ITR Filing: தனி நபர்கள் ஆடிட்டர் உதவி இல்லாமல் வருமான வரி கணக்கை எப்படி தாக்கல் செய்வது? இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

ITR Filing: வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்துவிட்டீர்களா? உங்கள் வருமான வரி அறிக்கையை (ITR) தாக்கல் செய்ய ஒவ்வொரு முறையும் ஒரு பட்டய கணக்காளரிடம் (CA) செல்ல வேண்டியது அவசியமா? இதை வரி செலுத்துவோர் தாங்களாகவே தாக்கல் செய்ய முடியுமா? தனி நபர்கள் ஆடிட்டர் உதவி இல்லாமல் வருமான வரி கணக்கை எப்படி தாக்கல் செய்வது? இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Taxpayers: வரி செலுத்துவோரின் வருமான ஆதாரம்
உங்கள் வருமான ஆதாரம் சம்பளம், சேமிப்பு கணக்கிற்காக வங்கியிலிருந்து வரும் வட்டி, வாடகை அல்லது சில எளிய முதலீடுகளாக மட்டுமே இருந்தால், எந்தவொரு நிபுணரின் உதவியும் இல்லாமல் உங்களால் ITR-ஐ எளிதாக தாக்கல் செய்ய முடியும்.
வருமான வரி அறிக்கைகளை தாக்கல் செய்யும் செயல்முறையை அரசாங்கம் முன்பை விட எளிதாக்கியுள்ளது. இது டிஜிட்டல் ரீதியான செயல்முறையாக இருப்பதால் வெளிப்படையானதாகவும் உள்ளது. வரி செலுத்துவோர் e-filing portal (incometax.gov.in) மூலம் எளிதாக தங்கள் வருமானங்களை தாக்கல் செய்யலாம்.
வரி செலுத்துவோர் தாங்களாகவே ITR-ஐ எவ்வாறு தாக்கல் செய்வது?
ஒரு தனிநபர் CA-வின் உதவி இல்லாமல் தனது ITR-ஐ சுயாதீனமாக தாக்கல் செய்யலாம் என நிபுணர்கள் கூறுகிறார்கள். வருமான வரித் துறை இப்போது வரி செலுத்துவோரின் படிவத்தை ப்ரீ-ஃபில்ட் தரவுகளால் (pre-filled data) நிரப்புகிறது. இதனால் பிழைகளுக்கான வாய்ப்புகள் குறைந்து செயல்முறை விரைவுபடுத்தப்படுகின்றது. வரி செலுத்துவோர் அந்த தரவுகளை சரிபார்த்து, தேவைப்பட்டால் திருத்தி, மீதமுள்ள தகவல்களை நிரப்பினால் போதும்.
சம்பளம், வீட்டுச் சொத்து அல்லது தரவு எளிமையாகவும் குறைவாகவும் இருக்கும் பிற ஆதாரங்களில் இருந்து வருமானம் போன்ற ஒப்பீட்டளவில் நேரடியான வருமான ப்ரொஃபைல்களைக் கொண்ட நபர்கள் நிச்சயமாக தங்கள் வருமானத்தை சுயாதீனமாக தாக்கல் செய்யலாம் என்று நிபுண்ரகள் கருதுகிறார்கள்.
இருப்பினும், வணிக வருமானம், மூலதன ஆதாயங்கள் அல்லது வெளிநாட்டு சொத்துக்கள் போன்ற சிக்கலான வருமான ஆதாரங்கள் இருக்கும் சந்தர்ப்பங்களில், பொருந்தக்கூடிய வரிச் சட்டங்களுடன் முழுமையாக இணங்குவதை உறுதிசெய்யவும், மேம்படுத்தப்பட்ட வரி திட்டமிடலை உறுதிசெய்யவும் CA-வை அணுகுவது நல்லது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
Documents required to File ITR: ITR-ஐ தாக்கல் செய்ய என்ன ஆவணங்கள் தேவை?
- PAN அட்டை மற்றும் ஆதார் அட்டை (இணைக்கப்பட வேண்டும்)
- படிவம் 16: சம்பளம் பெறுபவர்களுக்கு
- படிவம் 26AS, AIS, TIS: இவை உங்கள் பெயரில் எவ்வளவு வரி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது மற்றும் என்ன நிதி நடவடிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதைக் கூறுகின்றன
- வங்கி கணக்கு விவரங்கள்: ITR பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு
- வரி சேமிப்பு முதலீடுகளுக்கான சான்று: PPF, ELSS, LIC, மியூசுவல் ஃபண்டுகள், சுகாதார காப்பீடு, நன்கொடைகள் போன்றவற்றின் ஆவணங்கள்.
- நீங்கள் வீட்டுக் கடன் வாங்கியிருந்தால் வீட்டுக் கடன் வட்டிச் சான்றிதழ்
Steps to File ITR: ITR ஐ நீங்களே தாக்கல் செய்வதற்கான எளிதான வழிமுறைகள்
- வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான incometax.gov.in -இல் லாக் இன் செய்யவும்.
- “e-File > Income Tax Return > Income Tax Return தாக்கல்” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
- மதிப்பீட்டு ஆண்டை (AY 2025-26) தேர்வுசெய்து, ஆன்லைன் பயன்முறையைத் தேர்ந்தெடுக்கவும்
- உங்கள் வருமானத்தின் அடிப்படையில் (ITR-1 Sahaj போன்றவை) ITR படிவத்தைத் தேர்வுசெய்யவும்
- இப்போது போர்ட்டலில் முன் நிரப்பப்பட்ட தகவலைச் சரிபார்க்கவும், கூடுதல் வருமானம் அல்லது விலக்குகள் இருந்தால், அவற்றை சேர்க்கவும்
- வரி கணக்கீட்டைச் சரிபார்த்து, வரி செலுத்த வேண்டியிருந்தால், சுய மதிப்பீட்டு வரியை செலுத்தவும்
- படிவத்தைச் சரிபார்த்து, டிக்லரேஷனை செக் செய்து சமர்ப்பிக்கவும்
- இறுதியாக ஆதார் OTP, நெட் பாங்கிங் அல்லது பிற முறைகளைப் பயன்படுத்தி வருமானத்தை இ-வெரிஃபை செய்யவும்.
குறிப்பு: நீங்கள் இ-வெரிஃபை செய்யவில்லை என்றால், உங்கள் ஐடிஆர் தாக்கல் முழுமையடையாததாகக் கருதப்படும்.
ITR filing: முக்கிய அம்சங்கள்
- AY 2025-26க்கான ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி: செப்டம்பர் 15, 2025
குறிப்பு: இந்தக் காலக்கெடு, கணக்குகள் தணிக்கைக்கு உட்படுத்தப்படாத வரி செலுத்துவோருக்குப் பொருந்தும்.
புதிய மாற்றம்: வரி விலக்குகளைக் கோரும் நபர்கள் (80C, 80D போன்றவை), செல்லுபடியாகும் ஆதாரத்தையும் சரியான தரவையும் வழங்க வேண்டும். அரசாங்கம் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்ய இந்த செயல்முறையை கொண்டுவந்துள்ளது.
அனைவருக்கும் வருமான வரி தாக்கல் செய்ய ஒரு CA தேவையா?
இல்லை. டிஜிட்டல் ஒருங்கிணைப்பு மற்றும் தரவு முன் நிரப்புதலில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள முக்கிய பணிகளின் காரணமாக, வருமான வரி தாக்கல் செயல்முறை மிகவும் எளிதாகியுள்ளது. இதனால் தொழில்முறை தலையீட்டைச் சார்ந்து இருக்க வேண்டிய அவசியமும் குறைந்துள்ளது.
ஐடிஆர் தாக்கல் செய்வது இப்போது ஒரு சிக்கலான பணியே அல்ல. நீங்கள் சம்பள வர்க்கத்தினராகவும், எளிமையான வரவு செலவுகளைக் கொண்டிருப்பவராகவும் இருந்தால், ஒரு சிஏவின் உதவியின்றி நீங்களே ஐடிஆரை தாக்கல் செய்யலாம். தேவையான ஆவணங்களைத் தயாராக வைத்திருப்பதும், சரியான வழிமுறைகளைப் பின்பற்றுவதும் மட்டுமே இதற்கு போதுமானது. நமது ஐடிஆர் -ஐ நாமே தாக்கல் செய்வது பணத்தை மிச்சப்படுத்துவதோடு நமது திறமையை அதிகரிக்கும் ஒரு வாய்ப்பாகவும் உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ