)
August 1 2025 Key Changes: இன்று ஆகஸ்ட் மாதம் தொடங்கிவிட்டது. ஆகஸ்ட் 1, இன்று முதல் பல முக்கியமான அரசுத் திட்டங்கள் மற்றும் நிதி விதிகள் அமலுக்கு வருகின்றன. இது அலுவலக உழியர்கள், விவசாயிகள், எல்பிஜி நுகர்வோர் மற்றும் டிஜிட்டல் கட்டண பயனர்கள் உட்பட மில்லியன் கணக்கான குடிமக்களின் தினசரி வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும். கிராமப்புறம், நகர்ப்புறம் என அனைத்து இடங்களில் வசிக்கும் மக்களின் வாழ்க்கையிலும் இந்த மாற்றங்கள் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வரும்.
PM Vikas Bharat Rojgar Yojana
பிஎம் விகாஸ் பாரத் ரோஜ்கர் யோஜனா
- PMVBRY ஆகஸ்ட் 1 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது.
- இது இரண்டு ஆண்டுகளில் 35 மில்லியன் வேலைகளை உருவாக்கி, வேலைவாய்ப்பு சந்தையை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- ஆரம்பத்தில் சுமார் 19.2 மில்லியன் இளைஞர்கள் வேலையில் அமர்த்தப்படுவார்கள்.
- கிராமப்புற மற்றும் நகர்ப்புற திறன்களை இலக்காகக் கொண்டு, இது பல்வேறு துறைகளில் புதிய வாய்ப்புகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- வேலை தேடுபவர்கள் இந்த திட்டத்தை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.
PM Kisan 20th Installment
பிஎம் கிசான் 20வது தவணை
- பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதியின் 20வது தவணை ஆகஸ்ட் 2 ஆம் தேதி வருகிறது.
- 9.3 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு நேரடியாக DBT மூலம் ரூ.2,000 கணக்கில் வரவு வைக்கப்படும்.
- இந்த தவணைத் தொகையை பெற eKYC செய்து முடிப்பது கட்டாயம் என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
- பணம் பெறுவதில் தாமதங்களைத் தவிர்க்க உங்கள் KYC விவரங்களை இப்போதே புதுப்பிக்கவும்.
LPG Cylinder Price
எல்பிஜி சிலிண்டர் விலை
- வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
- ஆகஸ்ட் 1, 2025 முதல், 19 கிலோ வணிக எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.33.50 குறைக்கப்பட்டுள்ளது.
- எனினும் வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலை மாற்றப்படாமல் அப்படியே உள்ளது.
UPI Rules
UPI விதி மாற்றங்கள்
- ஆகஸ்ட் 1 முதல், புதிய UPI -இல் பல விதிகள் மாற்றப்படுகின்றன.
- இருப்பு சரிபார்ப்புகள் ஒரு நாளைக்கு 50 முறைகளாகவும், இணைக்கப்பட்ட அகவுண்ட் வியூஸ் ஒரு நாளைக்கு 25 முறையாகவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
- தானியங்கி பணம் செலுத்தும் பரிவர்த்தனைகள் தினசரி மூன்று டைம் ஸ்லாட்களில் மட்டுமே செயல்படுத்தப்படும்.
SBI Cards
SBI கார்ட் விதிகளில் மாற்றம்
- SBI கோ-பிராண்ட் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தும் நபர்கள் சில மாற்றங்களை சந்திப்பார்கள்.
- ஆகஸ்ட் 11, 2025 முதல், சில எலைட் மற்றும் பிரைம் கார்டுகளில் கிடைக்கும் இலவச விமான விபத்து காப்பீட்டுத் திட்டத்தை SBI நிறுத்தும்.
- இதுவரை இந்த கார்டுகளுக்கு ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை காப்பீடு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ