கடந்த ஓராண்டாக பங்குச்சந்தையில் காணப்படும் சரிவு, மியூச்சுவல் ஃபண்டுகளையும் பாதித்துள்ளது. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உச்சத்தில் இருந்து சிறிது கீழே இறங்கியுள்ளதால், கடந்த ஒரு வருடத்தில் முதலீட்டாளர்களுக்கு 10 முதல் 15 சதவிகிதம் நஷ்டத்தை அளித்த, ஈக்விட்டி ஃபண்டுகள் குறித்து இந்த பதிவில் காணலாம். நஷ்டங்களை கொடுத்த ஈக்விட்டி திட்டங்களில் (ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள்) சர்வதேச சந்தைகளில் இருந்து ETF நிதிகள் மற்றும் துறைசார் நிதிகளுக்கு கவனம் செலுத்தும் நிதிகள் ஆகியவை அடங்கும்.
ஈக்விட்டி திட்டங்களில் கடந்த ஒரு வருடத்தில் 10%க்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்திய நிதியங்கள்
ஒரு வருடத்தில் 10 சதவீதத்திற்கும் அதிகமாக இழந்த ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளின் பட்டியலில் HDFC மியூச்சுவல் ஃபண்ட், ஐசிஐசிஐ புருடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட், நிப்பான் இந்தியா மற்றும் கோடக் மஹிந்திரா மியூச்சுவல் ஃபண்ட் போன்ற பெரிய நிதி நிறுவனங்களின் ஃபண்டுகளும் அடங்கும்.
ஈக்விட்டி திட்டத்தின் பெயரும், ஒரு ஆண்டின் வருமானமும்
Samco Flexi Cap Fund (Direct Plan) : -15.19%
DSP Global Clean Energy Fund of Fund (Direct Plan) : -12.26%
Nippon India Taiwan Equity (Direct Plan) : -11.77%
HSBC Brazil Fund (Direct Plan) : -11.30%
Kotak Nifty PSU Bank ETF : -10.40%
Nippon India ETF Nifty PSU Bank BeES : -10.38%
DSP Nifty PSU Bank ETF : -10.28%
ICICI Prudential Nifty PSU Bank ETF : -10.28%
HDFC NIFTY PSU BANK ETF : -10.24%
(ஆதாரம் : Value Research, AMFI)
நஷ்டத்தை கொடுத்த 71 ஈக்விட்டி ஃபண்டுகள்
வேல்யூ ரிசர்ச் வெளியிட்டுள்ள தரவுகளில், குறிப்பிட்டுள்ள 9 ஃபண்டுகள் மட்டுமல்ல, கடந்த ஒரு வருடத்தில் 71 ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் நஷ்டத்தை கொடுத்துள்ளன. கடந்த ஆண்டு ஈக்விட்டி ஃபண்டுகளுக்கு எவ்வளவு போதாத கலாமாக இருந்தது என்பதை நஷ்டம் தரும் திட்டங்களின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. ஆனால் அதற்கான முதலீட்டாளர்கள் கலக்கம் அடையத் தேவையில்லை. நீண்ட கால முதலீட்டில் நிச்சயம் நல்ல வருமானம் கிடைக்கும். ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்யும் போது, குறைந்தது 5 வருடங்கள் அல்லது அதற்கு மேல் செய்யப்பட வேண்டும். 5 ஆண்டுகளின் தரவைப் பார்த்தால், எந்த ஒரு ஃபண்டிலும்,சராசரியாக 12% முதல் 15% வருமனாம் இருக்கும்.
கடந்த கால வருமானத்தை மட்டும் வைத்து முடிவுகளை எடுப்பது தவறு
முதலீட்டு முடிவுகளை எடுக்கும்போது, ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளின் கடந்தகால வருமானம் வரும் நாட்களில் தொடரும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதையும் முதலீட்டாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது நேர்மறை மற்றும் எதிர்மறை வருவாய் இரண்டிற்கும் பொருந்தும். எனவே, ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்வது பற்றி முடிவெடுக்கும் போது, கடந்தகால வருமானத்தை மட்டும் மனதில் கொள்ளாமல், திட்டத்தின் முதலீட்டு உத்தி முதல் உங்களின் ரிஸ்க் எடுக்கும் திறன் மற்றும் முதலீட்டு எல்லை வரை பல விஷயங்களை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | SWP: ஓய்வுக்கு பிறகு மாதம் ரூ.1 லட்சம் வருமானம் கிடைக்க உதவும் பரஸ்பர நிதியம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









