)
PM Ujjwala Yojana: எல்பிஜி சிலிண்டர் பயனர்களுக்கு ஒரு பெரிய செய்தி கிடைத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, 2025-26 நிதியாண்டில் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) பயனாளிகளுக்கு ஆண்டுக்கு 9 ரீ-ஃபில்களுக்கு (மற்றும் 5 கிலோ சிலிண்டருக்கு விகிதாசாரமாக) 14.2 கிலோ சிலிண்டருக்கு ரூ.300 மானியத்தை வழங்க நிர்ணயிக்கப்பட்ட இலக்குக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக, அரசாங்கம் ரூ.12,000 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், 10 கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகள் சாதாரண வாடிக்கையாளர்களை விட 300 ரூபாய் மலிவாக எல்பிஜி சிலிண்டர்களைப் பெறுகிறார்கள்.
Pradhan Mantri Ujjwala Yojana
பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலம் என்ன நன்மை கிடைக்கின்றது? ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். நாட்டின் தலைநகர் டெல்லியில், ஒரு சாதாரண வாடிக்கையாளருக்கு 14.2 கிலோ வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.853 ஆக உள்ளது. அதேசமயம், உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு ரூ.553க்கு ரூ.300 மானியத்துடன் எல்பிஜி சிலிண்டர்கள் வழங்கப்படுகின்றன. சிலிண்டரின் விலை ஒவ்வொரு மாநிலத்திலும் மாறுபடலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
PMUY திட்டம் எப்போது தொடங்கப்பட்டது?
பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா மே 2016 இல் தொடங்கப்பட்டது. மே 1 ஆம் தேதி, இந்தத் தொட்டம் ஒன்பது ஆண்டுகளை நிறைவு செய்தது. PMUY திட்டத்தின் பயனாளிகள், ஒரு வருடத்தில் அதிகபட்சமாக ஒன்பது ரீஃபில்களுக்கு 14.2 கிலோ எல்பிஜி சிலிண்டருக்கு ரூ.300 மானியத்தைப் பெறுவார்கள். மேலும் 5 கிலோ சிலிண்டருக்கு விகிதாசார நன்மை வழங்கப்படும்.
பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டம்: யாருக்கு நன்மை கிடைக்கும்?
- குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு LPG சிலிண்டர் மலிவு விலையில் வழங்கப்படுவதை உறுதி செய்வதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
- உலகளாவிய விலைகளில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும் நேரங்களிலும் நலிந்த பிரிவு மக்களுக்கு நிதி பளு ஏற்படாமல் எல்பிஜி சிலிண்டர்கள் கிடைக்க இந்த திட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.30,000 கோடி நிவாரணம்
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ‘மூன்று பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களுக்கு (OMCs) அரசாங்கம் ரூ.30,000 கோடி நிதியுதவி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்த பொதுத்துறை நிறுவனங்கள் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகும். தற்போதைய புவிசார் அரசியல் கண்ணோட்டத்தையும் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் உள்ள நிச்சயமற்ற தன்மைகளையும் கருத்தில் கொண்டு இந்த ஆதரவு வழங்கப்பட்டுள்ளது’ என கூறினார்.
பன்னிரண்டு தவணைகளில் இழப்பீடு
- பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தால் எண்ணெய் நிறுவனங்களிடையே இழப்பீடு விநியோகிக்கப்படும்.
- இழப்பீடு பன்னிரண்டு தவணைகளில் வழங்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
- அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையின்படி, 2024-25 முதல் எல்பிஜியின் சர்வதேச விலைகள் அதிகமாகவே உள்ளன.
- விலை ஏற்ற இறக்கங்களின் சுமையை நுகர் மிது விழுவதைத் தவிர்க்கும் நடவடிக்கைகளால் எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் பெரும் இழப்பைச் சந்தித்தன.
- இந்த இக்கடான சூழலிலும், எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் நாட்டில் மலிவு விலையில் உள்நாட்டு எல்பிஜியை தொடர்ந்து வழங்குவதை உறுதி செய்தன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ