Petrol, Diesel Price:தொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல் டீசல் விலைகள், அதிர்ச்சியில் மக்கள்..!!

மக்களின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றாக உள்ளது பெட்ரோல் மற்றும் டீசல். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை மாதம் இரு முறை, பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை நிர்ணயம் செய்யும் முறை பழக்கத்தில் இருந்தது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 15, 2021, 09:20 AM IST
Petrol, Diesel Price:தொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல் டீசல் விலைகள், அதிர்ச்சியில் மக்கள்..!! title=

Petrol Prices Latest Update: அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் சாமானிய மக்களை பாதித்துள்ளன என்பதை மறுக்க இயலாது. தற்போது, ​​நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் போக்கு நிலவுகிறது. 

மக்களின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றான பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் சில ஆண்டுகளுக்கு முன் வரை மாதம் இரு முறை,  நிர்ணயம் செய்யும் முறை பழக்கத்தில் இருந்தது.

ஆனால் தற்போது பாரத் பெட்ரோலியம் (bharat Petroleum), இந்தியன் ஆயில்(Indian Oil) , ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (Hindustan Petroleum) ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் விலைகளை  தினசரி நிர்ணையிக்கின்றன. அதன் விலைகளின் இன்றைய நிலவரம் பற்றி அறிந்து கொள்ளலாம்.

ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களுக்கு பின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தற்போது பெட்ரோல், டீசல் விலையை (Petrol, Diesel Price) உயர்த்தி வருகின்றன. சில நாட்கள் முன்னதாக் விலைகள் சதத்தை தாண்டி விட்டன. இன்று இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 24 காசுகள் என்ற அளவிலும் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 22 காசுகள் என்ற அளவிலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இன்றைய  பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து 31 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.102.23ஆக விற்பனை செய்யப்படுகிறது.  அதே போன்று டீசல் விலையும் நேற்றைய விலையிலிருந்து 15 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ. 94.39 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் (Corona Virus) பரவலை தடுக்க கடந்த ஆண்டு மார்ச் இறுதியில் பொது முடக்கம்  அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் பெட்ரோல் டீசல் விலைகளில் மாற்றம் இல்லாமல் இருந்தது. அதன் பிறகு விலைகளில் தொடர்ந்து ஏற்ற இறக்கம் காணப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | RBI Employment: ரிசர்வ் வங்கியில் வேலை, ஒரு மணி நேரத்திற்கு 1000 ரூபாய் சம்பளம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News