UPS: அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் அட்டகாசமான ஓய்வூதிய நன்மைகள், முழு லிஸ்ட் இதோ

UPS Latest News: மத்திய அரசு ஊழியர்களுக்கு UPS மூலம் கிடைக்கும் நன்மைகள் என்ன? இதன் பிரத்யேக பலன்கள் என்ன? இதன் மூலம் கூடுதலாக என்னென்ன வசதிகள் கிடைக்கும்? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 8, 2025, 11:16 AM IST
  • பணி ஓய்வின் போது மொத்த தொகை கிடைக்கும்.
  • அரசாங்கமும் பெரிய முதலீடுகளைச் செய்கிறது.
  • ஓய்வூதிய உத்தரவாதம் கிடைக்கிறது.
UPS: அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் அட்டகாசமான ஓய்வூதிய நன்மைகள், முழு லிஸ்ட் இதோ

Unified Pension Scheme: ஏப்ரல் 2025 முதல், மத்திய அரசு ஊழியர்களுக்கு சில முக்கிய திட்டங்கள் தொடங்கியுள்ளன. அவற்றில் முக்கியமானது ஓய்வூதியம் தொடர்பாக ஏற்பட்ட ஒரு முக்கியமான மாற்றமான ஒருங்கிணைந்த ஒய்வூதியத் திட்டம். ஏப்ரல் 1 முதல் நாட்டில் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், மத்திய அரசு ஊழியர்கள் புதிய மற்றும் சிறந்த ஓய்வூதிய விருப்பத்தைப் பெற்றுள்ளனர்.

Add Zee News as a Preferred Source

National Pension System: தேசிய ஓய்வூதிய அமைப்பின் உறுப்பினர்களுக்கு இது கிடைக்கும்

தேசிய ஓய்வூதிய முறையில் (NPS) ஏற்கனவே உள்ள ஊழியர்கள் விரும்பினால் இப்போது UPS-ல் சேரலாம். இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய அம்சம் என்னவென்றால், ஓய்வு பெற்ற பிறகு, ஊழியர்கள் உறுதிசெய்யப்பட்ட மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெறுவார்கள். இது அவர்களின் சராசரி சம்பளத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு UPS மூலம் கிடைக்கும் நன்மைகள் என்ன? இதன் பிரத்யேக பலன்கள் என்ன? இதன் மூலம் கூடுதலாக என்னென்ன வசதிகள் கிடைக்கும்? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Pension Guarantee: ஓய்வூதிய உத்தரவாதம்

UPS இன் மிகப்பெரிய நன்மை உறுதி செய்யப்பட்ட மாதாந்திர ஓய்வூதியம் ஆகும். ஒரு ஊழியர் 25 ஆண்டுகள் பணிபுரிந்திருந்தால், ஓய்வு பெற்ற பிறகு, கடைசி 12 மாதங்களுக்கான சராசரி அடிப்படை சம்பளத்தில் 50 சதவீதத்தை ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியமாகப் பெறலாம். உதாரணமாக, ஒருவரது அடிப்படை சம்பளம் ரூ.50,000 என்றால், அவருக்கு ரூ.25,000 ஓய்வூதியம் கிடைக்கும். ஒருவர் 10 முதல் 25 ஆண்டுகள் பணியாற்றியிருந்தாலும், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.10,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சந்தை நிலவரத்தைப் பொறுத்து வருமானம் இருக்கும் NPS போலன்றி, UPS ஊழியர்களுக்கு நிலைத்தன்மையை அளிக்கிறது.

Government Contribution: அரசாங்கமும் பெரிய முதலீடுகளைச் செய்கிறது.

ஊழியர்களின் எதிர்கால நிதி பாதுகாப்பு குறித்து குறித்து அரசாங்கம் தீவிரமாக உள்ளது. NPS-ல் அரசாங்கம் 14% பங்களிக்கும் நிலையில், இப்போது UPS-ல் அரசாங்கம் 18.5% வரை பங்களிக்கும். அதாவது ஊழியர்கள் 10% செலுத்துவார்கள், அரசாங்கம் 18.5% செலுத்தும். இந்தப் பங்களிப்பு மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதிய நிதியை வலுப்படுத்தும். அரசாங்க நம்பிக்கை மற்றும் முதலீட்டு சுதந்திரத்தின் சமநிலை, ஓய்வூதியத்தில் சமரசம் செய்ய விரும்பாதவர்களுக்கு UPS ஐ சரியான திட்டமாக்குகிறது.

பணி ஓய்வின் போது மொத்த தொகை

ஓய்வு பெறும் நேரத்தில், ஊழியர்களின் கடைசி சம்பளம் மற்றும் அகவிலைப்படியின் அடிப்படையில் ஒரு பெரிய தொகையை UPS ஊழியர்களுக்கு வழங்கும். உதாரணமாக, ரூ.50,000 அடிப்படை சம்பளம் மற்றும் 25 ஆண்டுகள் சேவையுடன், ரூ.12.5 லட்சம் வரை பெறலாம். இந்தத் தொகை வீட்டைப் புதுப்பித்தல், குழந்தைகளின் திருமணம் போன்ற பெரிய செலவுகளுக்கு உதவியாக இருக்கும். இதன் மூலம் யுபிஎஸ் -இல் மொத்த தொகை மற்றும் உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியம் என இரட்டைப் பலன்கள் கிடைக்கின்றன. 

Family Pension: குடும்ப ஓய்வூதியம்

UPS ஊழியர்களைப் பற்றி மட்டுமல்லாமல், அவர்களது குடும்பத்தைப் பற்றியும் அக்கறை கொண்டுள்ளது. ஒரு ஊழியர் ஓய்வு பெற்ற பிறகு இறந்துவிட்டால், அவரது வாழ்க்கைத் துணைக்கு ஓய்வூதியத்தில் 60 சதவீதம் கிடைக்கும். அதாவது ரூ.25,000 ஓய்வூதியத்தில், குடும்பத்திற்கு ரூ.15,000 தொடர்ந்து கிடைக்கும். இந்த வசதி OPS எனப்படும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை (Old Pension Scheme) ஒத்திருக்கிறது. ஆனால் UPS-ல் இது ஒரு உறுதியான சலுகையாக சேர்க்கப்பட்டுள்ளது. இது ஊழியர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவியை வழங்கும். ஊழியர் ஓய்வு பெறுவதற்கு முன்பு இறந்தாலும், இந்த சலுகை அவரது குடும்பத்திற்குக் கிடைக்கும்.

Dearness Relief: அகவிலை நிவாரணம்

வாழ்க்கைச் செலவுகள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகின்றன. அதற்கு ஏற்ப ஓய்வூதியமும் அதிகரிக்க வேண்டியது நியாயமே. UPS-ல் அகவிலைப்படி நிவாரண (DR) அமைப்பு உள்ளது. இது பணவீக்கத்திற்கு ஏற்ப ஊழியர்களின் ஓய்வூதியத்தை மேம்படுத்துகிறது. அதாவது, பணவீக்கம் அதிகரிக்கும் போது, ​​உங்கள் ஓய்வூதியமும் அதிகரிக்கும். NPS-ல் அத்தகைய நேரடிப் பலன் எதுவும் இல்லை. ஆனால், UPS-ல் நன்கு யோசித்துச் சேர்க்கப்பட்ட அம்சமாகும் இது.

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) "ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துதல்) விதிமுறைகள், 2025" என்ற புதிய விதிகளை அறிவித்துள்ளது. இந்தத் திட்டம் ஏற்கனவே NPS இன் கீழ் வரும் மத்திய அரசு ஊழியர்களுக்காகக் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் தற்போதைய ஊழியர்கள், புதிதாக சேர்க்கப்பட்ட ஊழியர்கள் மற்றும் தற்போது NPS இன் கீழ் இருக்கும் ஓய்வு பெற்ற ஊழியர்கள் அடங்குவர். NPS-ஐத் தேர்ந்தெடுத்த ஓய்வுபெற்ற ஊழியர் இறந்துவிட்டால், அவரது சட்டப்பூர்வமாக திருமணமான வாழ்க்கைத் துணையும் UPS-ன் பலன்களைப் பெறுவதற்கான உரிமையைப் பெறுவார்.

இந்த தேதி வரை UPS-க்கு விண்ணப்பிக்கலாம்.

UPS-இன் இந்தப் பலன்களைப் பெற விரும்பும் ஊழியர்கள் ஏப்ரல் 1, 2025 முதல் மூன்று மாதங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதாவது, ஜூன் 30, 2025க்குள் UPS-க்கு விண்ணப்பித்தால், நீங்களும் இந்தப் பலன்களைப் பெறத் தகுதி பெறலாம். புதிதாகப் பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள் பணியில் சேர்ந்த 30 நாட்களுக்குள் முடிவெடுக்க வேண்டும். அரசாங்கம் அவசியம் என்று கருதினால், இந்தக் காலக்கெடுவை நீட்டிக்கக்கூடும். இருப்பினும், UPS -ஐத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், அதை மாற்ற முடியாது. ஆகையால் கவனமாக முடிவெடுப்பது மிக அவசியமாகும்.

மேலும் படிக்க | EPF உறுப்பினர்களுக்கு முக்கிய செய்தி: பங்களிப்புகளை வசூலிக்க இனி 32 வங்கிகள், பட்டியல் இதோ

மேலும் படிக்க | முத்ரா கடன் திட்டம்... 52 கோடி பேருக்கு... ரூ.32.61 லட்சம் கோடி கடன்... நீங்களும் பலன் பெறலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News