)
DA Arrears Latest News: கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட டிஎ அரியர் தொகைக்காக மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் நீண்ட நாட்களாக காத்திருக்கிறார்கள். கொரோனா வைரஸ் தொற்றுநோய் காலத்தில் மத்திய அரசு, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை முடக்கியது. முடக்கப்பட்ட தொகை இன்னும் அளிக்கப்படவில்லை. ஊழியர்கள் தொடர்ந்து அதைக் கோரி வருகின்றனர்.
கோவிட் காலத்தில் முடக்கப்பட்ட 18 மாத டிஏ அரியர் தொகை வருமா, வராதா? இது குறித்த லேட்டஸ்ட் அப்டேட் என்ன? டிஏ நிலுவைத்தொகை தொடர்பான சமீபத்திய அப்டேட்டை இந்த பதிவில் காணலாம்.
முன்னதாக, நிலுவையில் உள்ள 18 மாத டிஏ அரியர் தொகை கண்டிப்பாக கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், மத்திய அரசு இன்னும் இது குறித்து எந்த அப்டேட்டையும் கொடுக்கவில்லை. இப்போது மத்திய ஊழியர்களின் நம்பிக்கையும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.
மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் நீண்ட நாட்களாக டிஏ அரியர் தொகையை மத்திய அரசிடம் கோரி வருகின்றனர். உழியர் சங்கங்களும் பலமுறை இந்த கோரிக்கையை அரசிடம் வைத்துள்ளன. ஆனால், மத்திய அரசு இதற்கு ஒரு சாதகமான பதிலை இன்னும் அளிக்கவில்லை.
சமீபத்தில், நாடாளுமன்ற கூட்டத்தோரில் 18 மாத டிஏ அரியர் தொகை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த மத்திய அரசு 18 மாத டிஏ அரியர் தொகையை வழங்கும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என தெரிவித்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு, மக்களவை அமர்வில், நிதி அமைச்சகத்தின் இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, எம்பி ஆனந்த் படோரியாவின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக இதை மீண்டும் வலியுறுத்தினார். கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில் நிதிச் சுமையைக் குறைக்க இந்த நடவடிக்கையை எடுக்க முடிவு செய்யப்பட்டதாக பங்கஜ் சவுத்ரி கூறினார். முடக்கப்பட மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி தொகை நலிந்த பிரிவு மக்களுக்க்கான நலப்பணிகளில் பயன்படுத்தப்பட்டதாக அவர் கூறினார். முடக்கப்பட்ட பணம் முழுதும் அப்போது உருவான அசாதாரண சூழலால் அதிகம் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பயன்படுத்தப்பட்டதால், அந்த நிலுவைத் தொகையை செலுத்துவது குறித்து அரசாங்கம் தற்போது பரிசீலிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
- கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில் ஜனவரி 1, 2020 முதல் ஜூன் 30, 2021 வரை மத்திய அரசு ஊழியர்களுகான அகவிலைப்படி முடக்கப்பட்டது.
- அதன் பின் வழக்கம் போல் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகின்றது.
- எனினும், முடக்கப்பட்ட அகவிலைப்படியில் 18 மாத டிஏ அரியர் தொகை இன்னும் வழங்கப்படவில்லை.
- ஊழியர்கள் நீண்ட காலமாக 18 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகையை கோரி வருகின்றனர்.
- ஆனால் அது அரசாங்கத்தால் தெளிவாக மறுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு விரைவில் அகவிலைப்படியை அதிகரிக்கக்கூடும். இந்த முறை மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. இதன் பிறகு, மொத்த அகவிலைப்படி 58 சதவீதமாக அதிகரிக்கலாம். தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 55 சதவீத அகவிலைப்படியைப் பெறுகின்றனர். இந்த டிஏ உயர்வு விகிதங்கள் ஜூலை 1, 2025 முதல் அமலுக்கு வரும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ