7th Pay Commission: ஜூலை 2025 -க்கான அகவிலைப்படி அதிகரிப்பு ஜனவரி 2025 -இல் அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வை விட சிறப்பாக இருக்கும் என்று மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

7th Pay Commission DA Hike: ஜூலை மாதம் அறிவிக்கப்படவுள்ள டிஏ உயர்வு மிகவும் சிறப்பம்சம் வாய்ந்தது. ஏனெனில், 7வது ஊதியக் குழுவில் கடைசியாக அறிவிக்கப்படவுள்ள அகவிலைப்படி திருத்தமாக இது இருக்கும். 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் டிசம்பர் 2025 உடன் நிறைவடையும் நிலையில், ஜனவரி 2026 முதல் 8வது ஊதியக்குழு அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Dearness Allowance: அகவிலைப்படி அதிகரிப்பு
ஜூலை 2025 -க்கான அகவிலைப்படி அதிகரிப்பு ஜனவரி 2025 -இல் அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வை விட சிறப்பாக இருக்கும் என்று மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். நடப்பு காலண்டர் ஆண்டின் முதல் பாதியில் அரசு அகவிலைப்படியை 2% உயர்த்தியுள்ளது. இதைத் தொடர்ந்து தற்போது, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி 55% ஆக உள்ளது. 7வது ஊதியக் குழு டிசம்பர் 31, 2025 அன்று அதன் பதவிக் காலத்தை நிறைவு செய்யும். எனவே தற்போதைய ஊதியக் குழுவில் ஜூலை மாத திருத்தமே கடைசி திருத்தமாக இருக்கும்.
Central Government Employees: சிறந்த அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்கள்
2025 ஆம் ஆண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கான இரண்டாம் தவணை அகவிலைப்படி ஜூலை 1, 2025 முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இருப்பினும், இந்த அறிவிப்பு வழக்கமாக அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் வரக்கூடும்.
AICPI-IW: அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு
இதற்கிடையில், தொழில்துறை தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு (AICPI-IW) ஏப்ரல் மாதத்தில் 0.5 புள்ளிகள் உயர்வைப் பதிவு செய்துள்ளது. இது ஊழியர்களுக்கு நல்ல டிஏ உயர்வுக்கான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
ஏப்ரல் 2025 இல் AICPI-IW குறியீடு 143.5 ஆக உயர்ந்தது. முக்கியமான விஷயம் என்னவென்றால், குறியீடு தொடர்ந்து இரண்டாவது மாதமாக அதிகரித்து வருகின்றது.
முன்னதாக, இந்த குறியீடு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் குறைந்தது. "ஏப்ரல் 2025 க்கான அகில இந்திய CPI-IW 0.5 புள்ளிகள் அதிகரித்து 143.5 ஆக இருந்தது," என்று தொழிலாளர் பணியகம் மே 30, 2025 தேதியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
மார்ச் மாதத்தில், AICPI-IW குறியீடு 0.2 புள்ளிகள் அதிகரித்து 143.0 ஆக இருந்தது. ஜனவரி மாதத்தின் 143.2 ஐ விட இது சற்று குறைவாக இருந்தாலும், அகவிலைப்படி உயர்வைப் பொறுத்தவரை இது ஒரு நேர்மறையான அறிகுறியாக பார்க்கப்பட்டது. ஏனெனில் இதற்கு முன்பு நவம்பர் 2024 க்குப் பிறகு AICPI-IW அடிப்படையில் பணவீக்க எண்ணிக்கையில் தொடர்ச்சியான சரிவு காணப்பட்டது. மேலும் இது பிப்ரவரி 2025 வரை தொடர்ந்தது.
DA Hike: மே மற்றும் ஜூன் CPI-IW எண்கள் மத்திய அரசு ஊழியர்களின் ஜூலை டிஏ உயர்வை தீர்மானிக்கும்
கடந்த இரண்டு மாதங்களில், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் AICPI-IW இல் ஏற்பட்ட இந்த உயர்வு, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான எதிர்பார்க்கப்படும் அகவிலைப்படி/அடைப்பு நிவாரணம் (DA/DR) சுமார் 57.95% ஆக இருக்கலாம் என்பதைக் குறிக்கிறது. அதாவது ஜூலை 2025 முதல் அகவிலைப்படியில் 3% உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது.
இருப்பினும், அடுத்த இரண்டு மாதங்களில் குறியீட்டில் எவ்வளவு அதிகரிப்பு அல்லது குறைவு ஏற்படுகின்றது என்பதைப் பார்க்க வேண்டும். மீதமுள்ள இரண்டு மாதங்களுக்கான CPI-IW குறியீடு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலியப்படி எவ்வளவு உயரும் என்பதை தீர்மானிக்கும்.
Salary Hike: ஊதியௌயர்வு எவ்வளவு
சம்பள உயர்வு எவ்வளவு இருக்கும்? ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.18,000 என்றால், அகவிலைப்படி 2% அதிகரித்து மொத்த டிஏ 57% ஆக அதிகரித்தால், அகவிலைப்படி தொகை ரூ.10,260 ஆக உயரும். அகவிலைப்படி 58% ஆக அதிகரித்தால், அகவிலைப்படி தொகை ரூ.10,440 ஆக உயரும்.
Inflation Data: பணவீக்க தரவு விவரங்கள்
பணவீக்க விகிதம் ஏப்ரல் 2025 இல் 2.94% ஆக சற்று குறைந்துள்ளது. இது முந்தைய மாதத்தில் அதாவது மார்ச் மாதத்தில் 2.95% ஆக இருந்தது. ஆண்டு அடிப்படையில், ஏப்ரல் 2025 க்கான பணவீக்க விகிதம் 2.94% ஆகவும், ஏப்ரல் 2024 இல் 3.87% ஆகவும் இருந்தது.
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் வரும் தொழிலாளர் பணியகம், நாட்டின் 88 முக்கிய தொழில்துறை மையங்களில் பரவியுள்ள 317 சந்தைகளில் இருந்து சில்லறை விலைகளை சேகரித்து, தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டை ஒவ்வொரு மாதமும் வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தரவுகளின்படி, ஏப்ரல் 2025 இல், உணவுப் பொருட்கள், உடைகள்-காலணிகள், எரிபொருள்-விளக்கு மற்றும் வெற்றிலை, புகையிலை ஆகியவற்றின் குறியீடுகளில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
உணவுப் பொருட்களின் குறியீடு மார்ச் 2025 இல் 146.2 இலிருந்து ஏப்ரல் மாதத்தில் 146.5 ஆக அதிகரித்துள்ளது.
துணிகள் மற்றும் காலணிகளின் குறியீடு 149.4 இலிருந்து 150.4 ஆக அதிகரித்துள்ளது.
எரிபொருள் மற்றும் மின்விளக்கு குறியீடு 148.5 இலிருந்து 153.4 ஆக அதிகரித்துள்ளது.
வெற்றிலை, புகையிலை போன்ற பொருட்களின் குறியீடும் 164.8 இலிருந்து 165.8 ஆக அதிகரித்துள்ளது.
AICPI-IW தரவுகளின் அடிப்படையில், மத்திய அரசு, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி விகிதத்தை தீர்மானிக்கிறது. இந்த கணக்கீடு ஏழாவது சம்பளக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் செய்யப்படுகிறது.
மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் குறியீட்டில் ஏற்பட்ட நிலையான உயர்வு, அகவிலைப்படி அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை வலுப்படுத்தியுள்ளது. இருப்பினும், இறுதி முடிவு அரசாங்கத்திடம் உள்ளது. பொதுவாக, அகவிலைப்படி ஆண்டுக்கு இரண்டு முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் திருத்தப்படுகின்றது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ