பல்வேறு இபிஎஃப் கணக்குகளை மர்ஜ் செய்வது எப்படி? தனியார் துறை ஊழியர்களுக்கு முக்கிய தகவல்

EPF Account Merging: முந்தைய நிறுவன இபிஎஃப் கணக்குடன் புதிய நிறுவன இபிஎஃப் கணக்கை இணைக்க முயற்சிக்கும்போது ஊழியர்கள் சில சவால்களை எதிர்கொள்கின்றனர். இணைப்பு செயல்முறைக்கான சில வழிகாட்டுதல்களை இங்கே காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 3, 2025, 02:19 PM IST
  • இபிஎஃப் சந்தாதாரர்களுக்கான செயல்முறை.
  • இபிஎஃப் கணக்குகளை இணைக்க முயற்சிக்கும்போது ஏற்படும் சவால்கள் என்ன?
  • இபிஎஃப் கணக்குகளை மர்ஜ் செய்வது எப்படி?
பல்வேறு இபிஎஃப் கணக்குகளை மர்ஜ் செய்வது எப்படி? தனியார் துறை ஊழியர்களுக்கு முக்கிய தகவல்

EPF Account Merging: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு முக்கிய செய்தி உள்ளது. இபிஎஃப் கணக்கில் மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்யும் அனைவரும் சில செயல்முறைகளை தெரிந்துகொள்ள வேண்டும். பிஎஃப் உறுப்பினர்கள் முக்கியமாக தெரிந்துகொள்ள வேண்டிய அப்படி ஒரு முக்கிய செயல்முறை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Add Zee News as a Preferred Source

Private Sector Employees: தனியார் துறை ஊழியர்களுக்கு உதவும் செயல்முறைகள்

தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் வருங்கால வைப்பு நிதி (PF) கணக்கைப் பற்றி முழுமையாக அறிந்திருப்பது மிகவும் முக்கியம். கார்ப்பரேட் துறையில் உள்ள தனிநபர்கள் அவ்வப்போது புதிய நிறுவனங்களுக்கு மாறுகிறார்கள். இதன் விளைவாக பணிச்சூழலில் மட்டுமல்ல, சம்பளம் மற்றும் இபிஎஃப் கணக்குகளிலும் (EPF Account) மாற்றங்கள் ஏற்படுகின்றன. எனினும், தேவையற்ற குழப்பங்களை குறைக்க, அனைத்து EPF கணக்குகளையும் இணைத்து ஒரே யுனிவர்சல் கணக்கு எண்ணைப் பராமரிப்பது நல்லது. இருப்பினும், ஊழியர்கள் எப்போதாவது பல்வேறு காரணங்களுக்காக பல UAN-களைக் கொண்டிருக்கலாம்.

EPF Account Merging: இபிஎஃப் கணக்குகளை இணைக்க முயற்சிக்கும்போது ஏற்படும் சவால்கள்

முந்தைய நிறுவன இபிஎஃப் கணக்குடன் புதிய நிறுவன இபிஎஃப் கணக்கை இணைக்க முயற்சிக்கும்போது ஊழியர்கள் சில சவால்களை எதிர்கொள்கின்றனர். இணைப்பு செயல்முறைக்கான சில வழிகாட்டுதல்களை இங்கே காணலாம்.

EPF Subscribers: இபிஎஃப் சந்தாதாரர்களுக்கான செயல்முறை

- தங்களிடம் இரண்டு UAN-கள் இருப்பவர்கள், முன்னர் ஒதுக்கப்பட்ட UAN-ஐ செயலிழக்கச் செய்ய ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பை (EPFO) தொடர்பு கொண்டு இதற்கான கோரிக்கையை விடுக்கலாம்.

- இந்த செயல்முறையைத் தொடங்க, ஊழியர்கள் தங்கள் தற்போதைய மற்றும் முந்தைய UAN-களைக் குறிப்பிட்டு uanepf@epfindia.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும். 

- சரிபார்ப்பு முடிந்ததும், முந்தைய UAN பிளாக் செய்யப்படும்.

- ஆக்டிவ்வாக உள்ள UAN செயல்பாட்டில் இருக்கும்.

Form 13: படிவம் 13 ஐ நிரப்ப வேண்டும்

பழைய UAN செயலிழக்கச் செய்யப்பட்டவுடன், செயலற்ற UAN இலிருந்து உங்கள் செயலில் உள்ள UAN க்கு நிதியை மாற்ற படிவம் 13 ஐ நிரப்ப வேண்டும். இந்தப் படிவத்தை அதிகாரப்பூர்வ EPFO ​​வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம். பழைய மற்றும் புதிய EPF கணக்குகள் பற்றிய விவரங்களை இங்கே உறுப்பினர்கள் வழங்க வேண்டும்.

படிவத்தை பூர்த்தி செய்த பிறகு, சரிபார்ப்பு நோக்கங்களுக்காக உங்கள் கையொப்பம் தேவைப்படும். நிரப்பப்பட்ட படிவத்தை உங்கள் தற்போதைய முதலாளி / நிறுவனத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த செயல்முறை இறுதி செய்யப்பட்டதும், உங்கள் UAN இணைப்பிற்கு தயாராக இருக்கும். EPFO ​​வலைத்தளத்திற்கு சென்று இணைப்பு, அதாவது மர்ஜரின் நிலையை நீங்கள் சரிபார்க்கலாம்.

மேலும் படிக்க | பரஸ்பர நிதியம் SIP vs STP... பங்குச் சந்தை சரிவின் போது கை கொடுக்கும் திட்டம் எது?

மேலும் படிக்க | EDLI Coverage: முக்கிய மாற்றங்களை செய்த EPFO, 20,000 குடும்பங்களுக்கு அதிகரித்த நன்மை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News