)
Jan Dhan Yojana: ஜன் தன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. ஜன் தன் கணக்குகளைப் புதுப்பிக்க செப்டம்பர் 30 வரை பஞ்சாயத்து மட்டத்தில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மஹோத்ரா சமீபத்தில் அறிவித்துள்ளார். இந்த முகாம்களில், கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் KYC-ஐ மீண்டும் சரிசெய்ய (re-KYC) முடியும். இதந் மூலம் எந்த வித தடையும் இல்லாமல் அரசாங்கத் திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், வங்கி லாக்கர்கள் மற்றும் கணக்குகள் தொடர்பான சில முக்கிய அறிவிப்புகளையும் RBI வெளியிட்டுள்ளது.
Re-KYC என்றால் என்ன? அதன் அவசியம் என்ன?
- Re-KYC என்பது ஒரு எளிய செயல்முறையாகும்.
- இதில், உங்கள் வங்கிக் கணக்கில் உங்கள் தனிப்பட்ட மற்றும் முகவரித் தகவல்களை (பெயர், முகவரி, மொபைல் எண் போன்றவை) புதுப்பிக்கலாம்.
- வங்கியில் உங்கள் சமீபத்திய மற்றும் சரியான தகவல்கள் இருப்பதை உறுதி செய்வது முக்கியம்.
- உங்கள் KYC காலாவதியாகிவிட்டாலோ அல்லது உங்கள் தகவலில் ஏதேனும் மாற்றம் இருந்தாலோ (முகவரி மாற்றம் போன்றவை), நீங்கள் வங்கியை அழைத்து அவற்றை மாற்றுவது குறித்த தகவலளை பெற வேண்டும்.
- இதை செய்யாவிட்டால், நீங்கள் வங்கி விதிகளைப் பின்பற்ற முடியாத நிலை ஏற்படலாம்.
- மேலும் உங்கள் வங்கி சேவைகளும் பாதிக்கப்படலாம்.
பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா: இதன் முக்கிய நன்மைகள் என்ன?
பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா என்பது நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் மலிவு மற்றும் அணுகக்கூடிய வங்கி வசதிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு தேசிய திட்டமாகும். ஏழைகள் மற்றும் வங்கி சேவைகள் இல்லாத மக்களுக்கு சேமிப்புக் கணக்குகள், பணப் பரிமாற்ற வசதிகள், கடன்கள், காப்பீடு மற்றும் ஓய்வூதியம் போன்ற சேவைகளை வழங்குவதே இந்த திட்டத்தின் முக்கிய குறிக்கோள். இந்தத் திட்டத்தின் கீழ், ஏற்கனவே வங்கிக் கணக்கு இல்லாத ஒருவர் எந்த வங்கிக் கிளை அல்லது வங்கி கவுண்டரிலும் இலவசமாக சேமிப்புக் கணக்கைத் திறக்கலாம். ஜன் தன் யோஜனா 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது
Pradhan Mantri Jan Dhan Yojana
- வங்கிகள் ஏற்பாடு செய்யும் இந்த முகாம்களில், KYC புதுப்பிக்கப்படுவது மட்டுமல்லாமல், கடன்கள் மற்றும் பிற வங்கி வசதிகளும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜன் தன் கணக்கு இருப்பவர்கள், வங்கியைத் தொடர்புகொண்டு Re-KYC -ஐ முடிக்க வேண்டும்.
- இல்லையெனில் கணக்கு மூடப்படலாம் அல்லது முடக்கப்படலாம்.
ஏழைப் பிரிவினரை வங்கித் துறையுடன் இணைக்கும் நோக்கம்
சமூகத்தின் ஏழைப் பிரிவினரை வங்கித் துறையுடன் இணைக்கும் நோக்கத்துடன், மத்திய அரசு 2014 ஆம் ஆண்டு ஜன் தன் யோஜனாவைத் தொடங்கியது. இந்தத் திட்டத்தின் கீழ், கணக்குத் தொடங்கும்போது கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பல வகையான வசதிகள் வழங்கப்படுகின்றன. இதுவரை, இந்தத் திட்டத்தின் கீழ் கோடிக்கணக்கான மக்களின் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன. கிராமப்புறங்கள் மட்டுமல்ல, நகர்ப்புற மக்களும் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.
KYC சரிபார்ப்பு செயல்முறைக்குப் பிறகு தயாரிக்கப்படும் தரவுத்தளத்தின் அடிப்படையில், ஏப்ரல் 1, 2026 முதல், அரசுத் திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு அவர்களின் வங்கிக் கணக்குகளில் பணம் நேரடியாக செலுத்தப்படும். மத்திய அரசின் இந்த தணிக்கையில், தகவல் சரிபார்க்கப்படாத பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு அரசுத் திட்டங்களிலிருந்து பணம் செல்வது நிறுத்தப்படும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ