)
மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையிலான FD திட்டங்களை நிலையான வைப்புத்தொகை (FDs) மூத்த குடிமக்களுக்குப் பாதுகாப்பான மற்றும் உறுதியான வருமானத்தை வழங்குவதால், அவர்களுக்கு விருப்பமான முதலீட்டுத் தேர்வாகத் தொடர்கிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) கொள்கைகள் மற்றும் சந்தை இயக்கவியலால் வட்டி விகிதங்கள் பாதிக்கப்படுவதால், பல வங்கிகள் மூத்த குடிமக்களுக்கு மிகவும் கவர்ச்சிகரமான விதிமுறைகளை வழங்க போட்டியிடுகின்றன. அதிலும் சிறு நிதி வங்க்கிகள் சீறந்த வட்டியை தருகின்றன
மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்புத்தொகைகள்
மூன்று ஆண்டு நிலையான வைப்புத்தொகைளுக்கு (ரூ. 1 கோடி வரையிலான வைப்பு தொகைகளுக்கு) 15 வங்கிகள் வழங்கும் சிறந்த வட்டி விகிதங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. மூத்த குடிமக்களுக்கான FD திட்டங்களுக்கு கிடைக்கும் வருமானத்தை புரிந்து கொள்ள, ரூ. 1 லட்சம் முதலீடு எவ்வாறு வளர்கிறது என்ற கணக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது. வணிக தகவல்களை வழங்கும் பைசாபஜார் தளத்தில் இருந்த தரவுகள் இங்கே தொகுக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.
உத்கர்ஷ் சிறு நிதி வங்கி (Utkarsh Small Finance Bank)
மூன்று ஆண்டு காலத்திற்கான நிலையான வைப்புத்தொகைகளுக்கு உத்கர்ஷ் சிறு நிதி வங்கி மூத்த குடிமக்களுக்கு 8.5 சதவீதத்தை வழங்குகிறது. சிறு நிதி வங்கிகளில், இது சிறந்த வட்டி விகிதத்தை வழங்கும் நிறுவனமாகும். மூன்று ஆண்டுகளில், ரூ. 1 லட்சம் நிலையான வைப்புத்தொகை ரூ. 1.26 லட்சமாக வளரும்.
ஜனா சிறு நிதி வங்கி (Jana Small Finance Bank)
ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி மூன்று ஆண்டு காலத்திற்கான நிலையான வைப்புத்தொகைகளுக்கு 8.25 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. ஒரு மூத்த குடிமகன் ரூ. 1 லட்சம் முதலீடு செய்தால், அது முதிர்ச்சியின் போது அது ரூ. 1.25 லட்சமாக வளரும்.
சூர்யோதய் சிறு நிதி வங்கி (Suryoday Small Finance Bank)
சூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி மூன்று ஆண்டு காலத்திற்கான நிலையான வைப்புத்தொகைகளுக்கு 8.15 சதவீத வட்டியை வழங்குகிறது. இங்கு ரூ. 1 லட்சம் வைப்புத்தொகை முதிர்ச்சியின் போது ரூ. 1.24 லட்சமாக வளர்ந்திருக்கும்.
யெஸ் வங்கி (Yes Bank)
யெஸ் வங்கி மூத்த குடிமக்களுக்கான மூன்று வருட நிலையான வைப்புத்தொகைகளுக்கு 7.85 சதவீத வட்டியை வழங்குகிறது. ரூ. 1 லட்சம் முதலீடு முதிர்ச்சியின் போது சுமார் ரூ. 1.23 லட்சமாக வளர்ந்திருக்கும்.
பந்தன் வங்கி (Bandhan Bank)
பந்தன் வங்கி, ஈக்விடாஸ் சிறு நிதி வங்கி மற்றும் யூனிட்டி சிறு நிதி வங்கி ஆகியவை மூத்த குடிமக்களுக்கான மூன்று வருட நிரந்தர வைப்பு நிதிக்கு 7.75 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகின்றன. அதாவது ரூ.1 லட்சம் முதலீடு முதிர்ச்சியில் சுமார் ரூ.1.23 லட்சமாக வளர்ந்திருக்கும்.
உஜ்ஜீவன் சிறு நிதி வங்கி (Ujjivan Small Finance Bank)
உஜ்ஜீவன் சிறு நிதி வங்கி மற்றும் ஆர்.பி.எல் வங்கி மூத்த குடிமக்களுக்கான மூன்று வருட நிரந்தர வைப்பு நிதிக்கு 7.70 சதவீத வட்டியை வழங்குகின்றன. இங்கே, ரூ.1 லட்சம் முதலீடு முதிர்ச்சியில் ரூ.1.23 லட்சமாக வளர்ந்திருக்கும்.
ஏயூ சிறு நிதி வங்கி (AU Small finance Bank)
ஏயூ சிறு நிதி வங்கி 7.6 சதவீதத்தை வழங்குகிறது. இதில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், அது முதிர்ச்சியில் ரூ.1.23 லட்சமாக வளர்ந்திருக்கும்.
எஸ்.பி.எம் வங்கி (SBM Bank)
எஸ்.பி.எம் வங்கி இந்தியா அத்தகைய மூத்த குடிமக்களுக்கான நிரந்தர வைப்பு நிதிகளுக்கு 7.55 சதவீதத்தை வழங்குகிறது. நீங்கள் இங்கு ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், அது முதிர்ச்சியில் சுமார் ரூ.1.23 லட்சமாக வளர்ந்திருக்கும்.
இண்டஸ்இண்ட் வங்கி (IndusInd Bank)
இண்டஸ்இண்ட் வங்கி அதே கால அளவுள்ள நிலையான வைப்புத்தொகைகளுக்கு 7.50 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. நீங்கள் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், அது முதிர்ச்சியில் சுமார் ரூ.1.23 லட்சமாக வளர்ந்திருக்கும்.
டிசிபி வங்கி (DCB Bank)
டிசிபி வங்கி, IDFC ஃபர்ஸ்ட் வங்கி மற்றும் ஜம்மு & காஷ்மீர் வங்கி ஆகியவை 7.25 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகின்றன. அதாவது ரூ.1 லட்சம் முதலீடு முதிர்ச்சியில் சுமார் ரூ.1.22 லட்சமாக வளர்ந்திருக்கும்.
டிஐசிஜிசி (DICGC)
ரிசர்வ் வங்கியின் துணை நிறுவனமான வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகம் (டிஐசிஜிசி), ரூ.5 லட்சம் வரையிலான நிலையான வைப்புத்தொகைகளுக்கான் உத்திரவாதத்தை அளித்து, முதலீட்டிற்கான பாதுகாப்பை உறுதி செய்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ