Bank holidays : ஜூன் மாதம் முழுவதும் வங்கிகள் எந்தெந்த நாட்கள் செயல்படாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இது உங்களுக்கு உதவியாக இருக்கும்.

Bank holidays june : ஜூன் மாதம் தொடங்கிவிட்டது. இந்த மாதம் முதல் இபிஎப்ஓ, ஆதார் சேவை, எல்பிஜி சிலிண்டர் விலை குறைப்பு உள்ளிட்ட முக்கிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்திருக்கும் அதேநேரத்தில் வங்கிகளின் விடுமுறை நாட்களையும் தெரிந்து கொள்ளுங்கள். இம்மாதத்தில் பக்ரீத் உள்ளிட்ட முக்கியமான 12 விடுமுறை நாட்கள் இருப்பதால், எந்தெந்த நாட்களில் வங்கிகள் செயல்படாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ஜூன் 2025 வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல்
* ஜூன் 1 - ஞாயிற்றுக்கிழமை - நாடு முழுவதும் வங்கிகள் செயல்படாது
* ஜூன் 6 - வெள்ளிக்கிழமை - பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கேரளாவின் கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் வங்கிகள் செயல்படாது
* ஜூன் 7 - சனிக்கிழமை - பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் வங்கிகள் லீவ்.
* ஜூன் 8 - ஞாயிற்றுக்கிழமை - நாடு முழுவதும் வங்கிகள் லீவ்.
* ஜூன் 11 - புதன்கிழமை - சந்த் கபீர் ஜெயந்தி / சாகா தாவாவை முன்னிட்டு சிக்கிம் மற்றும் மேகாலயாவில்வங்கிகள் செயல்படாது.
* ஜூன் 14 - சனிக்கிழமை -இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு நாடு முழுவதும் வங்கிகள் விடுமுறை.
* ஜூன் 15 - ஞாயிற்றுக்கிழமை - வாராந்திர விடுமுறையை முன்னிட்டு நாடு முழுவதும் வங்கிகள் விடுமுறை
* ஜூன் 22 - ஞாயிற்றுக்கிழமை - நாடு முழுவதும் வங்கிகள் செயல்படாது
* ஜூன் 27 - வெள்ளிக்கிழமை- ரத யாத்திரை / காங் விழாவை முன்னிட்டு ஒடிசா மற்றும் மணிப்பூரில் வங்கிகள் லீவ்
* ஜூன் 28 - நான்காவது சனிக்கிழமையை முன்னிட்டு நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும்
* ஜூன் 29 - ஞாயிற்றுக்கிழமை - நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும்
* ஜூன் 30 - திங்கட்கிழமை - ரெம்னா நி விழாவை முன்னிட்டு மிசோரமில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்
முக்கியமான நீண்ட விடுமுறைகள்
* பக்ரீத் லாங் வீகெண்ட் (6-8 ஜூன்) – கேரளாவில் 3 நாட்கள் தொடர்ச்சியான விடுமுறை
* 27-30 ஜூன் – ஒடிசா, மணிப்பூர் மற்றும் மிசோரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் விடுமுறைகள் இருக்கும்.
கூடுதல் தகவல்கள்:
* அனைத்து சனி & ஞாயிறு வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
* RBI (Reserve Bank of India) அதிகாரப்பூர்வ விடுமுறை பட்டியலை பின்பற்றுகிறது.
* தனியார் மற்றும் பொது வங்கிகள் இரண்டும் இதே விதிகளைப் பின்பற்றுகின்றன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ