LPG Cylinder Price Hike: மார்ச் மாதம் முதல் நாளே மக்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி கிடைத்துள்ளது. ஹோலி மற்றும் ரம்ஜான் பண்டிகைக் காலத்தில் எல்பிஜி சிலிண்டரின் விலை அதிகரித்துள்ளது. அரசு எண்ணெய் நிறுவனங்கள் மார்ச் 1, 2025 முதல் 19 கிலோ வணிக சிலிண்டரின் விலையை அதிகரித்துள்ளன. பிப்ரவரி 1, 2025 அன்று ரூ.7 குறைந்த எல்பிஜி சிலிண்டரின் விலை, இன்று முதல் ரூ.6 அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்புடன், 19 கிலோ வணிக எரிவாயு சிலிண்டரின் விலை சென்னையில் ரூ.1959.50 -லிருந்து ரூ.1965 ஆக அதிகரித்துள்ளது.
முதல் தேதியன்று உயர்ந்த விலை
எல்பிஜி சிலிண்டர் மற்றும் வணிக எரிவாயு சிலிண்டரின் விலைகளை ஒவ்வொரு மாதமும் முதல் தேதி அரசு எண்ணெய் நிறுவனங்கள் மதிப்பாய்வு செய்கின்றன. ஒவ்வொரு மாதமும் முதல் தேதி விலை கூடுவதோ குறைவதோ இயல்பு. இந்த மாதம் ஹோலி மற்றும் ஈத் பண்டிகைகள் உள்ளன. இதனுடன், மார்ச் 2 ஆம் தேதி முதல் ரமலான் நோன்பும் தொடங்க உள்ளது. இதற்கிடையில், அரசாங்க எண்ணெய் நிறுவனங்கள் வணிக எல்பிஜி சிலிண்டர்களின் விலையை அதிகரித்துள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. 19 கிலோ எடையுள்ள சிலிண்டரின் விலை 6 ரூபாய் அதிகரித்துள்ளது.
LPG Commercial Cylinder: தற்போதைய விலை என்ன?
எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை போன்ற அனைத்து நகரங்களிலும் சிலிண்டர் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும். சென்னையில் சிலிண்டர் விலை ரூ.1959.50 -இலிருந்து ரூ.1965 ஆகதிகரித்துள்ளது. டெல்லியில் சிலிண்டர் விலை ரூ.1,797 -இலிருந்து ரூ.1.803 ஆக உயர்ந்துள்ளது. கொல்கத்தாவில் முனௌ ரூ.1907 ஆக இருந்த விலை இப்போது ரூ.1913 ஆக உயர்ந்துள்ளது. மும்பையில் வணிக எல்ப்பிஜி சிலிண்டர் விலை ரூ.1749.50 -லிருந்து ரூ.1755.50 ஆக அதிகரித்துள்ளது.
வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டரின் விலையில் நிறுவனங்கள் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. ஆகஸ்ட் 1, 2024 முதல் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த வித மாற்றமும் செய்யப்படாமல் அப்படியே தான் உள்ளது.
LPG Domestic Cylinder: வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள்
தற்போது, ஆகஸ்ட் 1, 2024 முதல் இருந்த விலையிலேயே வீட்டு உபயோக 14 கிலோ எல்பிஜி எரிவாயு சிலிண்டர் விலை உள்ளது. டெல்லியில், 14 கிலோ வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் பழைய விலையான ரூ.803 இலேயே கிடைக்கும். சென்னையில், இந்த சிலிண்டரின் விலை ரூ.818.50 ஆக உள்ளது. மும்பையில், வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.802.50 ஆகவும், கொல்கத்தாவில், இது ரூ.829 ஆகவும் உள்ளது.
எல்பிஜி சிலிண்டர் விலை
உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகளும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி விலைகள் தீர்மானிக்கப்படுவதற்கு முக்கிய காரணமாக உள்ளன. பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் எண்ணெய் நிறுவனங்களால் தினமும் திருத்தப்படுகின்றன. எல்பிஜி விலையில் மாதம் ஒரு முறை திருத்தம் செய்யப்படுகின்றது. எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் 1 ஆம் தேதி எல்பிஜி சிலிண்டர் விலைகளில் மாற்றங்களை செய்கின்றன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









