8th Pay Commission Latest News In Tamil: மத்திய அரசு ஊழியர்களுக்கு எட்டாவது ஊதியக்குழு எனப்படும் பே கமிஷன் அமைப்பதற்கு கேபினெட் ஜனவரி மாதம் ஒப்புதல் கொடுத்தது. அடுத்த ஆண்டு முதல் இந்த எட்டாவது ஊதியக்குழு அமல்படுத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எட்டாவது ஊதியக்குழு மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது பெறக்கூடிய சம்பளத்திலிருந்து 186% அதிகமாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கொடுப்பது சார்ந்து பரிந்துரை செய்ய ஊதிய கமிஷன் அமைக்கப்பட்டு வருகிறது. பணவீக்கம் உட்பட பல்வேறு காரணிகளை கருத்தில் கொண்டு, இந்த பே கமிஷன் பரிந்துரைகளை மத்திய அரசுக்கு வழங்கும். இந்த பரிந்துரையின் படி மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கப்படுகிறது.
1947 ஆம் ஆண்டு முதல் ஏழு பே கமிஷன்கள் உருவாக்கப்பட்டன. தற்போது அமலில் இருக்கக்கூடிய ஏழாவது பே கமிஷன். கடந்த 2016 ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. இதனுடைய காலம் அடுத்த ஆண்டு 2026 முடிவடைகிறது. எனவே எட்டாவது பே கமிஷன் அமைப்பதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
ஊதிய கமிஷனில் இடம்பெறக்கூடிய உறுப்பினர்கள் மத்திய மாநில அரசுகள் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பல்வேறு பங்குதாரர்களுடன் ஆலோசனைகளை பெற்று அரசுக்கு புதிய சம்பள உயர்வு தொடர்பாக பரிந்துரை கொடுப்பார்கள்.
மத்திய அரசு ஊழியர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த இந்த எட்டாவது பே கமிஷனுக்கு கடந்த ஜனவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான கேபினெட் ஒப்புதல் கொடுத்தது. எட்டாவது ஊதியக்குழு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என்று சொல்லப்படுகிறது. அதாவது இந்த நிதி ஆண்டு முடிந்த பின்பு, மார்ச் 2026 இல் அறிவிப்புகள் வெளியாகும். ஏப்ரல் 1, 2026 முதல் புதிய சம்பள நடைமுறைக்கு வரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
எட்டாவது பே கமிஷன் மூலமாக உள்துறை உட்பட 50 லட்சத்திற்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்களும், 65 லட்சத்திற்கும் அதிகமான ஓய்வூதிர்களும் என்று மொத்தம் ஒரு கோடியே 15 லட்சம் பேர் பயன் பெறுவார்கள்.
அதேநேரம் இந்த பே கமிஷனில் எவ்வளவு சம்பள உயர்வு கிடைக்கும் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது.. இந்த ஊதிய உயர்வு பரிந்துரையில் ஃபிட்மென்ட் பேக்டர் முக்கிய பங்காற்றுகிறது.
அதாவது மத்திய அரசு ஊழியர்கள் வாங்கும் தற்போதைய ஊதியம் அடுத்து பணியில் சேர இருக்கும் ஊழியர்களின் சம்பளம் உட்பட காரணிகளைக் கொண்டு கணக்கிடப்படும். ஒரு மல்டிபிளேயர் தான் ஃபிட்மென்ட் ஃபேக்டர் என்று சொல்லப்பட்டு வருகிறது.
எட்டாவது ஊதிய குழுவில் இந்த ஃபிட்மென்ட் பேக்டர் 1.92 முதல் 2.86 ஆக நிர்ணயிக்கப்படலாம் என்று பல செய்தி நிறுவனங்கள் தகவலை வெளியிட்டு வருகிறது.
அதன்படி பார்த்தால் குறைந்தபட்ச சம்பளம் ரூ.18000 லிருந்து ரூ.51,480 ஆக உயர வாய்ப்புள்ளது. அதேபோல குறைந்த பட்சமாக பென்ஷன் ரூ.9000-லிருந்து ரூ.25,740 ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனினும் குறைந்தபட்ச ஃபிட்மென்ட் பேக்டர் என்பது ஏழாவது ஊதிய குழுவில் நிர்ணயிக்கப்பட்டது போல 2.57 ஆக நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று அரசு ஊழியர்களின் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பான ஜேசிஎம் வலியுறுத்துவதாக சொல்லப்படுகிறது. அதாவது அடிப்படை சம்பளம் ரூ.46,000 இருக்க விநெடும் எனக் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஜேசிஎம் அமைப்பின் கோரிக்கை அடிப்படையில் பார்த்தால், 2.57 என்ற ஃபிட்மென்ட் பேக்டர் கணக்கிடப்பட்டால், தற்போது அடிப்படை சம்பளமாக ரூ.18000 பெறக்கூடிய ஊழியர்களின் சம்பளம் ரூ.46,260 ஆக அதிகரிக்கும். அதேபோல் பென்ஷனும் ரூ.9000 லிருந்து ரூ.23,130 ஆக உயரும்.
எனினும் ஃபிட்மென்ட் பேக்டர் அதிகமாக இருந்தால் அரசுக்கு நிதிச்சுமை ஏற்படும் என்றும், ஃபிட்மென்ட் பேக்டர் 1.92 என்பதே மிகவும் சரியாக இருக்கும் என்றும் நிதித்துறைச் செயலர் சுபாஷ் காரக் கூறியுள்ளார்.
எப்படி இருந்தாலும், எட்டாவது ஊதிய குழுவால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் கிடுகிடுவான அதிகரிக்கும் என்பதால் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ