)
7th Pay Commission DA Hike: மத்திய அரசின் சுமார் 1 கோடி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய செய்தி வரவிருக்கிறது. 7வது சம்பளக் குழுவின் கீழ் கடைசி சம்பள உயர்வை ஊழியர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஜூலை 2025க்கான அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரண (DR) அதிகரிப்பை அரசாங்கம் விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உயர்வு ஜூலை முதல் அமலுக்கு வரும். எனினும், இதற்கான அறிவிப்பும் கூடுதல் தொகையும் வழக்கமாக அக்டோபர் மாதத்திற்குள் வந்து சேரும்.
- ஜூலை மாத அகவிலைப்படி உயர்வு, 7வது ஊதியக் குழுவின் கீழ் செய்யப்படவுள்ள கடைசி ஊதிய உயர்வாக இருக்கும்.
- ஆகையால், ஊழியர்களை மகிழ்விக்கும் வகையில் இந்த டிஏ உயர்வு இருக்கும் என நம்பப்படுகின்றது.
- 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் ஜனவரி 2016 இல் அமலுக்கு வந்தன. இவை 2025 டிசம்பரில் நிறைவடையும்.
- இது சுமார் 33 லட்சம் ஊழியர்களையும் 66 லட்சம் ஓய்வூதியதாரர்களையும் உள்ளடக்கியது.
- முன்னதாக, இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அரசாங்கம் அகவிலைப்படியை 2% அதிகரித்தது.
- இதைத் தொடர்ந்து ஜனவரி 2025 முதல், அகவிலைப்படி 53% இலிருந்து 55% ஆக அதிகரித்தது.
- பணவீக்கத்தின் விளைவைக் குறைப்பதே அகவிலைப்படி திருத்தத்தின் நோக்கமாகும்.
- அகவிலைப்படி என்பது அரசு ஊழியரின் சம்பளத்தின் ஒரு முக்கிய பகுதியாக உள்ளது.
- இன்னும் சில மாதங்களில் 8வது ஊதியக்குழு அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
- புதிய சம்பளக் குழு செயல்படுத்தப்படும்போது, குறியீட்டு அடிப்படை மாறுவதால், வழக்கமாக அகவிலைப்படி பூஜ்ஜியத்திற்கு ரீசெட் செய்யப்படுகிறது.
- உதாரணமாக, 2016 இல் 7வது சம்பளக் குழுவிற்கு முன்பு, டிஏ அடிப்படை ஊதியத்தில் 125% ஐ எட்டியது.
- 7வது சம்பளக் குழு முடிவதற்கு முன்பு டிஏ 60% ஆக உயர்ந்தால், புதிய கட்டமைப்பின் கீழ் சம்பளம் சுமார் 14% அதிகரிக்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
- ஆனால் கடந்த நான்கு சம்பளக் குழுக்களுடன் ஒப்பிடும்போது இது மிக மந்தமான சம்பள உயர்வாக இருக்கும்.
- அகவிலைப்படி அதிகரிப்பு தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டை (CPI-IW) பயன்படுத்தி கணக்கிடப்படுகிறது.
- CPI-IW நிலையான பொருட்கள் மற்றும் சேவைகளின் அடிப்படையில் மாதாந்திர சில்லறை விலை மாற்றங்களைக் கண்காணிக்கிறது.
- 7வது ஊதியக் குழுவின் கீழ் அகவிலைப்படியை கணக்கிட ஒரு குறிப்பிட்ட சூத்திரம் பயன்படுத்தப்படுகின்றது.
- அகவிலைப்படி (%) = [{12 மாத AICPI-IW (அடிப்படை 2001) – 261.42} ÷ 261.42] x 100
- வழக்கமாக, கடந்த ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான AICPI குறியீட்டு எண்களின் அடிப்படையில் ஜனவரி மாத அகவிலைப்படி உயர்வும், ஜனவரி முதல் ஜூன் வரையிலான AICPI குறியீட்டு எண்களின் அடிப்படையில் ஜூலை மாத அகவிலைப்படி உயர்வும் தீர்மானிக்கப்படுகின்றன.
- பொதுவாக கடந்த மாதத்தின் AICPI எண்கள் அடுத்த மாத கடைசி நாளில் வெளியிடப்படும்.
- இன்று ஜூலை மாதத்தின் கடைசி நாள் என்பதால், இன்று ஜூன மாத AICPI தரவு வெளியிடப்படும் என எதிர்பார்க்கபடுகின்றது.
- இன்று வரவுள்ள தரவுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. ஏனெனில், இதன் அடிப்படையில்தான் ஜூலை முதலான டிஏ உயர்வு தீர்மானிக்கப்படும்.
- ஜனவரி முதல் மே மாதம் வரையிலான AICPI தரவுகள் இந்த வகையில் உள்ளன:
ஜனவரி 025: குறியீட்டு எண்ணிக்கை - 143.2, 56.39%
பிப்ரவரி 2025: குறியீட்டு எண்ணிக்கை - 142.8, அகவிலைப்படி - 56.72%
மார்ச் 2025: குறியீட்டு எண்ணிக்கை - 143.0, அகவிலைப்படி - 57.09%
ஏப்ரல் 2025: குறியீட்டு எண்ணிக்கை - 143.5, அகவிலைப்படி - 57.47%
மே 2025: குறியீட்டு எண்ணிக்கை - 144.0, அகவிலைப்படி - 57.85%
ஜூன் 2025: குறியீட்டு எண்ணிக்கை - (தரவு இன்னும் வரவில்லை)
- மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் அகவிலை நிவாரணம் ஆகியவற்றின் முக்கிய நோக்கம் விலைவாசி உயர்வின் தாக்கத்தைக் குறைப்பதாகும்.
- பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், டிஏ அதிகரிப்பு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தங்கள் வருமானத்தை சரியான முறையில் பராமரிக்க உதவுகிறது.
- ஜூலை மாதத்திற்கான உயர்வுக்கான பணம் பொதுவாக அக்டோபர் மாதத்திற்குள் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும்.
- இதுவரை கிடைத்துள்ள AICPI தரவுகளின் அடிப்படையில், டிஏ 3%-4% உயர வாய்ப்புள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
- டிஏ 3% அதிகரித்தால், மொத்த அகவிலைப்படி 55% ஆக உயரும். டிஏ 4% அதிகரித்தால், மொத்த அகவிலைப்படி 56% ஆக உயரும்.
- டிஏ உயர்வு ஊதியத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை ஏற்படுத்தும்.
டிஏ உயர்வு அப்டேட்ஸ் சுருக்கமாக....
- ஜூலை மாத அகவிலைப்படி உயர்வுக்காக மத்திய அரசு ஊழியர்கள் ஆவலுடன் காத்திருகிறார்கள்.
- இது 7வது ஊதியக்குழுவின் கடைசி அகவிலைப்படி உயர்வு என்பதால் கணிசமான உயர்வு எதிர்பார்க்கப்படுகின்றது.
- டிஏ உயர்வு ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதிய உயர்வுக்கு வழிவகுக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ