LPG Gas Cylinder Rate: ஏப்ரல் மாதம் முதல் நாளே மக்களுக்கு ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது. அரசு எண்ணெய் நிறுவனங்கள் ஏப்ரல் 1, 2025 முதல் 19 கிலோ வணிக சிலிண்டரின் விலையை குறைத்துள்ளன. 19 கிலோ வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர்களின் விலை ரூ.41 குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலைகள் செவ்வாய்க்கிழமை, அதாவது இன்று முதல் அமலுக்கு வருகின்றன.
இன்று செய்யப்பட்ட விலை குறைப்பிற்கு பிறகு, புதுதில்லியில் 19 கிலோ வணிக எல்பிஜி சிலிண்டரின் சில்லறை விற்பனை விலை ரூ.1762 ஆக குறைந்துள்ளது. முன்னதாக, மார்ச் மாதம் வளிக ரீதியான சிலிண்டர் விலைகள் அதிகரித்தன. அதற்கு முன், பிப்ரவரி 1 ஆம் தேதி, வணிக எல்பிஜி சிலிண்டர்களின் விலை ரூ.7 குறைக்கப்பட்டது.
LPG Commercial Cylinder: வர்த்தக ரீதியான எல்பிஜி சிலிண்டர் விலை
சென்னையில் சிலிண்டர் விலை ரூ.1965.50 -இலிருந்து ரூ.1924.50 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் சிலிண்டர் விலை ரூ.1,803 -இலிருந்து ரூ.1.762 ஆக உயர்ந்துள்ளது. கொல்கத்தாவில் முன்னர் ரூ.1913 ஆக இருந்த விலை இப்போது ரூ.1872 ஆக உயர்ந்துள்ளது. மும்பையில் முன்னர் ரூ.1,755.50 ஆக இருந்த சிலிண்டர் விலை இப்போது ரூ.1,714.50 ஆக உள்ளது.
LPG Domestic Cylinder: வீவீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலை
ஆகஸ்ட் 1, 2024 முதல் வீட்டு உபயோக 14 கிலோ எல்பிஜி எரிவாயு சிலிண்டர் விலைகள் மாறாமல் அப்படியே உள்ளன. டெல்லியில், 14 கிலோ வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் பழைய விலையான ரூ.803 இலேயே கிடைக்கும். சென்னையில், இந்த சிலிண்டரின் விலை ரூ.818.50 ஆக உள்ளது. மும்பையில், வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.802.50 ஆகவும், கொல்கத்தாவில், இது ரூ.829 ஆகவும் உள்ளது.
எல்பிஜி சிலிண்டர் விலை
எண்ணெய் நிறுவனங்கள் உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகளில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் பிற காரணிகளின் அடிப்படையில் எல்பிஜி விலைகளை தொடர்ந்து திருத்தி வருகின்றன. வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர்களின் விலைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த விலை திருத்தம் உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் தினசரி நடவடிக்கைகளுக்கு வணிக ரீதியான சிலிண்டர்களைப் பயன்படுத்தும் பிற வணிக நிறுவனங்களுக்கு நேரடி நன்மைகளை அளிக்கும். வணிக ரீதியான எல்பிஜி விலைகள் அதிகரித்த போதிலும், வீட்டு எல்பிஜி சிலிண்டர் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை. இது பொதுமக்களுக்கு ஓரளவு நிவாரணம் அளிக்கிறது.
உள்ளூர் வரிகள் மற்றும் போக்குவரத்து செலவுகளைப் பொறுத்து எல்பிஜி விலைகள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்.
மேலும் படிக்க | கிரெடிட் கார்ட் முதல் வங்கி கணக்கு வரை! இன்று முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்!
மேலும் படிக்க | SIP Mutual Fund: ரூ.5000 முதலீட்டை... ரூ.6 கோடியாக பெருக்கும் 5x12x40 ஃபார்முலா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









