)
Major Changes from September 1 2025: ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சில முக்கிய விதிகளில் சில மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இவற்றின் தாக்கம் சாமானியர்கள் மீதும் இருக்கின்றது. இன்று செப்டம்பர் மாதம் தொடங்கியுள்ளது. இன்று முதல் பல விதிகள் மாறியுள்ளன. எல்பிஜி சிலிண்டர் விலை, ஆதார் அட்டை புதுப்பிப்பு, ஐடிஆர் தாக்கல் மற்றும் கிரெடிட் கார்டு தொடர்பான விதிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மாதம் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
பண்டிகை காலத்தை முன்னிட்டு எல்பிஜி சிலிண்டர் விலைகள் குறைந்துள்ளன. வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.51.50 குறைக்கப்பட்டுள்ளது. 19 கிலோ வணிக எரிவாயு சிலிண்டரின் விலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று முதல் 19 கிலோ எரிவாயு சிலிண்டர் சென்னையில் ரூ.1738க்கும், டெல்லியில் ரூ.1580க்கும், கொல்கத்தாவில் ரூ.1684க்கும், மும்பையில் ரூ.1531.50க்கும் கிடைக்கும். எனினும் வீட்டு உபயோக 14.2 கிலோ வீட்டு எல்பிஜி சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதன் விலையை குறைக்க வேண்டும் என மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ITR தாக்கல் செய்யத் தவறியவர்களுக்கு, தாமதமாக அதை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை அரசாங்கம் செப்டம்பர் 30, 2025 என நிர்ணயித்துள்ளது. இந்த தேதிக்குள் நீங்கள் வருமான வரியை தாக்கல் செய்யாவிட்டால், தாமதக் கட்டணங்கள் மற்றும் வட்டியை செலுத்த வேண்டியிருக்கும்.
ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிப்பதற்கான வசதிக்கான கடைசி தேதி செப்டம்பர் 14, 2025. இதற்குப் பிறகு, ஆதாரைப் புதுப்பிப்பதற்கு நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் செப்டம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் நடக்கவுள்ளது. இதன் பிறகு, ஜிஎஸ்டி வரி அடுக்குகளிலும், விகிதங்களில் மிகப்பெரிய மாற்றங்கள் காத்திருக்கின்றன. இதன் விளைவாக பல பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தேசிய ஓய்வூதிய முறையிலிருந்து (NPS) ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (UPS) மாறுவதற்கான விருப்பத்தை அரசாங்கம் ஊழியர்களுக்கு வழங்கியுள்ளது, அதற்கான காலக்கெடு செப்டம்பர் 30 ஆகும். UPS ஐத் தேர்வுசெய்ய விரும்பும் ஊழியர்கள் இந்த தேதிக்குள் அதற்கான படிவத்தை நிரப்பலாம்.
இன்று முதல் வெள்ளிக்கு ஹால்மார்க்கிங் தொடங்கப்படுகிறது. இருப்பினும், தற்போது வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பப்படி ஹால்மார்க் செய்யப்பட்ட வெள்ளி அல்லது ஹால்மார்க் செய்யப்படாத வெள்ளியை வாங்கலாம். இது இப்போதைக்கு இன்னும் கட்டாயமாக்கப்படவில்லை.
தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கான விதிகளை SBI மாற்றியுள்ளது. இந்த கிரெடிட் கார்டுகளை வைத்திருப்பவர்கள் டிஜிட்டல் கேமிங் மற்றும் அரசாங்க வலைத்தளங்களில் பரிவர்த்தனைகள் தொடர்பான செலவுகளுக்கு வெகுமதி புள்ளிகளைப் பெற முடியாது.
இன்று முதல் தபால் நிலைய செயல்முறையிலும் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட தபால் இப்போது ஸ்பீட் போஸ்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. இப்போது சாதாரண தபாலுக்கு பதிலாக ஸ்பீட் போஸ்ட் மூலம் மட்டுமே தபால்களை அனுப்ப முடியும்.
செப்டம்பரில் 8வது ஊதியக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் நியமனம் குறித்த அப்டேட் கிடைக்கும் என நம்பப்படுகின்றது. அதன் பிறகு ToR பரிந்துரைகளும் இறுதி செய்யப்படக்கூடும். இதைத் தொடர்ந்து ஃபிட்மெண்ட் ஃபாக்டர், ஊதிய உயர்வு, ஓய்வூதிய உயர்வு மற்றும் இன்னும் பல முக்கிய அம்சங்கள் தொடர்பான பரிந்துரைகளை குழு தயார் செய்யும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ