Kisan Credit Card : விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கான பிஎம் கிசான் திட்டத்தை செயல்படுத்தி வரும் மத்திய அரசு, கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது. பெரும்பாலானோர் கிசான் கிரெடிட் கார்டு மூலம் விவசாயிகள் மட்டுமே கடன்பெற முடியும் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த கிரெடிட் கார்டு மூலம் மீனவர்களும் கடன்பெறலாம். இது தொடர்பாக கன்னியாக்குமரி, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்கள் ஒரு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.
பரோடா கிசான் பக்வாடா விழிப்புணர்வு நிகழ்ச்சி
கன்னியாகுமரி மாவட்டம் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்கள், உள்ளூர் விவசாயிகள் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் நலனுக்காக பேங்க் ஆப் பரோடா வங்கி மூலம் "பரோடா கிசான் பக்வாடா" விழிப்புணர்வு நிகழ்ச்சி 13 ஆம் தேதி இரையுமன்துறையில் உள்ள செயிண்ட் பார்பரா சமூக நலக்கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கலந்துகொண்டு, பேசுகையில், பொருளாதார வளர்ச்சியில் மீனவர்களின் பங்கு முக்கியமானது. பொதுத்துறை வங்கியினை அணுகி குறைந்த வட்டியில் மீனவர்கள் கடன் பெற வேண்டும். மேலும் விவசாய கடன் அட்டை (KISAN CREDIT CARD) மூலமாக கடனுதவி திட்டங்களில் இணைந்து பயனடைய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
மேலும், தொடர்ந்து மகளிர் சுய உதவி குழு கடன் மூலம் வாழ்வாதாரத்தினை உயர்த்திடலாம். மேலும், பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டங்கள் மூலம் மீன்பிடி முறையினை ஊக்குவித்திட தேவையான நிதியினை கடனுதவியாக பெறுதல், மீனவர்களுக்கு அரசங்கத்தால் வழங்கப்படும் நிதி உதவி திட்டங்கள், சேமிப்பு பற்றிய அவசியங்கள் குறித்தும், மானியம் வழங்க கூடிய வங்கி கடன் திட்டங்கள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் எடுத்துரைத்தார்.
தஞ்சாவூர் மீனவர்களுக்கான அறிவிப்பு
தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையானது உள்நாட்டு மீன்வளர்ப்பை மேம்படுத்தியும், மீன்வளர்ப்பு விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கியும் செயல்பட்டு வருகிறது. மேலும் உள்நாட்டு நீர்நிலைகளில் மீன்குஞ்சுகள் இருப்பு செய்து மீன் உற்பத்தியை அதிகரித்திடவும், மாவட்டத்திலுள்ள சமூக மற்றும் பின்தங்கியுள்ள மீன்வளர்ப்போருக்கு உதவுவதுமான நோக்கத்தின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இம்முகமையில் உறுப்பினராக உள்ள மீன்வளர்ப்பு விவசாயிகள் பயன்பெறும் வகையில் அவ்வபோது அரசால் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
எனவே, தஞ்சாவூர் மாவட்டத்தில் மீன்வளர்ப்பு செய்யும் அனைத்து மீன்வளர்ப்பு விவசாயிகளும் உறுப்பினராகி மீன் பண்ணைகளை பதிவு செய்திட தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கீழவாசல், எண் 873/4 அறிஞர் அண்ணாசாலை என்ற முகவரியில் இயங்கும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









