)
Income Tax Return: வரி செலுத்தும் நபரா நீங்கள்? ஐடிஆர் தாக்கல் செய்ய ஆடிடரை நம்பி இருக்கிறீர்களா? அப்படியென்றால், உங்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் (JFSL), வரி தாக்கலை சுபலமாக்க, அதன் ஜியோ ஃபைனான்ஸ் செயலியில் புதிய வரி திட்டமிடல் மற்றும் தாக்கல் தொகுதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் சிறப்பு என்னவென்றால், சுய தாக்கல் திட்டம் (self-filing plan) வெறும் ₹ 24 இலிருந்து தொடங்குகிறது. நிபுணர் உதவித் திட்டம் ₹ 999 இலிருந்து தொடங்குகிறது.
TaxBuddy உடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த அம்சத்தில், பயனர்கள் தாங்களாகவே வரி தாக்கல் செய்யலாம் அல்லது நிபுணர்களின் உதவியையும் பெறலாம். இது பழைய மற்றும் புதிய வரி முறையின் ஒப்பீடு, டிடக்ஷன் கணக்கீடு மற்றும் வாடகை கொடுப்பனவு போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. இதனால் எந்த விலக்கு வகைகளையும் தவறவிடாமல் வரி தாக்கல் செய்யலாம்.
இந்த மாட்யூல் இரண்டு முக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது:
முதலாவது டேக்ஸ் பிளானர், இதன் கீழ் பின்வரும் பணிகள் செய்யப்படுகின்றன.
- எதிர்கால வரி பொறுப்பின் மதிப்பீடு
- HRA மதிப்பீடு
- பழைய மற்றும் புதிய வரி முறையின் ஒப்பீடு
இரண்டாவது டேக்ஸ் ஃபைலிங், இதன் கீழ் இவை அனைத்தும் நடக்கும்.
- வரி தாக்கல் செய்வதற்கான எளிய வழி
= நிபுணர்களின் உதவியுடன் தாக்கல் செய்தல்
- வருமான விவரங்களை நிரப்புதல், ஆவணங்களைப் பதிவேற்றுதல் மற்றும் முறையைத் தேர்ந்தெடுப்பதற்கான வழிகாட்டப்பட்ட வழிமுறைகள்
JFSL இன் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஹிதேஷ் சேத்தியா, "வரி தாக்கல் செய்வதில் உள்ள சிக்கலை நீக்குவதற்காக இந்த அம்சத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இதன் மூலம், பயனர்கள் ஆண்டு முழுவதும் தங்கள் வரிப் பொறுப்பை நிர்வகிக்கவும் சரியான திட்டமிடலைச் செய்யவும் முடியும்." என்று கூறியுள்ளார்.
- சம்பள வர்க்க ஊழியர்கள்
- ஃப்ரீலான்ஸர்கள் மற்றும் ஜிக் தொழிலாளர்கள்
- முதல் முறையாக ITR தாக்கல் செய்பவர்கள்
- பட்ஜெட்டில் வரி சேமிப்பு செய்பவர்கள்
- சிறு வணிக உரிமையாளர்கள்
ஜியோஃபைனான்ஸின் இந்தப் புதிய வரி மாட்யூல் வரி தாக்கல் செய்வதை மொபைல் செயலியில் எளிதாகவும், மலிவாகவும் அக்குகிறது. மேலும் இது முழு செயல்முறையிலும் ஒரு வழிகாட்டியாக இருக்கின்றது. ₹ 24 இல் தொடங்கும் சுய-தாக்கல் திட்டம் சந்தையில் மிகவும் மலிவானது. நிபுணர் உதவியுடனான விருப்பமும் மற்ற தளங்களை விட மலிவானது. வரி தாக்கல் செய்வதை சாதாரண மக்களுக்கு எட்டக்கூடிய செயல்முறையாக மாற்றுவதில் இந்த நடவடிக்கை ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வரக்கூடும்.
- ஜியோஃபைனான்ஸ் செயலியில் வரி தாக்கல் ₹24 -இல் தொடங்குகிறது.
- நிபுணர் உதவித் திட்டத்தின் தொடக்க விலை ₹999 ஆக உள்ளது.
- இது பழைய மற்றும் புதிய வரி முறைகளை ஒப்பிட்டு எது பயனருக்கு உகந்ததோ அதை பரிந்துரைக்கிறது.
- முதல் முறையாக வரி தாக்கல் செய்பவர்களுக்கு வழிகாட்டப்பட்ட செயல்முறைகள் உள்ளன.
- இந்த அம்சம் TaxBuddy உடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ