LPG Price Hike: ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் போரைதான் இப்போது உலகே உன்னிப்பாக கவனித்துக்கொண்டு இருக்கின்றது. இந்த போரின் தாக்கம் இப்போது உங்கள் சமையலறையிலும் தெரியலாம். வரும் காலத்தில், நாட்டில் எல்பிஜி சிலிண்டர்களின் விலைகள் அதிகரிக்கக்கூடும். மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம் சிலிண்டர்களின் விலையில் நேரடியாகக் காணப்படும் என்கிறார்கள் நிபுணர்கள். ஏனெனில் மூன்றுக்கு இரண்டு என்ற விகிதத்தில் எல்பிஜி சிலிண்டர்கள் மேற்கு ஆசியாவிலிருந்து வருகின்றன.
Israel Iran War
சமீபத்தில், ஈரானின் அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா குறி வைத்து தாக்கியது. இதைத் தொடர்ந்து உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி செய்யும் பிராந்தியமான மேற்கு ஆசியாவிலிருந்து விநியோகம் நிறுத்தப்படும் என்ற அச்சம் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் அதிகரித்த எல்பிஜி பயன்பாடு
கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவில் எல்பிஜி பயன்பாடு இரு மடங்கிற்கும் அதிகமாகிவிட்டது. இப்போது எல்பிஜி சிலிண்டர்கள் 33 கோடி வீடுகளை சென்றடைந்துள்ளன. எல்பிஜி -யை ஊக்குவிக்க அரசாங்கம் தீட்டிய திட்டங்கள் காரணமாக இது சாத்தியமானது. ஆனால் இது இந்தியாவின் இறக்குமதி சார்பையும் அதிகரித்துள்ளது.
இதன் தரவு பின்வருமாறு:
- இந்தியாவில், எல்பிஜியில் சுமார் 66% வெளிநாட்டிலிருந்து வருகிறது,
- அதில் 95% சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மற்றும் கத்தார் போன்ற மேற்கு ஆசிய நாடுகளிலிருந்து வருகிறது.
- இந்தியாவில் 16 நாட்களுக்கு மட்டுமே நுகர்வுக்கான LPG சேமிப்பு உள்ளதாக பெட்ரோலிய அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
LPG சிலிண்டர் விலைகள் அதிகரிக்கும் என்ற அச்சம் ஏன்?
LPG மீதான இறக்குமதி சார்பு மற்றும் மத்திய கிழக்கில் புவிசார் அரசியல் பதற்றம் அதிகரித்து வருவது ஆகியவை இந்திய நுகர்வோருக்கு நேரடி கவலைக்குரிய விஷயங்களாக மாறியுள்ளன.
விநியோகச் சங்கிலியில் உள்ள பலவீனங்கள்
66% LPG வெளிநாட்டிலிருந்தும், அதில் 95% மேற்கு ஆசியாவின் ஒரு சில நாடுகளிலிருந்தும் வருவதால், அந்த பிராந்தியத்தில் ஏற்படும் பதற்றங்கள் இந்தியாவின் விநியோகச் சங்கிலியில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறன. முழு நீள போர் ஏற்பட்டாலோ, அந்த பிராந்தியத்தின் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டாலோ, அவை கப்பல் போக்குவரத்தை சீர்குலைக்கலாம். இதனால் LPG இந்தியாவை அடைவதற்கு தாமதமாகலாம். மேலும் இதனால் LPG விலையும் அதிகரிக்கலாம்.
குறைந்த இருப்பு
இந்தியாவில் 16 நாட்கள் மட்டுமே LPG நுகர்வு இருப்பு உள்ளது. இது மிகக் குறுகிய காலம். விநியோகத்தில் ஒரு பெரிய மற்றும் எதிர்பாராத இடையூறு ஏற்பட்டால், அதன் விளியவாக மிக விரைவாக ஒரு நெருக்கடி உருவாகக்கூடும். இது உள்நாட்டு பற்றாக்குறை மற்றும் கூர்மையான விலை உயர்வுகளுக்கு வழிவகுக்கும்.
பெட்ரோல் மற்றும் டீசல் மீது எந்த தாக்கமும் இருக்காது: காரணம் என்ன?
பெட்ரோல் மற்றும் டீசலை பொறுத்தவரை, இந்தியா மிகச் சிறந்த நிலையில் உள்ளது. இதில் எந்த பாதிப்பும் ஏற்படாது என பொருளாதார நிபுண்ரகள் கூறுகிறார்கள்.
ஏற்றுமதி செய்யும் நாடு
இந்தியா இரண்டையும் ஏற்றுமதி செய்யும் நாடு. அதாவது, நாம் உற்பத்தி செய்யும் பெட்ரோலில் 40% மற்றும் டீசலில் 30% ஏற்றுமதி செய்கிறோம். தேவைப்பட்டால், இந்த ஏற்றுமதி அளவை உள்நாட்டு சந்தைக்கு திருப்பிவிடலாம், இது உள் விநியோகத்தை பராமரிக்கும்.
போதுமான கச்சா எண்ணெய் இருப்பு
சுத்திகரிப்பு நிலையங்கள், குழாய்வழிகள், கப்பல்கள் மற்றும் தேசிய மூலோபாய பெட்ரோலிய இருப்பு (SPR) ஆகியவற்றில் 25 நாள் கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது. இது 16 நாள் LPG இருப்பை விட மிகவும் சிறந்த நிலையில் உள்ளது.
ஆனால், இஸ்ரேல்-ஈரான் பதற்றத்தின் மத்தியில், சுத்திகரிப்பு நிறுவனங்கள் பீதியால் அதிக கொள்முதலில் ஈடுபடுவதில்லை. ஏனெனில் விநியோக இடையூறு ஏற்படும் அபாயம் குறைவாக இருப்பதாக நிறுவனங்கள் கருதுகின்றன. இது மாற்று ஆதாரங்கள் மற்றும் விநியோகத்திற்கான உத்திகள் முதிர்ந்த சந்தை தளத்தை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது.
உள்நாட்டு எரிபொருள் விலை
எண்ணெய் விலை உயர்வு குறுகிய காலத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களின் லாபத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். ஆனால் பெட்ரோல் மற்றும் டீசலின் சில்லறை விலையில் மாற்றம் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு இல்லை. அரசு நடத்தும் எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் கடந்த 3 ஆண்டுகளாக பம்ப் விலையை நிலையாக வைத்திருக்கின்றன. மேலும் உலக சந்தையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும் இது தொடர்கின்றது. சர்வதேச சந்தையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் உள்நாட்டு எரிபொருள் விலையை கட்டுக்குள் வைத்திருக்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்பதை இது காட்டுகிறது.
மேலும் படிக்க | SIP Mutual Fund: 40 வயதிலேயே ரூ.2 கோடி கார்பஸ்... கை கொடுக்கும் பரஸ்பர நிதியம்
மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு ஜாக்பாட்: அடேங்கப்பா!! 50% ஊதிய உயர்வு, ஓய்வூதியத்தில் அதிரடி ஏற்றம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ