட (ரிவைஸ்ட்) வருமான வரிக் கணக்கை டிசம்பர் 31, 2025 வரை தாக்கல் செய்யலாம்.
- புதுப்பிக்கப்பட்ட (அப்டேடட்) வருமான வரிக் கணக்கை (ITR-U) மார்ச் 31, 2030 வரை சமர்ப்பிக்கலாம்.
ஆம், ஒரு தனிநபர் உரிய தேதிக்குள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யத் தவறினால், டிசம்பர் 31, 2025க்கு முன்பும் பிலேடட் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யலாம். தாமதமான வருமான வரிக் கணக்கையும் தாக்கல் செய்யத் தவறினால், தொடர்புடைய மதிப்பீட்டு ஆண்டின் இறுதியில் இருந்து 48 மாதங்களுக்குள் (நான்கு ஆண்டுகள்) புதுப்பிக்கப்பட்ட வருமான வரிக் கணக்கை அவர்கள் தாக்கல் செய்யலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ