)
ITR Filing for Senior Citizens: வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நெருங்கி வருகின்றது. ஐடிஆர் தாக்கலில் பல வித வசதிகள் அதிகரித்துள்ளன. எனினும், இன்னும் சில மூத்த குடிமக்களுக்கு வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் செயல்முறை சற்று கடினமாகவே இருந்து வருகிறது.
இந்த நிலையில், பல மூத்த குடிமக்களுக்கு 2024-25 நிதியாண்டிற்கான வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஐடிஆர் தாக்கல் விலக்கு யாருக்கெல்லாம் கிடைக்கும்? இதற்கான நிபந்தனைகள் என்ன? இந்த அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் காணலாம்.
ஓருவர் 75 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராகவும், கடந்த ஆண்டில் அவர் நாட்டின் 'குடிமகனாக' இருந்தவராகவும் இருந்தால், அவர் ஐடிஆர் தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு பெறலாம். இந்த விலக்கு ஒரே வங்கியில் இருந்து பெறப்பட்ட ஓய்வூதியம் மற்றும் அதன் வட்டி ஆகியவை மட்டுமே வருமானமாக உள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.
ஐடிஆர் தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு பெற, மூத்த குடிமக்களின் வருமான ஆதாரம் ஓய்வூதியமாக மட்டுமே இருக்க வேண்டும். மேலும், வட்டி வருமானமும் ஓய்வூதியம் வரும் அதே வங்கியிலிருந்து இருக்க வேண்டும். வருமான ஆதாரம் இதிலிருந்து வேறுபட்டால், வருமானத்தை தாக்கல் செய்வது கட்டாயமாகும்.
ஐடிஆரில் இருந்து விலக்கு பெற விரும்பும் மூத்த குடிமக்கள் சம்பந்தப்பட்ட வங்கியில் ஒரு அறிவிப்புப் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். இதில் அவர்களின் வருமானம் மற்றும் வரி விலக்கு தொடர்பான தகவல்கள் இருக்கும். இதற்குப் பிறகு, வங்கி வரியைக் கணக்கிட்டு, அவர்கள் சார்பாக TDS கழிக்கும்.
மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட இந்த செயல்முறைக்கு அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளுக்கு மட்டுமே இந்த செய்லமுறையை செய்ய அனுமதி கிடைக்கும். பிரிவு VI-A மற்றும் பிரிவு 87A இன் கீழ் கிடைக்கும் விலக்குகளை மனதில் கொண்டு, இந்த வங்கிகள் மூத்த குடிமக்களின் வருமானத்தில் TDS கழிக்கும். இது தனித்தனி வருமான அறிக்கைகளை தாக்கல் செய்ய வேண்டிய அவசியத்தை நீக்கும்.
Senior Citizens: வருமான வரிச் சட்டத்தின்படி, 60 முதல் 79 வயதுக்குட்பட்டவர்கள் மூத்த குடிமக்கள் பிரிவில் வருகிறார்கள்.
Super Senior Citizens: 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் சூப்பர் மூத்த குடிமக்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். பிரிவு 194P இன் கீழ் விலக்கு 75 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ