Senior Citizens FD Vs SCSS: நாம் செய்யும் முதலீடுகள் மூலம் எவ்வித ஆபத்தும் இல்லாமல் சேமிப்பு வளந்துக் கொண்டே இருக்க நிலையான வைப்புத்தொகை (FD) மிகச் சிறந்த தேர்வாகும். இதேபோல், அரசாங்கத்தால் அங்கரிக்கப்பட்ட மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டமும் (SCSS) மிகவும் பாதுகாப்பான
முதலீடு திட்டங்களில் ஒன்றாகும். குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு இந்த திட்டமானது மிகச் சிறந்த முதலீட்டு திட்டனங்களில் ஒன்றாகும். இந்தத் திட்டம் ஓய்வூதியத்திற்காக ஒரு நல்ல நிதியை உருவாக்கும். ஏனெனில் இந்த முதலீடு திட்டத்தின் கீழ், முதலீட்டாளர்கள் ஒவ்வொரு காலாண்டின் முடிவிலும் சிறந்த மற்றும் தரமான வட்டியைப் பெறுகிறார்கள்.
மொத்த லாபத்தின் முழு கணித விவரம்:
பொதுவாக சேமிப்பு என்பது நம் வாழ்வில் அத்தியாவசியமான ஒன்று என்றாலும், அது மூத்த குடிமக்கள் வாழ்வில் அடிப்படை வாழ்வாதாரமாக பார்க்கப்படுகிறது. இதனாலேயே மூத்த குடி மக்களுக்கான மிக மிக பாதுகாப்பான முதலீட்டு திட்டங்களை வங்கிகளும், அரசும் ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் மூத்த குடிமக்களுக்கு வங்கி பிக்ஸட் டெபாசிட் மற்றும் SCSS சிறந்த தேர்வாகும். எனினும் இந்த இரண்டு முதலீடு திட்டத்தில் எந்த சேமிப்பு திட்டம் அதிகம் பலன் தரும், அவற்றில் எதை மூத்த குடிமக்கள் தேர்வு செய்ய வேண்டும் என்கிற பெரிய குழப்பம் இருக்கும். அதேபோல் இந்த இரண்டு முதலீடு திட்டத்திலும் மாதாந்திர மற்றும் மொத்த முதலீட்டு விருப்பங்கள் உள்ளது. எனவே பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) 5 வருட FD மற்றும் SCSS-ல் எது சிறந்த மற்றும் அதிக நன்மையைத் தரும் என்பதை இப்போது தெளிவாகத் புரிந்துகொள்வோம்.
மேலும் படிக்க | ஆதாரை அப்டேட் செய்யவில்லை என்றால் செல்லுபடி ஆகாதா? UIDAI முக்கிய தகவல்!
பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) எஃப்டி வட்டி விகிதம்
பொது மக்களுக்கான வட்டி விகிதம்: ஆண்டுக்கு 3.50%-7.25%
மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம்: ஆண்டுக்கு 4.00%-7.75%.
எஸ்பிஐ வரி சேமிப்பு நிலையான வைப்புத்தொகை (பிக்ஸட் டெபாசிட்): 6.50% (பொது குடிமக்களுக்கு) மற்றும் 7.50% (மூத்த குடிமக்களுக்கு).
பாரத ஸ்டேட் வங்கி (SBI) 5 வருட பிக்ஸட் டெபாசிட் (FD) முழுக் கணக்கீடு:
வைப்புத் தொகை: ரூ. 7,50,000
ஈட்டப்பட்ட மொத்த வட்டி: ரூ. 2,85,315
மெச்சூரிட்டி தொகை: ரூ. 10,35,315
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் (SCSS) வட்டி விகிதங்களின் முழு விவரம்:
தற்போதைய விகிதம் (ஜனவரி 1, 2024 முதல்): ஆண்டுக்கு 8.2%
செலுத்த வேண்டிய வட்டி: காலாண்டு (ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1, ஜனவரி 1)
SCSS-க்கான தகுதி வரம்புகள்:
இந்த சலுகையை 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பெற முடியும்.
தன்னார்வ ஓய்வூதியத் திட்டம் (VRS) எடுக்கும் 55 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களும் இதில் முதலீடு செய்துக்கொள்ளலாம்.
இந்தத் திட்டத்தின் கீழ், வாழ்க்கைத் துணையுடன் கூட்டுக் கணக்கைத் திறக்க முடியும்.
SCSS (மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்) வைப்பு வரம்பு மற்றும் வரிச் சலுகைகள்:
குறைந்தபட்ச வைப்புத்தொகை: ரூ. 1,000
அதிகபட்ச வைப்புத்தொகை: ரூ. 30,00,000
வரிச் சலுகைகள்: SCSS திட்டத்தில் செய்யப்படும் டெபாசிட்களுக்கு வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் வரி விலக்கு பெற தகுதியுடையவை.
SCSS கணக்கீடு:
முதிர்வுத் தொகை: ரூ. 10,57,500
காலாண்டு வட்டி: ரூ.15,375
5 ஆண்டுகளில் ஈட்டப்பட்ட மொத்த வட்டி: ரூ. 3,07,500
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட கணக்கை எவ்வாறு திறப்பது?
மூத்த குடிமக்கள் வங்கி அல்லது தபால் அலுவலகத்திலும் SCSS கணக்கைத் திறந்துக் கொள்ளலாம். கணக்கைத் திறக்க, குறைந்தபட்சம் ரூ. 1,000 முதல் தொடங்கலாம். அதிகபட்சம் ரூ. 30 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தில் ஒரு முறை மட்டுமே முதலீடு செய்யலாம்.
மேலும் படிக்க | NPS: மாதம் ரூ.88,915 பென்ஷன் வரும்... இந்த முறையில் முதலீடு செய்ய வேண்டும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ